ஹீமோகுளோபின் குறைபாடு உள்ளதா? இவற்றை குடித்தால் உடனே பலன் தெரியும்

Hemoglobin: பீட்ரூட் சாறு உங்கள் உடலில் இரும்புச்சத்து குறைபாட்டை பூர்த்தி செய்கிறது. இதை குடிப்பதால் இரத்த சிவப்பணுக்கள் அதிகரிக்கும். ஆக்ஸிஜன் சப்ளையும் நன்றாக உள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 11, 2023, 12:08 PM IST
  • உடலில் இரும்புச்சத்து குறைபாட்டை ஈடுசெய்ய கீரை மற்றும் புதினா சாற்றையும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
  • கத்தரிக்காய் ஹீமோகுளோபினை அதிகரிப்பதில் வியக்கத்தக்க வகையில் பயனுள்ளதாக இருக்கிறது.
  • வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த காய்கறி சாறுகளையும் குடிக்கலாம்.
ஹீமோகுளோபின் குறைபாடு உள்ளதா? இவற்றை குடித்தால் உடனே பலன் தெரியும் title=

ஹீமோகுளோபின் அதிகரிக்கும் பானங்கள்: ஒருவர் நல்ல உணவை உட்கொண்டாலும், அதில் இரும்புச்சத்து உள்ள பொருட்கள் சேர்க்கப்படவில்லை என்றால் உடலில் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. இதன் காரணமாக ஹீமோகுளோபின் அதாவது இரத்தமும் குறையத் தொடங்குகிறது. அத்தகைய சூழ்நிலையில், இரும்புச்சத்து நிறைந்த பானங்களை உட்கொள்வது உங்களுக்கு நன்மை பயக்கும். இந்த பானங்கள் இரத்தக் குறைபாட்டை நீக்கி உடலை ஆரோக்கியமாக வைக்கின்றன. 
 
ஹீமோகுளோபின் குறைந்தால் என்ன நடக்கும்

உடலில் போதுமான அளவு இரத்தம் இல்லாமல் போனால், பல கடுமையான நோய்கள் ஏற்படும். இரத்த சோகை, இரத்த இழப்பு, வாயுத்தொல்லை, குறைந்த ஆற்றல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைதல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட ஆரம்பிக்கின்றன. ஹீமோகுளோபின் அதிகரிக்க இந்த 5 இரும்புச்சத்து நிறைந்த பானங்களை உணவில் சேர்க்க வேண்டும் என சுகாதார நிபுணர்களின் கூறுகிறார்கள். 
 
பீட்ரூட் சாறு

பீட்ரூட் நமது ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய நன்மைகளை அளிக்கிறது. இது இரும்பின் சிறந்த ஆதாரமாகக் கருதப்படுகிறது. பீட்ரூட்டில் ஏராளமான பொட்டாசியம், வைட்டமின் சி மற்றும் மாங்கனீசு உள்ளது. பீட்ரூட் சாறு உங்கள் உடலில் இரும்புச்சத்து குறைபாட்டை பூர்த்தி செய்கிறது. இதை குடிப்பதால் இரத்த சிவப்பணுக்கள் அதிகரிக்கும். ஆக்ஸிஜன் சப்ளையும் நன்றாக உள்ளது.
 
காய்கறி சாறு

நீங்கள் விரும்பினால், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த காய்கறி சாறுகளையும் குடிக்கலாம். இதன் காரணமாக உடலில் இரும்புச்சத்தின் அளவு வேகமாக அதிகரிக்கிறது. 2 கப் நறுக்கிய கீரையில் 1 கப் நறுக்கிய சுரைக்காய், 1/4 கப் வெல்லம், 1 டீஸ்பூன் தேன் மற்றும் 2 கப் குளிர்ந்த நீரை கலந்து சாறு தயார் செய்து தினமும் உட்கொள்ளவும்.
 
மேலும் படிக்க | உணவால் வரும் வயிற்றுப் புற்றுநோய்... தவிர்ப்பது எப்படி?

கீரை-புதினா சாறு

உடலில் இரும்புச்சத்து குறைபாட்டை ஈடுசெய்ய கீரை மற்றும் புதினா சாற்றையும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். 4 கப் நறுக்கிய கீரையுடன் 1 கப் புதினா இலைகள் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு சுத்தம் செய்து, அரைத்து, கலவையை வடிகட்டி 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் சீரகப் பொடியை கலந்து ஐஸ் கட்டிகளுடன் குடிக்கவும். இது இரத்தத்தின் அளவை அதிகரிப்பது மட்டுமல்லாமல், எடையைக் குறைக்கவும் உதவுகிறது.
 
கத்தரிக்காய் சாறு

கத்தரிக்காய் ஹீமோகுளோபினை அதிகரிப்பதில் வியக்கத்தக்க வகையில் பயனுள்ளதாக இருக்கிறது. கத்தரிக்காய் ஜூஸ் உடலின் ஆற்றல் அளவை அதிகரிக்கிறது. இதனால் இரத்த சர்க்கரை அளவும் கட்டுக்குள் இருக்கும். 5 கத்தரிக்காயில், 1 கப் தண்ணீர், 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 2 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து, ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து கலக்கி குடிக்கவும்.
 
ஹலீம் பானம்

ஹலீம் அதாவது ஆளி விதை பானம் உடலுக்கு மிகவும் பயனுள்ளது. சுவையிலும் இது சூப்பர்தான். இதில் கணிசமான அளவு ஃபோலிக் அமிலம், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் ஈ, நார்ச்சத்து, கால்சியம் மற்றும் புரதம் உள்ளன. அரை கப் தண்ணீரில் 1 டீஸ்பூன் ஹலீம் மற்றும் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து 2 மணி நேரம் வைத்திருந்து பிறகு குடிக்கவும். உங்கள் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க ஆரம்பிக்கும்.

மேலும் படிக்க | கண்கள், நகங்கள், கை, கால்களில் இந்த அறிகுறிகள் இருக்கா? ஜாக்கிரதை, ஹை கொலஸ்ட்ரால் ஆபத்து!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News