விளாம்பழம் : இந்தியா மற்றும் இலங்கை போன்ற இடங்களில் அதிகமாக வளர்ந்து வரும் மரம். சிறந்த பழங்களைத் தரும் ஒரு அதிசிய மரம். இந்த மரத்தின் பழம் விளாம்பழம் எனப்படுகின்றது. விளாம் பழங்கள் விரும்பி உண்ணப்படும் ஒரு சத்து நிறைந்த உணவாகும்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விளாம்பழத்தில் உள்ள சத்துக்கள் :- விளாம்பழங்களில் 70 சதவிதம்  ஈரப்பதம், 7.3 சதவிதம் புரத சத்து, 0.6 சதவிதம் கொழுப்பு சத்து, 1.9 சதவிதம் தாது உப்புக்கள், 100 கிராம் பழத்தில் 70 மி.கி. ரிபோபிளேவின் மற்றும் 7.2 சதவிதம் சர்க்கரைச் சத்து ஆகியன அடங்கியுள்ளன.


விளாம்பழத்தின் சுவைகள் :- பழம் துவர்ப்பும், புளிப்பும் உடையது.


விளாம்பழத்தின் ஆங்கிலம் பெயர் : Wood Apple, Elephant Apple, Monkey Fruit or Curd Fruit, 
கன்னடம் பெயர் : Belada Hannu , 
தெலுங்கு பெயர் : Vellaga Pandu, 
இந்தி பெயர் : Kaitha


விளாம்பழத்தின் மருத்துவ குணம் :- சக்கரை நோயை கட்டுபடுத்தும், வறட்டு இரும்பல் தடுக்கும், வாந்தி, குமட்டல்,நெஞ்சு எரிச்சல் குறையும், வயிற்றுப்போக்கு குணம் அடையும், தலை சுற்றால் பேன்றவை மருத்துவ குணங்கள் ஆகும்.    


பித்தம் அதிகமனால் சித்தம் தடுமாறுபவர்கள் விளாம்பழத்தைக் காலையில் வெறும் வயிற்றில் சிறிது வெல்லம் கலந்து பிசைந்து சாப்பிட்டால் பித்தம் தணியும்.