உடல் எடையை குறைப்பது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை.  நமது அன்றாட வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், காரணமாக உடல் எடை அதிகரிக்கிறது.  மேலும் சரியாக உடற்பயிற்சி இல்லாததும் தேவையற்ற கொழுப்புகள் உடலில் தங்க காரணமாக அமைகிறது.  பொதுவாக, உடல் எடையை குறைப்பது என்பது எளிதான விஷயம் இல்லை.  இதற்கு கடுமையான உணவு மற்றும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.  ஆனாலும் சிலருக்கு எவ்வளவு கடினமாக உற்பயிற்சி செய்தாலும் உடல் எடை மற்றும் தொப்பை குறையாது.  உணவு முறை மற்றும் உடற்பயிற்சி முறைகளில் ஏதேனும் தவறுகள் இருந்தால் உடல் எடை குறைவதில் சிக்கல்கள் ஏற்படும்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Asafoetida: உணவில் தினமும் ஒரு சிட்டிகை பெருங்காயம் செய்யும் ஆரோக்கிய மாயம்! டிரை பண்ணி பாருங்க!


பலரும் இரவில் கண்ட உணவுகளை சாப்பிடுகின்றனர்.  இதனால் செரிமானம் ஆகாமல் கொழுப்பாக மாறி உடலில் தங்கி விடுகிறது.  ஒரு சிலர் சரியான இரவு உணவை எடுத்துக்கொண்டு ஆரோக்கியமாக உள்ளனர். அதே போல, இரவு எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதை பொருத்தும் உடல் எடை கூடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.  அதன்படி இரவில் அதிக கலோரி கொண்ட உணவை சாப்பிட்டால், இதன் காரணமாக வயிற்றில் தொப்பை கொழுப்பு வேகமாக அதிகரிக்கலாம்.  நீங்கள் உங்கள் எடையை குறைக்க அதிக ஆர்வமாக இருந்தால், இரவில் தூங்கும் 2 மணி நேரத்திற்கு முன்பே உணவை சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.  ஏனெனில் சாப்பிட்ட உடனே தூங்கினால் அது ஆரோக்கியத்திற்கு நல்லது இல்லை. மேலும், உணவு முறைகளை தவிர உடல் எடையை குறைக்க சில பானங்களை உட்கொள்ள வேண்டும், இதன் மூலம் நீங்கள் எளிதாக உடல் எடை மற்றும் தொப்பை கொழுப்பை குறைக்க முடியும். 


உடல் எடையை குறைக்க உதவும் பானங்கள்:


மஞ்சள் பொடி: மஞ்சளில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. எனவே இவை உணவுகளில் அதிகமாக சேர்க்கப்படுகின்றன. மேலும், பால் சத்தான உணவு பொருளாக உள்ளது.  ஏனெனில் பாலில் அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களும் உள்ளன. இந்த இரண்டையும் சேர்த்து குடித்து வந்தால், உடல் எடையை குறைக்கலாம்.  பெரும்பாலும் இரவில் மஞ்சள் பொடி பால் குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.


வெந்தய தேநீர்: உங்களுக்கு வயிற்றில் உள்ள தொப்பையை குறைந்து ஒல்லியான இடுப்பு பகுதி வேண்டும் என்றால், தினமும் இரவு வெந்தய டீயை குடித்து பழகுங்கள். இரவில் அதிகமான உணவை சாப்பிட்டால் செரிமானம் ஆக நீண்ட நேரம் ஆகும். இந்நிலையில், வெந்தய டீ செரிமானத்தை அதிகப்படுத்துகிறது. இதன் மெல்லமா உடல் எடையை குறைக்க முடியும்.  ஒரு ஸ்பூன் வெந்தயத்தை தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்கவும். இந்த நீரை வடிகட்டி, இரவில் சூடு செய்து குடித்து வாருங்கள். 


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | சாத்துக்குடி ஜூஸை தினமும் குடித்தால் - என்னென்ன பலன்கள்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ