மனிதர்களுக்கு உடல் எடையை குறைப்பது என்பது எப்போதும் சிம்ம சொப்பனமாகவே இருக்கும். உடற்பயிற்சி செய்தால் உடல் எடை குறையும் என்றாலும் உடற்பயிற்சி செய்வதற்கான ஆர்வமோ, நேரமோ இங்கு பலரிடம் இருப்பதில்லை. அதன்படி உடற்பயிற்சியைத் தவிர, உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் தங்கள் உணவிலும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். உடற்பயிற்சி செய்வதால் மட்டும் உடல் எடையை குறைக்க முடியாது என்பது அனைவரும் அறிந்ததே, இதற்கு உணவிலும் மாற்றம் செய்ய வேண்டும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உண்மையில், நீங்கள் சாப்பிடும் சில உணவுகள் உங்கள் உடலை பாதிக்கிறது. பெரும்பாலான மக்கள் எதையும் சிந்திக்காமல் சாப்பிடுகிறார்கள், இதன் காரணமாக அவர்களின் எடை குறைவதற்கு பதிலாக அதிகரிக்கிறது. எனவே உடல் எடையை குறைக்க உங்கள் உணவில் என்னென்ன பொருட்களை சேர்க்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.


மேலும் படிக்க | வாழைப்பழத்தின் உதவியுடன் முடிக்கு கெரட்டின் கிரீம் தயாரிக்கலாம்


1. சர்க்கரைப் பொருட்களிலிருந்து விலகி இருங்கள்
இனிப்புகளை அதிகம் சாப்பிட்டால் உடல் எடை கூடும் என்பது அனைவரும் அறிந்ததே. அத்தகைய சூழ்நிலையில், அதிக இனிப்பு பொருட்களை உட்கொள்ள வேண்டாம். இதனால் உடல் எடை அதிகரிப்பது மட்டுமின்றி, ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது.


2. பச்சைக் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்
உங்கள் உணவில் பச்சைக் காய்கறிகளை எடுத்துக்கொள்ளவும். இது உங்களை ஆரோக்கியமாக வைத்திருப்பது மட்டுமல்லாமல் உங்கள் உடல் எடையையும் கட்டுபடுத்தி வைத்திருக்கும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் உங்கள் உணவில் கீரை, கேரட் மற்றும் பாகற்காய் போன்ற காய்கறிகளை சேர்த்துக்கொள்ளலாம்.


3. ஆரோக்கியமான காலை உணவை உண்ணுங்கள்
காலையில் ஆரோக்கியமான உணவை சாப்பிடுவது மிகவும் முக்கியம். எனவே ஓட்ஸ் அல்லது முட்டையை நீங்கள் காலை உணவாக  சேர்த்துக்கொள்ளலாம். இதனுடன், காலை உணவில் ஒரு பழம் அல்லது பழச்சாறு சேர்த்துக்கொண்டால் உடலுக்கு நன்மை தரும். இது உங்களை ஃபிட்டாக வைத்திருக்க உதவும்.


4. நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணுங்கள்
நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும், இதன் மூலம் உங்கள் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் கிடைக்கும். இந்த உணவுகளில் பாதாம், ப்ரோக்கோலி போன்றவை அடங்கும். 


(பொறூப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | யார் யாருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்? வழிகாட்டு நெறிமுறை வெளியீடு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR