Belly Fat: தொப்பையை வெண்ணெய் போல் கரைக்கும் ‘மேஜிக் டிரிங்க்’; தயாரிப்பது எப்படி
வயிறு மற்றும் இடுப்பை சுற்றியுள்ள தொப்பை கொழுப்பை கரப்பது கடினமான காரியம் தான் என அனைவரும் நினைக்கின்றனர்.
தொப்பை கரைக்கும் மேஜிக் டீ: உடல் எடையை குறைப்பது என்பது இன்ரைய கால கட்டத்தில், இன்றைய வாழ்க்கை முறையில், ஒரு சவாலான காரியம் தான் என அனைவரும் நினைக்கின்றனர். அதற்காக, க்ரீன் டீ, லெமன் டீ மற்றும் அனைத்து விதமான மூலிகை பானங்கள் என உடல் எடையை குறைக்க பல விதமான பானங்களை உட்கொள்கிறோம். எனினும் ஒரு பழத்தின் உதவியுடன் தயாரிக்கப்படும் அத்தகைய டீ மேஜிக் போல் வேலை செய்யும் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.
இந்தியாவின் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் 'நிகில் வாட்ஸ்' ZEE NEWS இடம் பேசுகையில், ஆப்பிள் டீ உடல் எடையை குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறினார். இதனால், உடல் எடையும், தொப்பையும் வேகமாக கரையும் என்கிறார்.
ஆப்பிள் டீ குடிப்பதால் உடல் எடை குறையும். An apple a day keeps the doctor away என்ற பழமொழியை நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். ஆப்பிளை சாப்பிடுவதால் பல நோய்கள் உங்களை அண்டாது என்பதில் சந்தேகமில்லை, ஆனால் ஆப்பிள் டீ குடித்தால் உடல் எடையும் குறையும் என்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதை எவ்வாறு தயாரிப்பது என்பதை அறிந்து கொள்ளலாம்.
ஆப்பிள் டீ தயாரிக்கும் முறை
இதற்கு, நீங்கள் 2 கப் தண்ணீரை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து குறைந்த தீயில் சூடாக்கி, அதில் டீ பேக் மற்றும் எலுமிச்சை சாறு கலக்கவும். இப்போது தண்ணீரை மீண்டும் கொதிக்கவைத்து, அப்போது வேறு ஒரு பாதித்திரத்தில் அதில் சில ஆப்பிள் துண்டுகளை போடவும். இப்போது அதனுடன் இலவங்கப்பட்டை தூள் சேர்த்து, பாத்திரத்தை அடுப்பில் இருந்து இறக்கி, வடிகட்டி, அதில் எலுமிச்சை கலந்த டீயை கலக்கவும். ஆப்பிள் டீயை தொடர்ந்து குடித்து வந்தால், சில நாட்களில் உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.
ஆப்பிள் டீ குடிப்பதால் ஏற்படும் மற்ற நன்மைகள்
1. ஆப்பிள் டீ குடிப்பதன் மூலம், நமது செரிமானம் ஆரோக்கியமாக இருக்கும், இதனால் மலச்சிக்கல், அமிலத்தன்மை மற்றும் வாயு போன்ற பிரச்சனைகள் இருக்காது.
2. உங்களுக்கு லூஸ் மோஷன் பிரச்சனை இருந்தால், ஆப்பிள் டீ உங்களுக்கு ஒரு சஞ்சீவியாக இருக்கும். இதனால் வயிற்று உபாதைகள் நீங்கும்.
3. ஆப்பிள் டீயை டிடாக்ஸ் பானமாகப் பயன்படுத்தலாம், இதனைக் குடிப்பதால் உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறும்.
4. ஆப்பிள் டீ நீரிழிவு நோயாளிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும், ஏனெனில் இதில் இயற்கையான சர்க்கரை உள்ளது, இது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காது.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | Liver Detox: கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்கும் மேஜிக் ட்ரிங்க்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ