இந்த காய் இருந்தால் அடி வயிற்று கொழுப்பை ஈசியா குறைக்கலாம்
Weight Loss Tips: கோடை காலத்தில் உடல் எடையை குறைப்பது கடினம். அத்தகைய சூழ்நிலையில், ஒரு பச்சை காய்கறி சாப்பிடுவதன் மூலம் இந்த பிரச்சனையை சமாளிக்க முடியும். அது எந்த காய் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
உடல் எடையை குறைக்க குண்டு (Pointed Gourd) கோவக்காய்: இன்று சுட்டீஸ்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் முக்கியமான பிரச்சனை அதிகப்படியான எடை. உய ரத்துகேற்ற எடை இருந்தால் ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை. ஆனால் அதிகப்படியான எடை மேலும் மேலும் அதிகரிக்க தொடங்கும்போது அவை உடலிலும் பல நோய்களை உண்டாக்க தொடங்குகிறது. இதனால் இரத்த அழுத்தம், நீரிழிவு. தைராய்டு, ஹார்மோன் சுரப்பில் மாற்றம், மன அழுத்தம் என்று பிரச்சனைகளை வரிசை கட்டி வரவைக்கிறது. மேலும் வயதான பிறகு வரும் உபாதைகள் 30 வயது தொடரும் போதே வந்துவிடுகிறது. உடல் எடை கூடுவாதற்கு முக்கிய காரணம் நமது வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கம் போன்றவற்றை. கோடை காலத்தில் உடல் எடையை குறைப்பது மிகவும் கடினம், ஏனெனில் இந்த பருவத்தில் உணவு செரிமானம் சிக்கலாகிவிடும், இது நம் எடையை பாதிக்கும், அத்தகைய சூழ்நிலையில், ஒரு பச்சை காய்கறி சாப்பிடுவதன் மூலம் இந்த பிரச்சனையை நீங்கள் எளிதாக சமாளிக்கலாம்..எனவே அந்த பச்சை காய் என்ன என்பதையும், அவை எப்படி உடல் எடை குறைக்க உதவுகிறது என்பதை இந்த கட்டுரையில் தெரிந்துக்கொள்ளுங்கள்.
குண்டு கோவக்காய் (Pointed Gourd) உடல் எடையை குறைக்க உதவும்
கோவக்காய் போல் இருக்கும் இந்த காய் அதிகளவு வடமாநிலங்களில் பயன்படுத்தப்படுகிறது. இதன் சுவை அச்சு அசல் சாதாரண கோவக்காய் போன்று தான் இருக்கும். இந்த காய் சாப்பிடுவதற்கு சுவையாக இருப்பது மட்டுமின்றி ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து போன்ற பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இதில் காணப்படுகின்றன. அத்துடன் இதை சாப்பிடுவதால் இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது, திசுக்கள் ஆரோக்கியமாக இருக்கும், மேலும் இரத்த சுத்திகரிப்பு செயல்முறை துரிதப்படுத்தப்படுகிறது.
மேலும் படிக்க | கல்லீரல் கொழுப்பை எரிக்கும் ‘சில’ புரோட்டீன் உணவுகள்!
உடல் எடையை குறைக்க எப்படி சாப்பிட வேண்டும்
1. இந்த காயை வேகவைத்து சாலட் வடிவில் சாப்பிடலாம்.
2. இந்த காயின் தண்ணீரை குடிக்கலாம்.
3. இந்த காயை நீங்கள் பொரியலாக செய்து சாப்பிடலாம்.
4. ஜூஸ் செய்தும் குடிக்கலாம்.
5. பச்சடி செய்து சாப்பிடலாம்.
இதில் (Pointed Gourd) நார்ச்சத்து உள்ளது
இந்த காயில் நார்ச்சத்து அதிகம் உள்ளது, இது நமது செரிமானத்தை மேம்படுத்துவதோடு, எடையைக் குறைக்கவும் உதவுகிறது. எனவே, நீங்கள் தொப்பையை குறைக்க விரும்பினால், இதை தொடர்ந்து சாப்பிடுங்கள்.
கலோரிகளை குறைக்க உதவுகிறது
தற்போது ஃபாஸ்ட் அண்ட் ஜங்க் ஃபுட்களை நாம் சாப்பிட விரும்புகிறோம், அதில் எண்ணெய் மற்றும் கலோரிகள் அதிகமாக இருக்கும், இதுவே உடல் பருமனுக்கு முக்கிய காரணம், இத்தகை சூழ்நிலையில் நீங்கள் குண்டு கோவக்காய் (Pointed Gourd) சாப்பிட்லாம். ஏனெனில் இதில் கலோரிகள் குறைவு, அத்துடன் இது எடையைக் குறைக்க உதவுகிறது.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | தினமும் வெற்றிலை பாக்கு போட்டால் போதும்... கருத்தரிப்பு மையம் போகவே வேண்டாம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ