தொப்பை அதிகரிப்பதால் கவலையா? எளிய வீட்டு வைத்தியத்தை பின்பற்றுங்கள்
Weight Loss Home Remedies: தற்போது அதிகரித்து வரும் தொப்பை கொழுப்பால் அனைவரும் சிரமப்படுகின்றனர். இந்த உடல் பருமன் பல நோய்களை கொண்டு வருகிறது. அதனால் அதை சமாளிக்க 4 வீட்டு வைத்தியங்களை இன்று நாங்கள் கொண்டு வந்துள்ளோம்.
மோசமான வாழ்க்கை முறை மற்றும் உடற்பயிற்சியின்மை காரணமாக, தொப்பை அதிகரிப்பது இன்றைய மக்களுக்கு ஒரு பெரிய பிரச்சனையாகிவிட்டது. பெரியவர்களை விடுங்கள், இன்றைய காலத்தில் சிறு குழந்தைகள் கூட உடல் பருமனால் பாதிக்கப்படுகின்றனர். இந்த உடல் பருமன் உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மாரடைப்பு, ஆஸ்துமா, இரைப்பை உள்ளிட்ட பல நோய்களை கொண்டு வருகிறது. எனவே, இந்த எடை அதிகரிப்பை கூடிய விரைவில் குறைக்க நாம் முயர்ச்சிக்க வேண்டும், அதன்படி இன்று நாம் உங்களுக்கு உடல் பருமனை குறைக்க 4 எளிய வழிகளை கொண்டு வந்துள்ளோம் (எடை இழப்பு வைத்தியம்). இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், கொழுப்பை கொழுப்பை குறைத்து அதில் இருந்து விடுபடலாம்.
காலையிலும் மாலையிலும் ஒரு கப் கிரீன் டீ குடிக்கவும்
அதிகரித்து வரும் தொப்பையை குறைக்க கிரீன் டீயின் உதவியை எடுத்துக் கொள்ளலாம். கிரீன் டீயில் உள்ள கூறுகள் தொப்பை கொழுப்பைக் கரைக்க உதவுகின்றன. எனவே உடல் எடையை குறைக்க விரும்புவோர் தினமும் காலையிலும் மாலையிலும் ஒரு கப் கிரீன் டீ குடிக்கலாம். இந்த கிரீன் டீ உங்களுக்கு சர்க்கரை, நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற பல நோய்களிலிருந்து நிவாரணம் அளிக்கிறது மற்றும் இதில் எந்தவித பக்க விளைவுகளும் இல்லை.
மேலும் படிக்க | Brain Health: மூளையை பாதிக்கும் ஆபத்தான பழக்கங்களுக்கு ‘NO’ சொல்லுங்க
சீரக நீர் நல்ல தீர்வை தரும்
வயிற்றில் தொங்கும் கொழுப்பைக் குறைக்கும் இரண்டாவது வைத்தியம் சீரக தண்ணீர். இந்த தண்ணீர் நச்சு நீக்கும் கூறுகள் நிறைந்ததாக கருதப்படுகிறது. சீரகத்தை கொதிக்க வைத்த நீரை காலை மற்றும் மாலையில் வெறும் வயிற்றில் குடித்து வரவும். இப்படி செய்வதால் தொப்பை வேகமாக குறைய ஆரம்பித்து உடலின் நோய் எதிர்ப்பு சக்தி முன்பை விட அதிகமாகும் என்று கூறப்படுகிறது.
ஓமம் டீ ஒரு சிறந்த வழி
ஓமம் தேநீர் உடல் எடையை குறைக்க ஒரு சிறந்த வழி. வயிற்றில் உள்ள கொழுப்பைக் குறைக்க ஓமம் தேநீர் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. அத்துடன் இது ஆரோக்கியத்திற்கு ஒரு சிறந்த தீர்வாக கருதப்படுகிறது. சளி மற்றும் காய்ச்சலிலும் இதன் நுகர்வு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதன் வழக்கமான நுகர்வு பல நோய்களுக்கு பெரும் நிவாரணம் அளிக்க உதவுகிறது.
பெருஞ்சீரகம், சீரகம் மற்றும் வெந்தயமும் பயனுள்ளதாக இருக்கும்
இந்த வைத்தியங்கள் தவிர, உங்கள் சமையலறையில் இருக்கும் வெந்தயம், சீரகம் மற்றும் பெருஞ்சீரகம் ஆகியவையும் தொப்பையைக் குறைக்க பெரிதும் உதவுகின்றன. அவற்றை தண்ணீரில் கொதிக்க வைத்து குடிப்பதன் மூலம், விரிந்த வயிறு கட்டுக்குள் வந்து, எடை வேகமாக குறைக்க உதவும். இந்த தேநீர் குடிப்பது உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும் என்றும் அஜீரண பிரச்சனை நீங்கும் என்றும் நம்பப்படுகிறது. இதன் காரணமாக, எடை இழப்பு பிரச்சனையும் முடிவுக்கு வருகிறது.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுபேற்காது.)
மேலும் படிக்க | Health Tips: மூளை வளர்ச்சிக்கு உதவும் 'Vitamin B12' நிறைந்த சில உணவுகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ