திருமணமான ஆண்களுக்கு விறைப்புத்தன்மை, விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவு, மோசமான விந்தணுக்களின் தரம் போன்ற பாலியல் பிரச்சனைகள் ஏற்பட்டால், அவரது திருமண வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு, தந்தையாகும் கனவு கூட நிறைவேறாமல் போக்கும். பாலியல் பிரச்சனைகளில் இருந்து விடுபட, மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சைகள் அதிக செலவும் பிடிப்பதாக உள்ளது. இதற்கு எளிமையாக வீட்டு வைத்தியம் மூலமாகவும் விரும்பிய தீர்வைப் பெறலாம்.
ஆண்மைக்குறைவை நீக்க வெங்காயம் மற்றும் பூண்டு சட்னி மிகவும் கை கொடுக்கும். இது திருமண வாழ்க்கையில் சுவையை சேர்க்கும். வெங்காயம், பூண்டு சாப்பிடுவதால் ஆண்மை பலம் அதிகரித்து உடல் பலவீனம் நீங்கில், பல பாலியல் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். வெங்காயம் சாப்பிடுவதால் ஆண்களின் பாலியல் ஆரோக்கியத்திற்கு தேவையான டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் அதிகரிப்பதே இதற்கு காரணம். பூண்டு உண்பதால் விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் விந்தணுக்களின் தரம் மேம்படும்.
வெங்காயம் மற்றும் பூண்டு சட்னி தயாரிக்கும் முறை:
தேவையான பொருட்கள்:
ஒரு பெரிய வெங்காயம்
பூண்டு 5 பற்கள்
இரண்டு பெரிய தக்காளி
மூன்று பச்சை மிளகாய்
அரை தேக்கரண்டி கருப்பு உப்பு
அரை தேக்கரண்டி சர்க்கரை
சுவைக்கு சிறிது வெள்ளை உப்பு
1 தேக்கரண்டி வறுத்த சீரகம்
எலுமிச்சை சாறு
சட்னி செய்யும் முறை
முதலில், வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், தக்காளியை நன்றாக வதக்கவும், அதன் பிறகு மேலே சொன்ன அனைத்து பொருட்களையும் மிக்ஸி கிரைண்டரில் அரைத்து, ஒரு பாத்திரத்தில் பரிமாறவும். இதை அரிசி-பருப்பு அல்லது ரொட்டியுடன் சாப்பிடலாம்.
வெங்காயம் ஆண்களின் பாலின ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. வெங்காயத்தை தொடர்ந்து உட்கொள்வது ஆண்களின் பிறப்புறுப்புகளை வலுப்படுத்துகிறது. பாலியல் இச்சை அதிகரிக்கிறது. இதை சாப்பிடுவதால், டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனின் அளவு அதிகரிக்கிறது.
பூண்டினால் மலட்டுத்தன்மை நீங்கும். பூண்டை உட்கொள்வது ஆண்களின் வலிமையை அதிகரிக்கிறது. ஏனெனில் அதில் அல்லிசின் கலவை உள்ளது, இது நரம்புகளில் இரத்த ஓட்டத்தை வேகமாக அதிகரிக்கிறது. ஆண்களில் மலட்டுத்தன்மை நீங்குகிறது. இதை சாப்பிடுவதால் விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் விந்தணுக்களின் தரம் மேம்படும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | Liver Detox: கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்கும் மேஜிக் ட்ரிங்க்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ