காலை உணவில் ஆப்பிள் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?
Apple in Breakfast: காலையில் ஆப்பிள் சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும். இதனால் கிடைக்கும் நன்மைகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
காலை உணவில் ஆப்பிளை ஏன் சாப்பிட வேண்டும்: தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியமே இருக்காது என்று பலர் சொல்வதை நாம் அடிக்கடி கேள்விப்பட்டிருக்கிறோம். இந்த பழத்தை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும், காலை உணவின் போது கண்டிப்பாக சாப்பிட வேண்டும் என்றும் பலர் பரிந்துரைக்கிறார்கள். பொதுவாக பலர் காலை உணவில் எண்ணெய் நிறைந்த மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுகிறார்கள், இது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. இந்தியாவின் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் நிகில் வத்ஸ், காலையில் ஆப்பிள் சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும் என்று கூறுகிறார். இதற்கான காரணத்தையும் அவர் கூறியுள்ளார். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
காலை உணவில் ஆப்பிள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
இதயம் ஆரோக்கியமாக இருக்கும்
ஆப்பிள் உட்கொள்வது உங்கள் தமனிகளில் பிளேக் அடைக்கப்படுவதை தடுக்கிறது. இவ்வாறு அடைக்கப்படுவது கரோனரி தமனி நோய்க்கான முக்கிய காரணமாகும். ஆப்பிளின் தோலில் பீனாலிக் கலவை இருப்பதால், இரத்தத்தில் கெட்ட கொலஸ்ட்ரால் சேராது. ஆப்பிளை தினமும் உட்கொள்வதால் இதய நோயிலிருந்து காப்பாற்றப்படுவீர்கள்.
பக்கவாத தடுப்பு
ஆப்பிள் சாப்பிடுவது பக்கவாதம் மற்றும் நீரிழிவு அபாயத்தைக் குறைக்க உதவும் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆப்பிளை உட்கொள்வது பக்கவாதத்தை தடுக்கும் என்று முழுமையாக கூற முடியாவிட்டாலும், இது கண்டிப்பாக இந்த ஆபத்தை குறைக்கும் என கூறலாம்.
ஆற்றல் அதிகரிப்பு
நீங்கள் காலையில் உடற்பயிற்சி செய்யும் வழக்கம் உள்ளவராக இருந்தால், உங்கள் காலை உணவு மெனுவில் கண்டிப்பாக ஆப்பிள் இருக்க வேண்டும். ஏனென்றால், உடற்பயிற்சிக்கு முன் ஒரு ஆப்பிள் சாப்பிடுவது உங்கள் சகிப்புத்தன்மையையும் ஆற்றலையும் அதிகரிக்க உதவும். ஆப்பிள் உட்கொள்வதால் நாள் முழுவதும் உங்கள் ஆற்றலின் அளவும் புத்துணர்ச்சியும் மிக அதிகமாக இருக்கும்.
மேலும் படிக்க | நரை முடி முற்றிலும் கருப்பாக மாறனுமா.. வெங்காயம், வெந்தயம், பாதாம் பருப்பு போதும்
உடல் எடையை குறைக்க உதவும்
எடை அதிகரிப்பது இந்த நாட்களில் ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. உடல் பருமன் பல நோய்களுக்கு மூல காரணமாக இருப்பதால், அனைவரும் உடல் எடையை கட்டுக்குள் வைக்க பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். எடையை பராமரிக்க விரும்புபவர்கள், காலை உணவில் கண்டிப்பாக ஆப்பிளை சாப்பிட வேண்டும். ஏனெனில் இந்த பழத்தில் மிகக் குறைந்த கொழுப்பு உள்ளது. இதில் உள்ள நார்ச்சத்து எடையை பெரிய அளவில் குறைக்க உதவுகிறது.
ஆப்பிள் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்துக்கு ஏன் நல்லது?
ஆப்பிள் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இதில் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. ஆகையால் இது எடையைக் குறைக்கவும், செரிமானத்தை சிறப்பாக வைத்திருக்கவும் உதவுகிறது. இந்தப் பழத்தில் உள்ள பாலிஃபீனால் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கும்.
ஆப்பிளை எப்போது, எப்படி சாப்பிடுவது?
கெட்ட கொலஸ்ட்ராலில் இருந்து விடுபட, தினமும் காலையில் எழுந்தவுடன் ஆப்பிள் சாப்பிடுங்கள்.
ஆப்பிள் பழத்தின் முக்கிய நன்மைகள்:
- உடல் எடையை குறைக்க உதவும்.
- செரிமானத்திற்கு உதவும்.
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
- இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
நீரிழிவு நோயாளிகள்
ஆப்பிளில் அதிக ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும் இதில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் ரத்த சர்க்கரை அளவை பாதிக்கலாம். நீரிழிவு நோய் இருப்பவர்கள் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதில் கவனமாக இருக்க வேண்டும். ஒரு ஆப்பிளில் 27 கிராம் கார்போஹைட்ரேட்டுகள், 4.8 கிராம் நார்ச்சத்துக்களும் உள்ளது. ஆப்பிளில் காணப்படும் சர்க்கரையின் பெரும்பகுதி பிரக்டோஸ் ஆகவுள்ளது. ஆப்பிளை தினமும் சாப்பிடுவதன் மூலம் உடலிலுள்ள இன்சுலின் எதிர்ப்பைக் குறைக்கும் ஆற்றல் அதிகரிக்கிறது. ஆப்பிளில் உள்ள சில ஃபிளாவனாய்டுகள் கார்ப் செரிமானத்தை குறைப்பதன் மூலம் இரத்த குளுக்கோஸ் அளவை மேம்படுத்த உதவுகின்றன. 339,383 நபர்களை வைத்து நடத்தப்பட்ட ஆய்வில் பச்சை ஆப்பிள் சாப்பிட்டால் டைப் 2 வகை நீரிழிவு அபாயம் குறைவாக இருப்பது கணடறியப்பட்டுள்ளது.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | எலும்புகளில் இருந்து கால்ஷியத்தை உறிஞ்சும் ‘சில’ உணவுகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ