தாறுமாறா ஏறும் எடையை தடாலடியா குறைக்கணுமா? கிரீன் டீயில் இதை சேருங்க
Weight Loss: கிரீன் டீ-ஐ வெறுமனே குடிப்பதால் அதிக நன்மை கிடைப்பதில்லை. உடல் எடையை குறைக்க க்ரீன் டீயில் கலந்து குடிக்கக்கூடிய சில விஷயங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
உடல் எடையை குறைக்க கிரீன் டீ: எடை குறைக்கும் உணவில் கிரீன் டீ-க்கு முக்கிய பங்கு உள்ளது. இது உடல் எடையை குறைப்பது மட்டுமில்லாமல் உடலில் உள்ள நச்சுக்களையும் நீக்குகிறது. கிரீன் டீ குறைந்த கலோரி கொண்ட டீயாகும். இதை ஒரு நாளைக்கு இரண்டு முறை உட்கொள்ளலாம். இருப்பினும், கிரீன் டீயில் சில விஷயங்களை சேர்ப்பதால் கிடைக்கும் பல நன்மைகள் கிரீன் டீ-ஐ வெறுமனே குடிப்பதால் கிடைப்பதில்லை. க்ரீன் டீயில் கலந்து குடிக்கக்கூடிய சில விஷயங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம். இவற்றை கிரீன் டீ-யில் சேர்ப்பது கொழுப்பை எரிப்பதில் உதவுவதோடு, சுவையை மேம்படுத்துவதிலும் பயனுள்ளதாக இருக்கும்.
எடை இழப்புக்கு கிரீன் டீயில் என்ன சேர்க்க வேண்டும்?
இஞ்சி மற்றும் எலுமிச்சை
எலுமிச்சை சாறு மற்றும் இஞ்சியை கிரீன் டீயில் சேர்க்கும்போது கொழுப்பு இழப்பு வேகமாக நடக்கத் தொடங்குகிறது. இந்த டீயை தினமும் ஒரு கப் குடித்தால் உடலுக்கு நன்மைகள் கிடைக்கும். இந்த டீயை தயாரித்த பிறகு, 15 நிமிடம் வெந்நீரில் வைத்து, லேசாக சூடுபடுத்தி குடிக்கவும். சிறந்த விஷயம் என்னவென்றால், இந்த டீ குடிப்பது நோய் எதிர்ப்பு சக்தியையும் பலப்படுத்துகிறது.
மேலும் படிக்க | உடல் எடையை வேகமா குறைக்கணுமா? காலையில் இந்த பானம் குடித்தால் போதும்
இலவங்கப்பட்டை மற்றும் மஞ்சள்
மசாலாப் பொருட்களின் மருத்துவ குணங்களைக் கருத்தில் கொண்டு, ஆயுர்வேதத்திலும் அவற்றைப் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. இலவங்கப்பட்டை மற்றும் மஞ்சள் ஆகியவை கிரீன் டீயுடன் சேர்க்கக்கூடிய இரண்டு மசாலாப் பொருட்களாகும். ஒரு கப் கிரீன் டீ தயாரிக்க, அரை டீஸ்பூன் மஞ்சள் மற்றும் அரை டீஸ்பூன் இலவங்கப்பட்டை தூள் மட்டுமே பயன்படுத்தவும்.
புதினா
குளிர்ச்சியையும் புத்துணர்ச்சியையும் தரும் புதினா, பசியைக் குறைத்து எடை குறைப்பதில் நன்மை பயக்கும். இந்த காரணத்திற்காக, அதை கிரீன் டீயுடன் கலந்து குடிக்கலாம். ஒரு கப் க்ரீன் டீ தயாரிக்கும் போது, புதினா இலைகளை நேரடியாகச் சேர்த்து அல்லது லேசாக அரைத்து சேர்க்கலாம். அதன் பிறகு இந்த தேநீரை அருந்தவும்.
தேன்
காலையில் வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடிக்க அறிவுறுத்தப்படுவது போல், கிரீன் டீயில் தேன் கலந்து குடிக்கலாம். இதனால் உடல் பல வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களைப் பெறுகிறது. இது எடை இழப்புக்கு இந்த கலவையை பயனுள்ளதாக்குகிறது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் இதை குடிக்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | சேதமடைந்த நுரையீரலுக்கும் புத்துயிர் கொடுக்கும் ‘வஜ்ரதந்தி’ மலர்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ