கிரீன் டீ நன்மைகள்: உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பது பலருக்கு பெரிய பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால், இன்னும் பல நோய்களும் உடலில் வந்து சேர்கின்றன. கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த பல வீட்டு வைத்தியங்கள் உள்ளன. அவற்றில் கிரீன் டீயும் ஒன்று. பலர் டீ அல்லது காபியை பாலுடன் குடிப்பதற்கு பதிலாக க்ரீன் டீயை தொடர்ந்து குடிக்கிறார்கள். கிரீன் டீ நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். க்ரீன் டீ குடிப்பது பல நோய்களைத் தடுக்கிறது. மேலும், கிரீன் டீ உடல் எடையை குறைக்கவும், இதய நோய்களை குறைக்கவும் உதவுகிறது.
க்ரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் அதிகம் இருப்பதால், இது ஒட்டுமொத்த உடலுக்கும் நன்மை பயக்கும். கிரீன் டீயில் பாலிபினால்கள் உள்ளன. இவை புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கின்றன. க்ரீன் டீயின் மற்ற நன்மைகள் என்னவென்று தெரிந்து கொள்வோம்.
கிரீன் டீ குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
கிரீன் டீயில் நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும் பாலிபினால்கள் மற்றும் பாலிசாக்கரைடுகள் உள்ளன. கிரீன் டீ இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகின்றது. க்ரீன் டீயை உட்கொள்வதால் உடலில் தேங்கியுள்ள கொழுப்பை குறைக்க முடியும். கிரீன் டீ உடலின் வளர்சிதை மாற்ற செயல்முறையை அதிகரிக்க உதவுகின்றது. இது எடை குறைக்கவும் உதவுகிறது. எடை குறைக்க உதவும் உணவுகளில் கிரீன் டீ-க்கு முக்கிய இடம் உண்டு.
மேலும் படிக்க | உடல் எடையை குறைக்கணுமா? இந்த 7 விஷயத்தை மட்டும் செஞ்சா போதும்!
கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும்
கெட்ட கொழுப்பைக் குறைப்பதில் கிரீன் டீ முக்கிய பங்கு வகிக்கிறது. கிரீன் டீ நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கவும் உதவுகிறது. க்ரீன் டீயை உட்கொள்வது மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கிறது. உங்களுக்கு உயர் ரத்த அழுத்த பிரச்சனை இருந்தால், கிரீன் டீயை தவறாமல் உட்கொள்ள வேண்டும். இது உயர் இரத்த அழுத்த அபாயத்தை நீக்குகிறது.
சரியான கிரீன் டீ தயாரிப்பது எப்படி
நீங்கள் க்ரீன் டீ பேக்குகளைப் பயன்படுத்தவில்லை என்றால், கிரீன் டீயை இந்த வழியில் குடிக்கலாம். இதற்கு முதலில் தண்ணீரை கொதிக்க வைக்கவும். அதில் க்ரீன் டீயை போட்டு சிறிது நேரம் மூடி வைத்து அடுப்பை அணைத்துவிடவும். பின்னர் கிரீன் டீயை வடிகட்டி குடிக்கவும்.
கிரீன் டீ குடிக்க சரியான நேரம்
ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை கிரீன் டீ குடிக்கலாம். உடற்பயிற்சி செய்வதற்கு முன் இதை குடிக்கலாம். இது உங்கள் உடலுக்கு ஆற்றலை அளிக்கிறது. காலை உணவுக்குப் பிறகு அரை மணி நேரம் கழித்து கிரீன் டீ குடிக்கலாம். உணவுக்கு அரை மணி நேரத்திற்கு முன் அல்லது பின் நீங்கள் இதை குடிக்கலாம். மேலும், இரவில் தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன் இதை குடிக்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | ஒரு கப் இஞ்சி தண்ணீர் குடித்தால் சளி மற்றும் இருமல் எட்டிப்பார்க்காது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ