எடை இழப்புக்கு சியா விதைகள்: உடல் எடை அதிகரிப்பது இன்றைய காலகட்டத்தில் மிக பொதுவான பிரச்சனை ஆகிவிட்டது. உடல் எடையை குறைக்க, பலரும் பல வித முயற்சிகளை செய்கிறார்கள். எனினும், பல முறை முயற்சித்தாலும், நம்மால் விரும்பிய பலனை அடைய முடிவதில்லை. தொப்பையை குறைப்பது ஒரு அசாத்திய செயலாகவே ஆகிவிட்டது. சில வீட்டு வைத்தியங்களால், மிகவும் சிரமப்படாமல், உடல் எடையை குறைக்கலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? அப்படி ஒரு அசத்தலான வீட்டு வைத்தியத்தை பற்றி இந்த பதிவில் காணலாம். ஒரு விதையை பயன்படுத்தி அதிகரிக்கும் தொப்பையை எளிதாக அடக்கலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்படிப்பட்ட ஆற்றல் கொண்ட விதைகள் சியா விதைகள்தான். நீங்களும் ஃப்ளாட் டம்மி, அதாவது தட்டையான வயிற்றைப் பெற விரும்பினால், சியா விதைகளை வெவ்வேறு வழிகளில் உட்கொள்ளலாம். அதன் பலன் சில நாட்களில் தெரியும்.


எடையை குறைக்க சியா விதைகளை எப்படி உட்கொள்ள வேண்டும்? 


சியா விதை தேநீர்


தினமும் சாப்பிடும் பால் மற்றும் சர்க்கரை தேநீர் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். அதற்கு பதிலாக சியா விதைகளால் செய்யப்பட்ட தேநீரை குடிக்கவும். இது தொப்பையை குறைக்கும். இதற்கு, சியா விதைகளை ஒரு கிளாஸ் தண்ணீரில் கொதிக்க வைத்து, தண்ணீர் பாதியானவுடன் அதை ஒரு கோப்பையில் எடுத்து மெதுவாக குடிக்கவும்.


மேலும் படிக்க | எச்சரிக்கை: அடிக்கடி இருமல் வருகிறதா? நுரையீரல் புற்றுநோயின் அறிகுறியாக கூட இருக்கலாம்! 


தயிருடன் சியா விதைகள் 


தயிர் உட்கொள்வது செரிமானத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது என்ற உண்மையை நாம் அனைவரும் அறிவோம். இதனுடன் சியா விதைகளை சேர்ப்பது எடை இழப்புக்கு உதவியாகக் கருதப்படுகிறது. இதற்கு சியா விதைகளை இரவில் தண்ணீரில் ஊற வைக்கவும். காலையில் தண்ணீரை வடிகட்டி, தயிருடன் கலந்து சாப்பிடவும்.


சியா விதை நீர்


சியா விதை நீர் உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகிறது. இதற்கு, ஒரு டீஸ்பூன் சியா விதைகளை ஒரு கிளாஸ் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்கவும். காலையில் எழுந்தவுடன் எதுவும் சாப்பிடாமல் இந்த தண்ணீரை குடியுங்கள். இப்படி தொடர்ந்து செய்து வந்தால், தொப்பை மற்றும் இடுப்பு கொழுப்பு குறைய ஆரம்பிக்கும்.


சியா விதை சாலட்


விரைவில் உடல் எடையை குறைக்க நினைத்தால், சியா விதைகள் சாலட்டை உங்கள் தினசரி உணவில் கண்டிப்பாக எடுத்துக் கொள்ளுங்கள். இதற்கு சியா விதைகளை பழங்கள் மற்றும் காய்கறி சாலட்களுடன் கலக்கலாம். இது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், கெட்ட கொழுப்பைக் குறைக்கவும் உதவுகிறது.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொது அறிவை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | விந்தணு குறைப்பாடா? No Worry இதை சாப்பிடுங்கள் போதும். 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ