Weight Loss: இந்த சூப்பர் உணவுகளை சாப்பிட்டு பாருங்க, தொப்பை தொலைந்து போகும்

Weight Loss Tips: உடல் பருமன் அதிகரிப்பதால் கவலையில் உள்ளவர்களுக்கு இங்கு குறிப்பிடப்பட்டுள்ள உணவுகள் உதவக்கூடும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 1, 2022, 06:14 PM IST
  • எடை இழப்புக்கான சூப்பர் உணவுகள்.
  • எடையை குறைக்க விரும்பினால், சியா விதைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
  • தினமும் ஊறவைத்த வால்நட் அதாவது வாதுமைக் கொட்டை மற்றும் பாதாம் சாப்பிடலாம்.
Weight Loss: இந்த சூப்பர் உணவுகளை சாப்பிட்டு பாருங்க, தொப்பை தொலைந்து போகும் title=

உடல் எடையை குறைக்க டிப்ஸ்: உடல் எடை அதிகரிப்பதால் சிரமப்படுபவர்கள் உடற்பயிற்சிகளையும், உணவுக் கட்டுப்பாட்டையும் மேற்கொள்கிறார்கள். அதன் பிறகும் பலருக்கும் அவர்கள் விரும்பிய எடையை பெற முடிவதில்லை. பெரும்பாலான மக்கள் எடையைக் கட்டுப்படுத்த வீட்டு வைத்தியத்தை நம்புகிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் உடல் பருமன் அதிகரித்து வருவது மக்களுக்கு பெரும் பிரச்சனையாக உள்ளது. இந்த பிரச்சனை இன்றைய இளைஞர்களிடம் அதிகம் காணப்படுகிறது. உடல் பருமன் அதிகரிப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம், அதில் முதல் காரணம் அவர்களின் வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கமாகும்.

அதிகரிக்கும் உடல் பருமனால், இரத்த அழுத்த அபாயம் ஏற்படுகிறது. ஆகையால், அதிகரிக்கும் உடல் கொழுப்பை சரியான நேரத்தில் நிறுத்த முயற்சிக்க வேண்டியது அவசியமாகும். உடல் பருமன் அதிகரிப்பதால் கவலையில் உள்ளவர்களுக்கு இங்கு குறிப்பிடப்பட்டுள்ள உணவுகள் உதவக்கூடும். இவை உடலில் உள்ள அதிக கொழுப்பைக் குறைக்க உதவியாய் இருக்கும்.

எடை இழப்புக்கான சூப்பர் உணவுகள்:

சியா விதைகள்:

நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், சியா விதைகள் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். இதன் பயன்பாடு உங்கள் செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது. இவற்றை தொடர்ந்து உட்கொண்டு வந்தால், சோர்வு குறையும். எடை இழப்புக்கும் இது உதவியாக இருக்கும். 

மேலும் படிக்க | Weight Loss Tips: உடல் பருமனை கட்டுக்குள் வைத்திருப்பதற்கான தந்திரம் 

இதனை உணவின் ஒரு அங்கமாக ஆக்கினால் இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு குறைகிறது. இது கீல்வாதத்திலும் பயன்படுத்தப்படுகிறது. சியா விதைகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் நார்ச்சத்து உள்ளிட்ட தாதுக்களும் நிறைந்துள்ளன.

ஊறவைத்த வாதுமைக் கொட்டை, பாதாம்

நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், தினமும் ஊறவைத்த வால்நட் அதாவது வாதுமைக் கொட்டை மற்றும் பாதாம் சாப்பிடலாம். ஆரோக்கியத்தைப் பொருத்தவரை, இவற்றில் நல்ல கொழுப்பு உள்ளது. இது தவிர, இவற்றை சாப்பிடுவதன் மூலம் சர்க்கரை அளவு பராமரிக்கப்படுகிறது. 

மேலும் இவற்றுல் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இதன் காரணமாக செரிமான அமைப்பு நன்றாக இருக்கும்.

டார்க் சாக்லேட்

ஒரு நாளைக்கு இரண்டு க்யூப் டார்க் சாக்லேட் சாப்பிடுவது உடல் கொழுப்பை விரைவாகக் குறைத்து உடல் வடிவத்தை நன்றாக வைத்திருக்க உதவுவதாக சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். இதிலிருந்து உடலுக்கு தேவையான ஆற்றலும் சக்தியும் கிடைக்கின்றது. 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | World Vegan Day 2022: சுத்த சைவ உணவு உண்பதை ஊக்குவிக்கும் ’வீகன் டயட்’ மாதம் இது 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News