ஓவர் எடையா? நோ டென்ஷன்... தர்பூசணி பழத்தை இப்படி சாப்பிடுங்க, சூப்பரா எடை குறையும்!!
Weight Loss: உடல் எடையை குறைக்க வாழ்க்கை முறை மற்றும் உணவு முறைகளில் மாற்றங்களை செய்ய வேண்டியது மிக அவசியமாகும்.
எடை இழப்புக்கான உணவுகள்: உடல் எடை அதிகரிப்பது நம்மில் பலருக்கு உள்ள மாபெரும் பிரச்சனையாக உள்ளது. இதை எப்படி கட்டுப்படுத்துவது? உணவில் எந்த விதமான மாற்றங்களை செய்வது? இப்படி பல கேள்விகள் நம் மனதில் இருந்துகொண்டே இருக்கின்றன. ஆரோக்கியமான உணவுமுறை உடல் எடையைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது. ஆனால் ஆரோக்கியமான டயட்டை பின்பற்றுவது பலருக்கு மிக கடினமாக இருக்கிறது. ஏனெனில் பலரால் உணவை கட்டுப்படுத்த முடிவதில்லை. அப்படிப்பட்டவர்களுக்கு உடல் எடையை குறைப்பது ஒரு சவாலாகவே தெரிகிறது.
உடல் எடையை குறைக்க தர்பூசணி
உடல் எடையை குறைப்பது எளிதான காரியம் அல்ல. அத்தகைய சூழ்நிலையில், உடல் எடையை குறைக்க வாழ்க்கை முறை மற்றும் உணவு முறைகளில் மாற்றங்களை செய்ய வேண்டியது மிக அவசியமாகும். இப்படி செய்வதால் உங்கள் எடையை பல கிலோ வரை எளிதாகக் குறைக்கலாம். இயற்கையான முறையில் உடல் எடையை குறைப்பதில் தர்பூசணி கொண்டு எடையை குறைப்பதும் ஒரு வழியாகும்.
இது தர்பூசணி எடை இழப்பு உணவு திட்டம் என்று அழைக்கப்படுகிறது. இதில், தர்பூசணியை வாரத்தில் 3 நாட்கள் மட்டும் சாப்பிட வேண்டும். இதன் மூலம் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி, உடல் எடையை குறைப்பதில் நமக்கு பெரிய உதவி கிடைக்கும். இந்த எடை இழப்பு உணவு திட்டத்தை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.
தர்பூசணி எடை இழப்பு உணவு திட்டம் என்ன?
தர்பூசணி எடை இழப்பு உணவுத் திட்டத்தில் தர்பூசணியை 3 நாட்களுக்கு உட்கொள்ள வேண்டும். இது உங்கள் ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் உதவியாக இருக்கும். இந்த உணவுத் திட்டத்தின் பின்னணியில் உள்ள கோட்பாடு உடலை சுத்தப்படுத்தி நச்சுகளை வெளியேற்றுவதாகும். உண்மையில், தர்பூசணியில் ஏராளமான நீர்ச்சத்து உள்ளது. இது உடலை சுத்தப்படுத்த உதவுகிறது. இது தவிர, இந்த உணவுத் திட்டம் கூடுதல் கலோரிகளையும் எரிக்கிறது.
மேலும் படிக்க | பாடாய் படுத்தும் அடிவயிற்று கொழுப்பை ஒரேடியாக குறைக்க இந்த ஒரு ஜூஸ் போதும்
தர்பூசணி எடை இழப்பு உணவு திட்டத்தை எவ்வாறு பின்பற்றுவது?
இந்த உணவுத் திட்டத்தைப் பின்பற்ற, நீங்கள் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மூன்று வேளைகளிலும் தர்பூசணி சாப்பிட வேண்டும். நீங்கள் விரும்பும் செய்முறையின் படி இதை நீங்கள் சாப்பிடலாம். இதன் தொடக்கத்தில், பகலில் ஏதேனும் ஒரு வேளை தர்பூசணி மட்டும் சாப்பிட வேண்டும், மீதமுள்ள நேரத்தில் உங்கள் மனதிற்கு ஏற்றவாறு ஏதாவது சாப்பிடலாம். உதாரணமாக, நீங்கள் தினமும் இரண்டு முறை லேசான உணவை சாப்பிடலாம் மற்றும் தர்பூசணியை சிற்றுண்டியாக சாப்பிடலாம். பிறகு 3 நாட்களுக்கு தர்பூசணி சாப்பிடும் ஃபார்முலாவை செயல்படுத்தி 3 வாரங்கள் தொடர்ந்து பின்பற்றவும்.
எடை இழப்புக்கு தர்பூசணி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:
உடல் எடையை குறைக்க தர்பூசணி சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கின்றன. முதலாவதாக, இது உங்கள் வயிற்றை நிரப்புகிறது. மேலும் பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இது தவிர, தர்பூசணியை மட்டும் சாப்பிடும் போது, உடல் ஜீரணிக்கும்போது, அதில் எதுவும் மிச்சமில்லாமல், கலோரிகளை எரிக்கத் தொடங்கும். இதற்குப் பிறகு, இது உடலில் உள்ள நச்சை நீக்கி, அதை சுத்தப்படுத்துகிறது. இதனால் விரைவாக எடையை குறைக்க உதவுகிறது.
இப்படி தர்பூசணியை மட்டும் சாப்பிட முடியாதவர்கள் இந்த வகையிலும் இதை சாப்பிடலாம்.
எடை இழப்புக்கு தர்பூசணியை சரியான முறையில் உட்கொள்ள வேண்டும். தவறான முறையில் சாப்பிட்டால், எடை குறைய இது உதவாது. உடல் எடையை குறைக்கும் போது, தர்பூசணியை காலை உணவில் உட்கொள்ள வேண்டும். காலை உணவைத் தவிர, இரவு உணவில் தர்பூசணியை சாலட்டாகவும் சாப்பிடலாம். இரவில் தர்பூசணியை சாலட்டாக உட்கொள்பவர்கள், இரவில் திடீரென பசி எடுக்காமல் இருக்க, அதனுடன் வேறு ஏதாவது ஒன்றைச் சாப்பிட வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
உடல் எடையை குறைக்க தர்பூசணியை பல வழிகளில் சாப்பிடலாம். நீங்கள் அதை பழ சாலட்டில் சேர்க்கலாம். இது தவிர, உங்கள் வழக்கமான முளைகள், ஸ்மூத்திகள் மற்றும் ஷேக்குகளிலும் இதை நீங்கள் சேர்க்கலாம். உடல் எடையைக் குறைக்க எந்த ஒரு டயட்டைப் பின்பற்றினாலும், அது முடிந்தவுடன் ஜங்க் ஃபுட் சாப்பிடத் தொடங்கக் கூடாது என்பதை நினைவில் கொள்ளவும். தர்பூசணி எடை இழப்புக்கு உதவுகிறது, ஆனால் அதை பராமரிக்க, நீங்கள் உணவு மற்றும் உடல் செயல்பாடுகளில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | ஆர்வ கோளறுல வெந்நீர் அதிகம் குடிக்காதீங்க... கிட்னி காலியாகிவிடும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ