ஏறும் இடையை ஈசியா குறைக்க இந்த காய்கள் போதும்... சூப்பரா குறையும்

Weight Loss in Summer: கோடைக்காலத்தில் உடல் எடையைக் குறைக்க சில தனிப்பட்ட முறைகளை கையாள வேண்டும். இதில் நாம் அன்றாடம் உட்கொள்ளும் சில காய்கறிகள் நமக்கு உதவும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 12, 2023, 01:49 PM IST
  • பெரும்பாலான குழந்தைகளுக்கு வெண்டைக்காய் என்றால் மிகவும் பிடிக்கும்.
  • இந்த காய் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்து இரண்டிலும் நல்லது.
  • இது பல வழிகளில் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
ஏறும் இடையை ஈசியா குறைக்க இந்த காய்கள் போதும்... சூப்பரா குறையும் title=

எடை குறைப்பு குறிப்புகள்: உடல் எடையை குறைக்க நாம் பல வழிகளில் முயற்சி செய்கிறோம். குறிப்பாக தொப்பை வந்துவிட்டால், அதை சரி செய்வது மிக கடினமாகிவிடுகிறது. உடல் எடையை குறைக்க நமது வாழ்க்கை முறையில் மாற்றங்களை கொண்டு வர வேண்டியது மிக அவசியமாகும். எடை அதிகரிப்பதற்கு உங்கள் உணவே முக்கிய காரணமாகும். அன்றாட வாழ்க்கையில் தேவை இல்லாத, ஆரோக்கியமற்ற உணவை சாப்பிடுவது உங்கள் உடலில் தவறான விளைவை ஏற்படுத்துகிறது. அதிக எடை அதிகரிப்பால் பல நேரங்களில் பலர் பல சங்கடங்களுக்கு ஆளாவது உண்டு. அதிகரிக்கும் எடையை குறைப்பது அனைவருக்கும் பெரிய சவாலாகவே உள்ளது. உடலில் உள்ள கொழுப்பை குறைக்க பல வித முயற்சிகளை எடுக்கிறோம். 

கோடையில் எடை குறைப்பு

கோடைக்காலத்தில் உடல் எடையைக் குறைக்க சில தனிப்பட்ட முறைகளை கையாள வேண்டும், இதில் நாம் அன்றாடம் உட்கொள்ளும் சில காய்கறிகள் நமக்கு உதவும். மாறிவரும் வாழ்க்கை முறையால், மக்களின் உணவுப் பழக்கம் பெருமளவு மாறிவிட்டது. ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களால், பெரும்பாலான மக்கள் உடல் பருமனால் வேகமாக பாதிக்கப்படுகின்றனர். எடை அதிகரிப்பு ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. எடையை குறைக்க நாம் எடுக்கும் சில முயற்சிகளால் நமக்கு தேவையான பலன்கள் கிடைக்காமல், பக்க விளைவுகளே அதிகம் ஏற்படுகின்றன. 

ஆனால், எடை குறைப்பு முயற்சியில் நாம் காய்கறிகளை பயன்படுத்தும்போது அதனால் நமக்கு எந்த விதமான பக்க விளைவுகளும் ஏற்படாது என நாம் உறுதியாக கூற முடியும். இவற்றின் பயன்பாட்டினால் அதிகரிக்கும் உடல் எடையை நாம் எளிதாக கட்டுப்படுத்தலாம் என்று சுகாதார நிபுணர்கள் நம்புகின்றனர். மறுபுறம், கோடை காலமும் உடல் எடையை குறைக்க சிறந்த நேரமாக கருதப்படுகின்றது.

உங்கள் எடையை குறைக்க உதவும் சில காய்கறிகள் பற்றி இந்த பதிவில் காணலாம். இந்த சீசனில் இந்த காய்கறிகளை எளிதாக உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இதன் மூலம் எடையைக் கட்டுப்படுத்தலாம். எந்த காயை எப்படி பயன்படுத்தினால் விரைவாக உடல் எடையை கட்டுப்படுத்த முடியும் என்பதை இங்கே காணலாம்.

1. சுரைக்காய் சாறு

கோடை காலத்தில் உடல் எடையை குறைக்க வேண்டுமானால், சுரைக்காய் சிறந்த தேர்வாக இருக்கும். கோடை காலத்தில் அதிக அளவில் சுரைக்காய் சாப்பிடுவது நல்லது. சுரைக்காயை சாம்பாரில் போட்டு அல்லது கறியாக செய்து சபபிடலாம். அல்லது சுரைக்காயை ஜூஸ் செய்தும் குடிக்கலாம். பலருக்கு சுரைக்காய் பொதுவாக பிடிப்பதில்லை. இருப்பினும், சுரைக்காய் அதிக நன்மைகள் உள்ள காயாகும். ஆகையால் இதை உட்கொள்வது வேகமாக எடையை குறைக்க உதவும். 

2. வெள்ளரிக்காய்

கோடையில், காய்கறி சந்தையில் நாம் வெள்ளரிக்காயை அதிகம் காண்கிறோம். வெள்ளரிக்காயில் அதிக தண்ணீர் உள்ளது. வெள்ளரிக்காய் சாப்பிடுவது நமது உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும். வெள்ளரிக்காய் நார்ச்சத்து நிறைந்தது. இதை பல வழிகளில் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இதில் பூஜ்ஜிய கலோரிகள் உள்ளன. எடையைக் குறைக்க வெள்ளரியும் ஒரு நல்ல வழியாக இருக்கும்.

மேலும் படிக்க | ஊளை சதை அசுர வேகத்தில் குறைய... காலையில் வெறும் வயிற்றில் ‘இந்த’ பழத்தை கண்டிப்பாக சாப்பிடவும்!

3. பாகற்காய்

பலருக்கு பாகற்காய் சாப்பிட பிடிக்காது. ஆனால் பல நோய்களுக்கு சிகிச்சையளிப்பதில் பாகற்காய் பயனுள்ளதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. நீரிழிவு நோயாளிகள் பாகற்காய் சாப்பிட அறிவுறுத்தப்படுகிறார்கள். அதேபோல், பாகற்காய் உடல் எடையை குறைக்கவும் பெரிதும் உதவியாக இருக்கும். பாகற்காய் சுவையில் கசப்பானது. ஆனால் இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. ஆகையால் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் அடிக்கடி தங்கள் உனவில் பாகற்காய சேர்த்துக்கொள்ள வேண்டும். 

4. வெண்டைக்காய்

பெரும்பாலான குழந்தைகளுக்கு வெண்டைக்காய் என்றால் மிகவும் பிடிக்கும். இந்த காய்கறி கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்து இரண்டிலும் நல்லது. இது பல வழிகளில் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இது எடையைக் குறைக்கவும் உதவுகிறது. இதை சாம்பரில் சேர்த்து, கறி செய்து, ஃப்ரை செய்து என பல வழிகளில் சாப்பிடலாம். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | மேல் வயிற்று தொப்பையா? அப்போ இந்த ஒரு ரெசிபி கட்டாயம் உதவும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News