Weight Loss Tips: சரியான நேரத்தில் சரியான உணவை எடுத்து கொள்ள தவறுவதால் பலருக்கும் உடல் எடை அதிகரிக்கும் பிரச்சனை இருந்து வருகிறது. சிறந்த செரிமானத்திற்கு சரியான உணவுகளை சாப்பிட வேண்டும். இரவு தாமதமாக சாப்பிட்டால் உணவு செரிமானம் ஆக நேரம் எடுக்கும். எனவே அவை கொழுப்பாக உடலில் தங்கிவிடுகிறது. பொதுவாக கோடை காலத்தில் தயிர் அல்லது மோர் சேர்த்த உணவுகளை அதிகம் சாப்பிட அறிவுறுத்தப்படுகிறது. ஏனெனில் தயிர் மற்றும் மோர் இரண்டும் ஆரோக்கியத்தில் நன்மை பயக்குகிறது. ஆனால் இந்த இரண்டில் எது உடலுக்கு அதிக நன்மை தருகிறது என்ற கேள்வி இருக்கும். சிலருக்கு தயிர் அதிகம் புடிக்கும், சிலருக்கு மோர் அதிகம் பிடிக்கும். எனவே இந்த இரண்டில் எவற்றை தேர்வு செய்வது என்று மக்கள் குழப்பம் அடைகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | எடையை ஈசியா குறைக்க..’இந்த’ 8 உடற்பயிற்சியை அடிக்கடி பண்ணுங்க..!


தயிர் அல்லது மோர்?


உடல் எடையை குறைக்க குறைந்த கலோரிகளை கொண்ட உணவை தேர்வு செய்ய வேண்டும். பால் பொருட்களான தயிர் மற்றும் மோரில் குறைந்த அளவு கலோரிகள் உள்ளது. குறிப்பாக கோடை காலத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த உணவுகள் உடல் எடையை குறைக்க உதவுவது மட்டுமின்றி அதிக வெப்பம் உள்ள நாட்களில் உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது மற்றும் செரிமான பிரச்சனைகளை ஏற்படாமல் தடுக்கிறது. மோரில் தயிரைக் காட்டிலும் குறைந்த அளவு கலோரிகள் உள்ளன. எனவே உடனடியாக உடல் எடையை குறைக்க விரும்புவோர் தயிரை காட்டிலும் மோரை தேர்வு செய்வது நல்ல பலனை தரும். உடல் எடை அதிகரிக்க வேண்டும் என்றால் தயிர் சாப்பிடுவது நல்லது.


நீரேற்றமாக இருக்க உதவுகிறது


மோரில் தயிரைக் காட்டிலும் அதிக அளவு நீர் உள்ளது. எனவே தயிரை காட்டிலும் மோரை எடுத்து கொள்வது உடல் எடையை குறைக்க அதே நேரத்தில் நீண்ட நேரம் உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. உடலில் நீர்ச்சத்தைபராமரிக்க மோர் உதவுகிறது. மேலும் மோரில் கால்சியம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிரம்பி உள்ளன. தயிருடன் ஒப்பிடும்போது மோரில் குறைந்த கொழுப்பு உள்ளது. எனவே உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.  லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாதவர்களுக்கு தயிரை ஜீரணிப்பது கடினமாக இருக்கும். அவர்களுக்கு மோர் சிறந்த தேர்வாக இருக்கும். இவை நல்ல செரிமானத்தை கொடுத்து ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.


(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | ஓமத்தை ‘இப்படி’ சாப்பிட்டா... யூரிக் அமில பிரச்சனைக்கு முடிவு கட்டலாம்..!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ