ஒரு மாதத்தில் உடல் எடையை குறைக்க காலையில் இந்த தண்ணீர் குடியுங்கள்!
Weight Loss Tips: உடல் எடை அதிகரிப்பு பல்வேறு உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இதனால் பல நோய்கள் ஏற்படுகிறது. சில பானங்கள் மூலம் உடல் எடையை குறைக்கலாம்.
Weight Loss Tips: ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் சரியான உணவு பழக்கம் இல்லாத காரணத்தால் உடல் எடை அதிகரிப்பு பிரச்சனை பலருக்கும் இருந்து வருகிறது. உடல் எடை அதிகரிப்பால் வரும் பொதுவான பிரச்சனைகளை தாண்டி ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதயம் தொடர்பான நோய்கள் போன்றவையும் ஏற்படுகின்றன. தற்போது வரும் பல புதிய புதிய நோய்களுக்கு உடல் பருமன் பிரச்சனையும் முக்கியமான ஒன்றாக உள்ளது. ஒருமுறை உடல் எடை அதிகமானால் அதனை குறைப்பது அவ்வளவு எளிதல்ல. உடல் எடையை குறைக்க தினசரி வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்களில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும். வீட்டில் இருக்கும் சில உணவு பொருட்களை இரவு முழுவதும் ஊறவைத்து அதன் தண்ணீரை காலையில் குடித்தால் உடல் எடையை குறைக்கலாம். இந்த தண்ணீர் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைக்க உதவுகிறது.
மேலும் படிக்க | முகத்திற்கு பளபள பொலிவு கிடைக்க தயிரை இப்படி பயன்படுத்துங்கள்
சீரகம் கலந்த தண்ணீர் (Cumin water)
உடல் எடையை குறைக்க ஊறவைத்த சீரக தண்ணீர் சிறந்த தேர்வாக இருக்கும். ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு ஸ்பூன் சீரகத்தை இரவு முழுவதும் ஊற வைத்து, காலையில் அதனை நன்கு கொதிக்க வைத்து அதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து தினசரி குடித்து வந்தால் உடல் எடை குறையும். மேலும் காலையில் இந்த தண்ணீரை குடிப்பதால் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது, செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் உடலில் உள்ள வீக்கத்தை குறைக்க உதவுகிறது.
இலவங்கப்பட்டை கலந்த தண்ணீர் (Cinnamon Water)
இலவங்கப்பட்டை நீர் உடல் எடையை குறைக்க உதவுகிறது. ஒரு கிளாஸ் தண்ணீரில் சில இலவங்கப்பட்டையை போட்டு இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். காலையில் அந்த தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து தினசரி குடிக்கவும். இந்த தண்ணீர் உடல் எடையை குறைக்க உதவுவது மட்டும் இல்லாமல், இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.
இஞ்சி கலந்த தண்ணீர் (Ginger water)
சிறிய துண்டு இஞ்சி மற்றும் இலவங்கப்பட்டையை ஒரு கிளாஸ் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்கவும். பிறகு காலையில் அந்த நீரை நன்கு கொதிக்க வைத்து அதில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து தினசரி குடித்து வாருங்கள். இதன் மூலம் ஒரு மாதத்தில் உடல் எடையை குறைக்கலாம்.
வெந்தயம் கலந்த தண்ணீர் (Fenugreek water)
வெந்தயத்தை ஒரு கிளாஸ் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வையுங்கள். பிறகு காலையில் அந்த நீரை நன்கு கொதிக்க வைத்து குடிக்கவும். காலையில் ஊறவைத்த வெந்தய தண்ணீரை குடிப்பது உடலுக்கு முழுமையின் உணர்வை தருகிறது. இதன் மூலம் பசி ஏற்படுவது குறைக்கிறது.
பெருஞ்சீரகம் கலந்த தண்ணீர் (Fennel water)
பெருஞ்சீரகம் உடல் எடையை குறைக்க உதவுகிறது. பெருஞ்சீரகத்தை ஒரு கிளாஸ் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் அந்த தண்ணீருடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து குடிக்கவும். பெருஞ்சீரகத்தில் இருக்கும் செரிமான நொதிகள் உடல் செரிமானத்தை மேம்படுத்தி தேவையற்ற கொழுப்பை நீக்க உதவுகிறது.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | எடையை ஈசியா குறைக்க..’இந்த’ 8 உடற்பயிற்சியை அடிக்கடி பண்ணுங்க..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ