தயிர் அல்லது மோர்? எது குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என தெரிந்து கொள்ளுங்கள்

தயிர், மோர் என இரண்டும் உடல் ஆரோக்கியதற்கு உகந்தது என்றாலும், இரண்டுக்கும் சில வேறுபாடுகள் இருக்கின்றன.

 

உடல் எடையைக் குறைப்பதற்கு மக்கள் பலவிதமான உணவுகளைத் தேடுகின்றனர். அதில் தயிர் மற்றும் மோர் போன்ற பெயர்களை பலர் பரிந்துரை செய்வார்கள். அதாவது உடல் எடையை குறைப்பதற்கு தயிர் மற்றும் மோர் பெரிய அளவில் உதவும் என சொல்லப்படுகிறது. இருப்பினும் இவை இரண்டில் எது சிறந்தது என்பது பலருக்கு தெரிவதில்லை. இந்தப் பதிவில் அதை நாம் தெரிந்துகொள்ளப் போகிறோம்.

1 /11

தயிர் என்பது நொதித்தல் செயல்முறைக்கு உட்படுத்தப்படும் பால் ஆகும். இதில் புரதம், கால்சியம் மற்றும் ப்ரோபயோடிக்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளதால் ஆரோக்கியமான உணவாக பார்க்கப்படுகிறது.   

2 /11

தயிரில் காணப்படும் ப்ரோ பயோடிக்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி செரிமானத்திற்கு உதவுகின்றன. இதன் காரணமாக எடை இழப்புக்கு தயிர் பெரிதளவில் உதவுகிறது. மேலும் தயிரில் குறைவான கலோரி இருப்பதால், ஒரு சிறப்பான காலை உணவாக இது இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.   

3 /11

மறுபுறம் மோர் என்பது தயிரில் தண்ணீர், உப்பு, கருவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து கலக்கி தயாரிக்கப்படும் ஒரு பானமாகும். இது பொதுவாக தயிரில் இருந்து வெண்ணையை பிரித்தெடுத்து, மீதமுள்ள திரவத்தில் தண்ணீர் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. 

4 /11

எனவே மோர் தயிரை விட குறைந்த கொழுப்பு மற்றும் கலோரிகளைக் கொண்டுள்ளது. உடல் எடையை கட்டுப்படுத்த விரும்புபவர்களுக்கு மோர் சிறந்த தேர்வாகும். மேலும் தயிரைப் போலவே இதிலும் ப்ரோ பயோடிக்கள் உள்ளன. அவை செரிமானத்தை சிறப்பாக்கி, நல்ல வளர்ச்சிதை மாற்றத்தை ஏற்படுத்த உதவுகின்றன.  

5 /11

தயிர் மற்றும் மோர் இரண்டுமே பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கினாலும், உடல் எடை இழப்பு என வரும்போது தயிர்தான் மிகவும் பிரபலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

6 /11

ஏனெனில் தயிரில் உள்ள அதிக புரதச்சத்து, உங்களுக்கு திருப்தியான உணர்வை ஏற்படுத்தும். எனவே நீண்ட காலம் உங்களுக்கு பசியின் உணர்வைக் கொடுக்காமல் இருப்பதால், அதிகமாக சாப்பிடுவதற்கான வாய்ப்புகள் குறைகிறது. 

7 /11

எனவே உங்களது தனிப்பட்ட சூழ்நிலைகள் மற்றும் விருப்பங்களை மதிப்பீடு செய்து, எதை சாப்பிடுவது என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள். இதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் தகுந்த சுகாதார நிபுணரை அணுகி அறிவுரை பெறுவது நல்லது. 

8 /11

இருப்பினும் உங்களுக்கு எது சரியானது என்பதைத் தேர்வு செய்வதில் கவனமாக இருக்க வேண்டும். சிலருக்கு மோர் பிடித்த உணவாக இருக்கலாம், அதிலிருந்து அவர்களுக்கான ஊட்டச்சத்தை பெற்றுக்கொள்ளலாம். 

9 /11

எனவே உங்களது தனிப்பட்ட சூழ்நிலைகள் மற்றும் விருப்பங்களை மதிப்பீடு செய்து, எதை சாப்பிடுவது என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள். இதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் தகுந்த சுகாதார நிபுணரை அணுகி அறிவுரை பெறுவது நல்லது. 

10 /11

எனவே எடை இழப்பு என வரும்போது தயிர் மோர் இரண்டுமே நல்ல தேர்வுதான். இருப்பினும் மோரைவிட தயிரில் அதிக ஊட்டச்சத்துக்கள் இருப்பதால், தயிருக்கு முதலிடம் கொடுக்கலாம். 

11 /11

இத்துடன் நிலையான உடல் எடை இழப்புக்கு ஒரு சீரான உணவுப் பழக்கம் மற்றும் உடற்பயிற்சி போன்றவற்றை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இதுதான் உங்களுக்கு காலப்போக்கில் நல்ல பலனைக் கொடுக்கும்.