உடல் பருமனால் அவதியா? இந்த மேஜிக் பானம் குடிச்சா சட்டுனு எடை குறையும்!!
Weight Loss Drinks: உடல் எடையை கட்டுப்படுத்த உதவும் சூப்பர் பானங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம். இந்த பானங்களை குடித்து வந்தால் விரைவில் உடலில் உள்ள கொழுப்பு அழிந்து, உடல் எடை மளமளவென்று குறையும்.
இன்றைய காலகட்டத்தில் அனைவரும் ஃபிட்டாக இருக்க விரும்புகிறார்கள். ஏனெனில் உடல் பருமனாக இருப்பதால் பல நோய்களுக்கு ஆளாக நேரிடுகிறது. உடல் எடை அதிகரித்தால், அதனால் பல வித உடல் நல குறைபாடுகள் ஏற்படுகின்றன. உடல் எடையை குறைக்க பலரும் பல வித முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, ஜிம் என பல வழிகளில் எடையை குறைக்க முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.
சில எளிதான வீட்டு வைத்தியங்கள் மூலம் உடல் எடையை எளிதாக கட்டுப்படுத்தலாம். சில பானங்களில் உடல் பருமனை குறைத்து, உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கும் ஆற்றல் உள்ளது. உடல் எடையை கட்டுப்படுத்த உதவும் அப்படிப்பட்ட சூப்பர் பானங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம். இந்த பானங்களை குடித்து வந்தால் விரைவில் உடலில் உள்ள கொழுப்பு அழிந்து, உடல் எடை மளமளவென்று குறைவதாக நிபுணர்கள் கூறியுள்ளனர். இவற்றால் எந்த விதமான பக்க விளைவுகளும் வராது என்பது குறிப்பிடத்தக்கது.
உடல் எடையை உடனே குறைக்கும் அந்த பானங்களில் உள்ள ஆரோக்கிய நன்மைகளும் ஏராளம். வெந்தயம், ஓமம் மற்றும் சீரகத்தின் பானங்கள்தான் அந்த சூப்பர் ட்ரிங்க்ஸ்!! இவற்றை பருகி வந்தால் உடல் பருமனுக்கு விரைவிலேயே விடை கொடுத்து விடலாம்.
மேஜிக் பானங்கள்
ஓமம், வெந்தயம் மற்றும் சீரகத்தை தண்ணீரில் ஊறவைத்து அந்த நீரை குடித்து வந்தால் உடல் எடை குறையும். இந்த மூன்று பொருட்களில் இருந்து தயாரிக்கப்படும் தண்ணீரை உட்கொள்வது உடல் எடையை குறைப்பது மட்டுமல்லாமல், செரிமானத்தையும் மேம்படுத்துகிறது. இரத்த சர்க்கரையும் இதன் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது.
மேலும் படிக்க | அடிக்கடி கண்களில் வலி ஏற்படுகிறதா? இந்த தவறை மட்டும் பண்ணாதிங்க!
இந்த நீரை குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன?
இந்த தண்ணீரை தொடர்ந்து குடித்து வந்தால், அது உடல் எடையை குறைக்க உதவும். எனினும், இது தவிர இதில் இன்னும் பல நன்மைகளும் உள்ளன.
- இது இரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவுகிறது.
- மூட்டு வலி, கை கால்கள் வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
- வயிற்றில் வாயு உருவானாலும், வாயுத்தொல்லை ஏற்பட்டாலும், இந்த நீர் அதற்கு நிவாரணமாக அமையும்.
- அசிடிட்டி பிரச்சனையை நீக்க இந்த தண்ணீரையும் பருகலாம்.
- இந்த தண்ணீரை உட்கொள்வதால் வளர்சிதை மாற்றம் மேம்படும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | இந்த அறிகுறிகள் தோன்றினால் ஜாக்கிரதை: இவை கொலஸ்ட்ராலின் அபாய அறிகுறிகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ