Weight Loss: காலை உணவில் இதை சாப்பிடுங்க, சூப்பரா எடை குறையும்
Benefits Of Eating Oats: சிலர் உடல் எடையை குறைக்க காலை உணவை உட்கொள்ளாமல் இருக்கிறார்கள். ஆனால், அது உடல் உடையை குறைப்பதற்கு பதிலாக அதிகரித்து விடும் என்பது பலருக்கு தெரிவதில்லை.
ஓட்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்: காலை உணவு என்பது ஒரு நாளின் மிக முக்கியமான உணவாகும். சரியான மற்றும் ஆரோக்கியமான காலை உணவு நம்மை நாள் முழுவதும் ஆற்றலுடன் வைத்திருக்கும். மறுபுறம், உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கும் காலை உணவு மிகவும் இன்றியமையாததாக உள்ளது. சிலர் உடல் எடையை குறைக்க காலை உணவை உட்கொள்ளாமல் இருக்கிறார்கள். ஆனால், அது உடல் உடையை குறைப்பதற்கு பதிலாக அதிகரித்து விடும் என்பது பலருக்கு தெரிவதில்லை. உடல் எடையை குறைக்க விருப்பம் கொண்டவர்கள் அதற்கான சரியான காலை உனவை உட்கொண்டால் எளிதாக எடையை குறைக்கலாம்.
உடல் எடையை குறைக்க ஓட்ஸ் ஒரு மிகச்சிறந்த காலை உணவாக கருதப்படுகின்றது. சுகாதார நிபுணர்களின் கூற்றுபடி, ஓட்ஸ் ஒரு சூப்பர் ஃபுட் ஆகும். இதில் நார்ச்சத்து, தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தினமும் காலை உணவில் ஓட்ஸை உட்கொண்டால், உடல் ஆரோக்கியமாகவும் புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.
ஓட்ஸ் சாப்பிடுவதால் உடலில் இந்த மாற்றங்கள் நிகழ்கின்றன:
எடை இழப்பு:
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஓட்ஸ் ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் நன்மை பயக்கும். ஓட்ஸில் உள்ள நார்ச்சத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது. இதை தினமும் சாப்பிடுவது உடல் எடையை சீராகவும் ஆரோக்கியமான முறையிலும் குறைக்கிறது.
செரிமானம்:
ஓட்ஸில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது பசியைத் தடுக்கிறது, செரிமானத்தை அதிகரிக்கிறது. மறுபுறம், நல்ல செரிமானம் இருந்தால், பல நோய்களுக்கு இரையாவதைத் தவிர்க்கலாம். இதனால் உடல் ஆரோக்கியம் மேம்படுகிறது.
மேலும் படிக்க | துளசி நல்லது, ஆனால் அதிகமாக சாப்பிட்டால் இந்த ஆபத்தை உண்டாக்கும்
தோல் பொலிவு:
தினமும் ஓட்ஸ் சாப்பிட்டு வந்தால், உங்கள் சருமத்தில் அதிக மாற்றங்களை காணலாம். ஓட்ஸ் சருமத்தை அழகாக்குகிறது. ஓட்ஸில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்கும். இது சருமத்தில் உள்ள டெட் செல்களை அகற்ற உதவுகிறது. இது உங்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும், களங்கமற்றதாகவும் மாற்றுகிறது.
(பொறுப்புத் துறப்பு: இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொது அறிவை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா அதை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | Diabetes: சர்க்கரை நோயை குணப்படுத்த முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ