உடல் எடை குறையணுமா? நோ டென்ஷன்.. இந்த விதையை சாப்பிடுங்க, உடனே குறையும்
Weight Loss Tips: உடற்பயிற்சியுடன் ஒரு சிறப்பு வாய்ந்த விதையை உட்கொள்வது உடல் எடையை குறைக்க உதவும். இதன் மூலம் வயிறு மற்றும் இடுப்பைச் சுற்றியுள்ள கொழுப்பை எளிதாக குறைக்க முடியும்.
எடை இழப்புக்கு ஆளிவிதை: நம்மில் பலர் உடல் எடை அதிகரிப்பால் அவதிப்படுகிறோம். உடல் எடையை குறைக்க பல வித முயற்சிகளை மேற்கொள்கிறோம். நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பது எவ்வளவு முக்கியமோ, எப்போது சாப்பிடுகிறீர்கள் என்பதும் அவ்வளவு முக்கியம்தான். அதிகரித்து வரும் எடையைக் குறைக்க நம்மில் பலர் மிகவும் கடினமாக முயற்சி செய்கிறோம். ஆனால் எவ்வளவு முயற்சி செய்தாலும், விரும்பிய பலனை அடைய முடிவதில்லை. எனினும், உடற்பயிற்சியுடன் சில இயற்கையான வழிகளின் மூலமும் உடல் எடையை எளிதாக குறைக்கலாம். அப்படி ஒரு இயற்கையான வழியை பற்றி இந்த பதிவில் காணலாம்.
உடற்பயிற்சியுடன் ஒரு சிறப்பு வாய்ந்த விதையை உட்கொள்வது உடல் எடையை குறைக்க உதவும். இதன் மூலம் வயிறு மற்றும் இடுப்பைச் சுற்றியுள்ள கொழுப்பை எளிதாக குறைக்க முடியும். கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஜிம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் பிரபல உணவியல் நிபுணர் டாக்டர் ஆயுஷி யாதவ், ஆளி விதைகளின் உதவியுடன், எடையைக் குறைப்பது மட்டுமல்லாமல், உடலில் உள்ள பல பிரச்சனைகளையும் நீக்க முடியும் என்று கூறுகிறார்.
ஆளி விதையில் உள்ள ஊட்டச்சத்துக்கள்
ஆளி விதைகள் தோற்றத்தில் மிகவும் சிறியவை, ஆனால் இவை எந்த வித உணவு வகைக்கும் குறைவானவை அல்ல. இவை சூப்பர்ஃபுட்டாக கருதப்படுகின்றன. இவை நமது உடல் வளர்ச்சிக்கும் அவசியமானவையாக உள்ளன. இந்த விதைகளில் உடலுக்கு அனைத்து வகையிலும் பலன் தரக்கூடிய பல சத்துக்கள் காணப்படுகின்றன. ஆளி விதைகள் நார்ச்சத்து, ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், ஆரோக்கியமான புரதங்கள், பீனாலிக் கலவைகள் மற்றும் தாதுக்கள் ஆகியவற்றின் வளமான ஆதாரங்களாக உள்ளன. ஆளிவிதைகளை அன்றாட உணவில் எளிதாக சேர்க்கலாம்.
மேலும் படிக்க |
ஆளிவிதை எவ்வாறு எடையைக் குறைக்கிறது?
ஆளி விதைகள் பல நோய்களின் நிவாரணமான நமக்கு உதவக்கூடும். இது மட்டுமின்றி உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் ஆளி விதை மூலம் அதிகம் பயனடையலாம். ஆளி விதையை உட்கொண்டால், அதன் காரணமாக, வயிறு மற்றும் இடுப்பைச் சுற்றியுள்ள கொழுப்பு குறையத் தொடங்குகிறது. இது உடலில் சேர்ந்திருக்கும் கூடுதல் கொழுப்பை பெரிய அளவில் தாக்கி அதை நீக்குகிறது. இந்த விதைகளில் எடை குறைக்கும் சத்துக்கள் காணப்படுகின்றன.
ஆளி விதை நமது பசியின் மீது கட்டுப்பாட்டை கொண்டு வருகின்றது. நாம் உணவை குறைவாக சாப்பிட்டால், அதற்கேற்ப எடையும் குறைய ஆரம்பிக்கும். இந்த விதைகள் காரணமாக, உடலில் வீக்கம், அதாவது உடல் உப்பசம் குறையத் தொடங்குகிறது. அத்துடன் இதனால் செரிமானமும் சீராவதால், உடல் எடையை இழப்பதில் இது பெரிதும் உதவுகிறது.
ஆளி விதைகளை எவ்வாறு உட்கொள்வது
ஆளிவிதையை பால் மற்றும் ஆப்பிள் ஸ்மூத்தி ஆகியவற்றில் கலந்து குடிக்கலாம். இதற்கு ஒரு கப் பால் மற்றும் 2 பேரீச்சம்பழங்களை கிரைண்டரில் அரைக்கவும். பின் ஒரு ஸ்பூன் ஆளி விதை பொடியை இந்த ஸ்மூத்தியுடன் கலந்து குடித்தால், சில வாரங்களில் உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க |
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ