தொப்பையை கரைக்கணுமா.. இந்த ‘7’ விதிகளை கடைபிடியுங்க.... அதுவே போதும்!
உடல் பருமன் அல்லது எடையைக் குறைக்கத் தொடங்க விரும்பும் பலருக்கு, அந்த முயற்சியை எங்கு எப்படி தொடங்குவது என்பதைத் தீர்மானிக்க சிறிது கடினமாக இருக்கிறது.
இன்றைய காலகட்டத்தில் உடல் பருமன் என்பது பொதுவான பிரச்சனையாகி விட்ட நிலையில், உடல் கொழுப்பை கரைக்க, பலர் பல்வேறு விஷயங்களை நாடுகின்றனர். ஆனால், அவ்வளவு எளிதில் பல கிடைப்பதில்லை. கொழுப்பைக் குறைக்க என தேடினால்ஆன்லைனில் பல தகவல்கள் கிடைக்கின்றன. ஒவ்வொரு நாளும் சில உணவு நிபுணர்கள் ஆன்லைனில் தோன்றி உடல் எடையை குறைக்க இதை செய்யுங்கள் அதை செய்யுங்கள் என புதிய வழியைக் கூறுகிறார்கள். இந்த நிபுணர்கள் விரைவான எடை இழப்பு முடிவுகளை உறுதியளிக்கிறார்கள். இருப்பினும், உண்மை என்னவென்றால், எடை இழப்பு ஒரு மெதுவான செயல்முறையாகும், மேலும் ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்க, உங்கள் உணவு மற்றும் உடற்பயிற்சியுடன் உங்கள் வாழ்க்கை முறை பழக்கவழக்கங்களில் மாற்றங்களைச் செய்ய வேண்டும். இது உடல் எடையைக் குறைக்கவும், ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், நாள்பட்ட நோய்களில் இருந்து விடுபடவும் உதவும். திறம்பட உடல் எடையை குறைக்க சில எளிய வழிகளை இங்கு கூறுகிறோம்.
உடல் கொழுப்பு அல்லது எடையை குறைக்க பயனுள்ள வழிகள்
நிறைய தண்ணீர் குடிக்கவும்
தண்ணீர் என்பது வாழ்க்கையின் அடிப்படைத் தேவை மற்றும் நமது உடலின் 55 சதவிகிதம் அதனால் ஆனது. எனவே, உட்புற உடல் செயல்பாடு சரியாக நடக்க ஒரு நாளில் போதுமான அளவு திரவங்களை குடிக்க வேண்டியது அவசியம். நீர் நச்சுகளை வெளியேற்றுவதோடு, உங்கள் உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, இது அதிக கலோரிகளை எரிக்க உதவும். உணவுக்கு முன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பது அதிக கலோரிகளை உட்கொள்வதைத் தடுக்கிறது மற்றும் எடையைக் குறைக்க உதவுகிறது. எனவே உங்களை நீரேற்றமாக வைத்திருங்கள். உடல் எடையை குறைக்க தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
புரதத்தை இயற்கையான முறையில் உட்கொள்ளுங்கள்
உயிரணுக்களை உருவாக்குவதற்கும் எடை குறைப்பதற்கும் புரதம் மிக முக்கியமான ஊட்டச்சத்துக்களில் ஒன்றாகும். இது தசையை உருவாக்க உதவுவது மட்டுமல்லாமல், அனைவரும் ஆரோக்கியமான எடையை பராமரிக்க புரதம் அவசியம். புரதம் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், அதிகமாக சாப்பிடுவதை தடுக்கவும் உதவுகிறது. முட்டை, கோழிக்கறி, கொண்டைக்கடலை, பருப்பு மற்றும் பனீர் ஆகியவை உயர்தர புரதத்தின் சில பொதுவான ஆதாரங்கள்.
ஆரோக்கியமான கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள்
கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்புகளை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மோசமானது என்று ஒரு பொதுவான தவறான கருத்து உள்ளது. ஆனால் கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு ஆகியவை நம் உடலுக்கு தினசரி தேவைப்படும் இரண்டு மிக முக்கியமான மேக்ரோநியூட்ரியண்ட்ஸ் ஆகும். எனவே, உங்கள் உணவில் இருந்து அவற்றை முற்றிலும் தவிர்ப்பது ஒரு நல்ல வழி அல்ல. அதற்கு பதிலாக, ஆரோக்கியமான கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளை உட்கொள்வதை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். பல கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களை உறிஞ்சுவதற்கு அவசியமான அதே வேளையில், கார்போஹைட்ரேட்டுகள் உங்களை திருப்தியாக வைத்திருக்க உதவுகின்றன. அவற்றை அளவோடு சாப்பிடுவது நல்லது.
காலை உணவு கட்டாயம் தேவை
காலை உணவை தவிர்ப்பது சரியான வழி அல்ல. காலை உணவைத் தவிர்ப்பது கலோரிகளைக் குறைக்க ஒரு சிறந்த வழியாகும் என்ற தவறான கருத்து மக்களிடையே உள்ளது. எது தவறு. காலை உணவை உண்பவர்களின் உடல் நிறை குறியீட்டெண் (பிஎம்ஐ) குறைவாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மொத்த தினசரி கலோரிகளை மூன்று சம பாகங்களாகப் பிரித்து அதற்கேற்ப உணவுப் பொருட்களை உட்கொள்வதே சிறந்த வழி. காலை உணவைத் தவிர்ப்பது அல்லது பட்டினி கிடப்பது வளர்சிதை மாற்றத்தைக் குறைக்கிறது என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
இனிப்புகளிலிருந்து விலகி இருங்கள்
இனிப்பு உணவுகள் மற்றும் பானங்களில் அதிக கலோரிகள் உள்ளன, இது உங்கள் எடை இழப்பு இலக்குகளை நாசப்படுத்தலாம். அனைத்து சோடா அல்லது சர்க்கரை பானங்களையும் தவிர்க்க முயற்சிக்கவும். இரண்டு அல்லது மூன்று கப் டீ அல்லது காபி குடிப்பது கூட உங்கள் தினசரி கலோரி அளவை அதிகரிக்கலாம். டீ, காபி அருந்துவதைக் குறைத்துக்கொள்வது நல்லது. எடை யை குறைக்க நினைப்பவர்களுக்கு கிரீன் டீ மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது கேடசின்கள் எனப்படும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகளால் ஏற்றப்படுகிறது, இது கொழுப்பை எரிக்கும் செயல்முறையை மேம்படுத்துவதாக நம்பப்படுகிறது.
மேலும் படிக்க | ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க... ‘இந்த’ மேஜிக் பானங்கள் நிச்சயம் உதவும்!
பதப்படுத்தப்பட்ட உணவை உட்கொள்வதை தவிர்க்கவும்
பதப்படுத்தப்பட்ட உணவில் டிரான்ஸ் கொழுப்பு உள்ளது, இது எடை அதிகரிக்க வழிவகுக்கும். எனவே, அனைத்து வகையான பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் தவிர்க்க வேண்டும். சர்க்கரை, மாவு மற்றும் எண்ணெய் போன்ற அனைத்து வகையான சுத்திகரிக்கப்பட்ட உணவுகளையும் கூட தவிர்க்க வேண்டும். முழு தானியங்கள், பச்சை காய்கறிகள், பழங்கள் சாப்பிடுவதில் கவனம் செலுத்துங்கள். அவை ஆரோக்கியமான மற்றும் சத்தானவை. ஊட்டச்சத்துக்கள் உங்கள் எடை இழப்புக்கு உதவும்.
உடற்பயிற்சி
உடல் எடையைக் குறைக்கும் போது, உணவுக் கட்டுப்பாடுடன் கூடவே உடற்பயிற்சி செய்வதும் முக்கியமானது. இது உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருக்கவும், அதிக கலோரிகளை எரிக்கவும், உடலை பி ஆக வைத்துக் கொள்ளவும், தசையை உருவாக்கவும் உதவுகிறது. நீங்கள் நடை பயிற்சி, ஓட்டம், ஜிம்மிங், யோகா, நீச்சல் அல்லது சைக்கிள் என எதை தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல. உங்களால் எதை கடைபிடிக்க முடியோ அதனை தேர்ந்தெடுத்து, தொடர்ந்து செய்வதே முக்கியம். நீங்கள் உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
நல்ல தூக்கம்
உடல் எடை இழக்க நல்ல தூக்கம் தேவை. மேலும், உங்கள் மோசமான தூக்க முறை உங்கள் எடை இழப்பு இலக்குகளை பாதிக்கலாம். தூக்கமின்மை அல்லது மோசமான தூக்க முறைகள் காலையில் பசியையும் எரிச்சலையும் ஏற்படுத்தும். இதனால், நீங்கள் காலையில் அதிக உணவை உண்ணலாம். இதைத் தவிர்க்க, ஒவ்வொரு இரவும் 7-8 மணிநேரம் நன்றாக தூங்க முயற்சிக்கவும்.
மேலும் படிக்க | மன அழுத்தம் முதல் நீரிழிவு வரை... வியக்க வைக்கும் ஜாதிக்காய்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ