சட்டுனு எடை குறையணுமா? இந்த ஜூஸ் குடிச்சா போதும்!!
Ginger And Lemon Juice For Weight Loss: விரைவாக எடையை குறைக்க பல வழிகள் உள்ளன. இவற்றின் மூலம் ஆரோக்கியமான வழியில் எளிதாக எடையை குறைக்கலாம்.
எடை இழப்புக்கு இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறு: இன்றைய காலகட்டத்தில் அனைவரும் ஃபிட்டாக இருக்க விரும்புகிறார்கள். அதே சமயம் உடல் பருமன் காரணமாக பல பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டியுள்ளது. அதிக கொழுப்பு, இதய பிரச்சினைகள் போன்ற உடல் உபாதைகள் எடை அதிகரிப்பு காரணமாக உருவாகின்றன. எனினும், விரைவாக எடையை குறைக்கவும் பல வழிகள் உள்ளன. இவற்றின் மூலம் ஆரோக்கியமான வழியில் எளிதாக எடையை குறைக்கலாம்.
நீங்கள் விரைவாக உடல் எடையை குறைக்க விரும்பினால், உங்கள் உணவில் எலுமிச்சை மற்றும் இஞ்சி சாறு சேர்க்க வேண்டும். எலுமிச்சை மற்றும் இஞ்சி உங்கள் தொப்பை கொழுப்பை வேகமாக கரைக்கும் வல்லமை படைத்தவையாகும். மறுபுறம், இவற்றை தினமும் உட்கொண்டால், உடல் ரீதியான பல பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறு குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் காணலாம்.
இஞ்சி மற்றும் எலுமிச்சை சாற்றின் நன்மைகள்:
வயிற்று கொழுப்பை குறைக்க:
தொப்பையை குறைக்க இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறு அருந்தலாம். வைட்டமின் சி மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் இதில் காணப்படுகின்றன. இது உங்கள் தொப்பையை குறைத்து அதன் மூலம் எடையை சமன் செய்கிறது. மேலும், கொலஸ்ட்ரால் அளவையும் இதன் மூலம் குறைக்கலாம். கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதால், இதய பிரச்சனைகள் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | Diabetes Diet: இன்சுலினை இயற்கையாக சுரக்க வைக்கும் ‘சூப்பர்’ உணவுகள்!
செரிமான அமைப்புக்கு நன்மை பயக்கும்:
நீங்கள் செரிமானம் தொடர்பான பிரச்சனைகளால் அவதிப்படுகிறீர்கள் என்றால், எலுமிச்சை மற்றும் இஞ்சி சாற்றை தினமும் உட்கொள்ள வேண்டும், ஏனெனில் அதில் உள்ள நார்ச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் உங்கள் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துகின்றன. இது உணவின் சிறந்த செரிமானத்திற்கு வழிவகுக்கிறது.
உடலில் உள்ள நச்சுகளை நீக்க
இஞ்சி மற்றும் எலுமிச்சையில் பல வகையான ஆரோக்கிய பண்புகள் காணப்படுகின்றன. இவற்றை தினமும் உட்கொள்வது உங்கள் உடலில் உள்ள நச்சுகளை நீக்க உதவுகின்றன. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட், வைட்டமின் சி ஆகியவை உங்கள் உடலில் உள்ள நச்சுத்தன்மையை நோக்கி கொழுப்பை குறைக்கிறது. அதுமட்டுமின்றி இதனை உட்கொள்வதால் இரத்த ஓட்டம் சிறப்பாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | தினமும் ஒரு கிவி பழம் செய்யும் மாயம்: ஆரோக்கிய மாயஜாலம் செய்யும் கனி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ