Diabetes Diet: இன்சுலினை இயற்கையாக சுரக்க வைக்கும் ‘சூப்பர்’ உணவுகள்!

உயர் இரத்த சர்க்கரை அளவு நீடித்தால், இதய நோய், சிறுநீரக பிரச்சினைகள், கண் அபர்வை இழப்பு மற்றும் பிற சிக்கல்களை ஏற்படுத்தும். உடலில் உள்ள ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் மிக முக்கியமான காரணிகளில் ஒன்று ஆரோக்கியமான உணவுமுறை.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 26, 2022, 08:03 PM IST
  • உயர் இரத்த சர்க்கரை அளவு நீடித்தால், இதய நோய், சிறுநீரக பிரச்சினைகள், கண் அபர்வை இழப்பு மற்றும் பிற சிக்கல்களை ஏற்படுத்தும்.
  • உடலில் உள்ள ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் மிக முக்கியமான காரணிகளில் ஒன்று ஆரோக்கியமான உணவுமுறை.
Diabetes Diet: இன்சுலினை இயற்கையாக சுரக்க வைக்கும் ‘சூப்பர்’ உணவுகள்! title=

நீரிழிவு நோய் என்பது அசாதாரணமான உயர் இரத்த குளுக்கோஸ் அளவுகளால் வகைப்படுத்தப்படும் ஒரு நிலை. ஆரோக்கியமான நபர்களில், இன்சுலின் என்ற ஹார்மோன் உடலின் செல்களுக்கு குளுக்கோஸை வழங்க உதவுகிறது. அவர்களுக்கு அத்தியாவசிய ஆற்றலை வழங்குகிறது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின், உடலில் போதுமான இன்சுலினை உற்பத்தி  இருக்காது. உயர் இரத்த சர்க்கரை அளவு நீடித்தால், இதய நோய், சிறுநீரக பிரச்சினைகள், கண் அபர்வை இழப்பு மற்றும் பிற சிக்கல்களை ஏற்படுத்தும். அதைத் தடுக்கவும், உடலில் உள்ள ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் மிக முக்கியமான காரணிகளில் ஒன்று ஆரோக்கியமான உணவுமுறை.

அந்த வகையில், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் சில உணவுகளைப் பற்றி தெரிந்து கொள்வோம். இந்த உணவுகள் இயற்கையான வகையில் உடலில் இன்சுலின் உற்பத்திக்கு உதவுகிறது. எனவே இவற்றை எடுத்துக் கொள்வதால், நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கலாம். 

இன்சுலினை இயற்கையாக சுரக்க வைக்கும் சில உணவுகள்:

வெண்டைக்காய்: 

வெண்டைக்காய் நார்ச்சத்து நிறைந்த உணவாகும், இது இரத்த சர்க்கரை அளவை கட்டுபடுத்த உதவுகிறது. இது இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கிறது. எனவே வாரத்திற்கு குறைந்த பட்சம் மூன்று முறையாவது வெண்டைக்காய் சாப்பிடுவதை வழக்கமாக வைத்து கொள்வது நல்லது. அதோடு கூடுதாலாக, மூளை சுறுசுறுப்பாக இயங்க வெண்டைக்காய் உதவுகிறது. 

மேலும் படிக்க | Health Alert: சிறுநீரக கல் இருந்தால் ‘இந்த’ உணவுகளுக்கு NO சொல்லுங்க!

இலவங்கப்பட்டை: 

இலவங்கப்பட்டையை உணவில் சேர்த்துக் கொள்வது இன்சுலின் உற்பத்திக்கு நல்லது. தேநீரில் இலவங்கப்பட்டை சேர்ப்பது அதிக நன்மை பயக்கும். இது கிட்டத்தட்ட நமது கணையம் உற்பத்தி செய்யும் இன்சுலின் அளவைப் போலவே, இன்சிலின் உற்பத்தி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பாகற்காய்: 

சர்க்கரை நோயாளிகளுக்கு பாகற்காய் மிகச் சிறந்த உணவு. இதில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் கூறுகளைக் கொண்டிருப்பதால் கணையத்தைத் தூண்டி, இன்சுலின் சுரக்க வகை செய்கிறது. 

வெந்தயம்: 

வெந்தயம்  ரத்த சர்க்கரை அளவை குறைப்பதுடன், எடையைக் கட்டுப்படுத்தவும் பயன்படுகிறது. வெந்தயத்தில் ட்ரைகோனெல்லின் உள்ளது.  இது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது. சர்க்கரை நோயாளிகள் வெந்தயத்தை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. வெந்தயத்தை இரவில் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் அந்த தண்ணீரை குடிப்பது சிறந்த பலனைத் தரும்.

மஞ்சள்:

மஞ்சளில் அதிக அளவு குர்குமின் உள்ளது. மஞ்சள் நேரடியாக கணைய பீட்டா செல்களில் செயல்பட்டு இன்சுலினை அதிகரிக்க உதவுகிறது.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Anemia: மாதுளை - பீட்ரூட் மட்டுல்ல; இதுவும் ரத்த சோகையை குணப்படுத்தும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News