Weight Loss Drink: நெல்லிக்காய் கிட்டதட்ட நூறு நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது என்கின்றனர் ஆயுர்வேத நிபுணர்கள். இதனை உட்கொள்வதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பதோடு, பல நோய்களை முழுமையாக தீர்க்கும் திறன் கொண்டது நெல்லிக்காய். வைட்டமின் சி, வைட்டமின் ஏ, வைட்டமின் பி, பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், இரும்பு, கார்போஹைட்ரேட், நார்ச்சத்து போன்ற சத்துக்கள் நிறைந்துள்ள நெல்லிக்காயில் அடங்கியுள்ள ஆரோக்கிய நன்மைகள் ஏராளம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நெல்லிக்காயின் ஆரோக்கிய நன்மைகள்


நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும், உடல் பருமனை குறைக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது. அதோடு, சரும பிரச்சினைகளை தீர்த்து, சேதமடைந்த செல்களை சரி செய்யும் திறன் இதற்கு உள்ளது. உடலில் உள்ள கொழுப்பு மற்றும் நச்சுக்களை நீக்கவும் உதவும் ஒரு சிறந்த காலை பானமாக இருக்கும் நெல்லிக்காய் ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால் பல ஆரோக்கிய நன்மைகள் (Health Tips) கிடைக்கும். அதில் ஒன்று உடல் பருமன்


வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ்


 உடல் எடையை குறைக்க தினசரி உடற்பயிற்சி மற்றும் சரியான உணவு பழக்கம் அவசியம். மேலும், உணவில் சில உணவுப் பொருட்களை சேர்ப்பதன் மூலம், எளிதாக எடையைக் குறைக்கலாம். அதில் ஒன்று 'நெல்லிக்காய் ஜூஸ்'. இதில் பல வகையான சத்துக்கள் காணப்படுகின்றன. வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருப்பதால், உடலில் உள்ள சேர்ந்துள்ள நச்சுக்களை அகற்ற உதவுகிறது. இது தவிர, இதில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. நார்ச்சத்துக்கான சிறந்த மூலமாக இருக்கும் நெல்லிக்காயை உட்கொண்டால் செரிமானம் மேம்படும். செரிமான அமைப்பு சிறப்பாக இருந்தால் தான் உடல் எடை இழப்பு சாத்தியம். நெல்லிக்காய் ஜூஸ் தயாரிக்கும் முறையை தெரிந்து கொள்வோம்.


நெல்லிக்காய் ஜூஸ் தயாரிக்கும் முறை 


தேவையான பொருட்கள்


7-5 நெல்லிக்காய், 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, சிறிது இஞ்சி, 10 புதினா இலைகள், 1 சிட்டிகை கருப்பு உப்பு, 1 சிட்டிகை சீரகம், 3 கருப்பு மிளகு, தண்ணீர்


முதலில் அனைத்து பொருட்களையும் மிக்ஸி ஜாரில் போட்டு, இப்போது 1 கிளாஸ் தண்ணீர் சேர்த்து மிக நைசாக அரைக்கவும். அதன் பிறகு இந்த தண்ணீரை ஒரு வடிகட்டி மூலம் நன்கு வடிகட்டவும். இறுதியில் புதினா இலைகளை சேர்த்து, இந்த நெல்லிக்காய் நீரை தினமும் காலையில் குடிக்கவும்.


வெறும் வயிற்றில் நெல்லிக்காய ஜூஸ்


நெல்லிக்காயை சாப்பிடுவதற்கு சற்று துவர்ப்பு மற்றும் புளிப்பு கலந்த சுவையாக இருப்பதால், பலர் அதை சாப்பிட தயங்குகிறார்கள். ஆனால் இந்த ஜூஸை காலையில் குடிப்பதால் உடல் எடை குறைவது மட்டுமின்றி உடலில் உள்ள நச்சுக்களும் நீங்கும்.


மேலும் படிக்க | எகிறும் உடல் எடையை பட்டுனு குறைக்க உதவும் பச்சை உணவுகள்: கண்டிப்பா சாப்பிடுங்க


நெல்லிக்காய் ஜூஸ் அருந்துவதாக் கிடைக்கும் பிற நன்மைகள்


நோய் எதிர்ப்பு சக்தி:


நெல்லிக்காய் ஜூஸ் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது. நெல்லிக்காய் வைட்டமின் சி ஊட்டசத்தின் நல்ல மூலமாகும். வைட்டமின் சி உடலின் வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, தொற்று நோய்கள் எதுவும் அண்டாமல் தடுக்கிறது


மலச்சிக்கல்:


மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள், ஜூஸை தவறாமல் எடுத்துக் கொள்வது வியக்கத்தக்க பலன்களைத் தரும். நெல்லிக்காய் சாறு ஒரு இயற்கை மலமிளக்கி என்பதால், மலச்சிக்கலை போக்க உதவும். செரிமானம் தொடர்பான பிரச்சனைகளுக்கு மாமருந்தாக இருக்கும்.


முக்கிய குறிப்பு


ஒரு நாளைக்கு ஒன்று முதல் இரண்டு தேக்கரண்டி ஆம்லா ஜூஸ் என்ற அளவில் தொடங்குவது நல்லது. இருப்பினும், விரும்பிய பலன்களை அடைய, குறைந்தபட்ச அளவோடு தொடங்கி, பின்னர் படிப்படியாக அதை அதிகரிப்பது முக்கியம். நெல்லிக்காய் சாற்றை அதிக அளவு உட்கொள்வது சிலருக்கு வயிற்றுப்போக்கு உள்ளிட்ட எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக் கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | ஜிம் வேண்டாம், டயட் வேண்டாம்: சட்டுனு எடை குறைக்க வீட்டிலேயே இப்படி பண்ணுங்க போதும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ