இஞ்சி இடுப்பழகி ஆகணுமா... ஒரே வாரத்தில் 2 கிலோ எடைய குறைய ‘சில’ டிப்ஸ்!

Weight loss tips in Tamil: உடல் எடையை குறைக்க, உடற்பயிற்சி மட்டும் போதாது. உணவு முறையுஇல் மாற்றம் செய்தால் மட்டுமே எடை இழப்பு சாந்தியமாகும்.

உடல் எடையை குறைக்க, சரியான உணவு முறையை பின்பற்றினால் ஒரு வாரத்தில் இரண்டு கிலோ எடையை குறைக்கலாம் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

1 /7

உடல் பருமன் குறைய  வளர்ச்சியை மாற்றம் என்ன மெட்டபாலசத்தை அதிகரிப்பதன் மூலம் கூடுதல் கலோரிகள் எரிக்கப்பட்டு உடல் பருமன் குறையும். இதற்கு சீரகம், ஓமம், லவங்கப்பட்டை ஆகியவை சேர்த்த நீரை வெறும் வயிற்றில் அருந்துவது பலனளிக்கும்.

2 /7

பழங்கள் மற்றும் காய்கறிகளில் நார்ச்சத்துக்கள், வைட்டமின்கள் தாதுக்கள் ஆகியவை நிறைந்துள்ளன. இதை உடல் எடை குறைக்க மிகவும் உதவும். அதிலும் பருவ கால பழங்கள் மற்றும் காய்கறிகள் மிகவும் சிறந்தது.

3 /7

உடல் எடையை குறைக்க புரதச்சத்து மிகவும் முக்கியம். அந்த வகையில் முட்டையை கொள்ளலாம். முட்டை பிடிக்காதவர்கள், சோயா உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.

4 /7

முழு தானிய உணவுகள், குறைவான கலோரிகள் மற்றும் அதிக ஊட்டச்சத்துக்கள் கொண்டவை. அரிசியின் அளவை குறைத்து தானியங்களை அதிகம் எடுத்துக் கொள்வதால் உடல் பருமன் வெகுவாக குறையும்.

5 /7

ஆரோக்கியமான கொழுப்பு அமிலம் நிறைந்த உலர் பழங்கள், உடல் எடையை குறைக்க மிகச் சிறந்தவை. பாதாம், முந்திரி போன்றவற்றை, ஊற வைத்து சாப்பிடுவதால் அதிக பலன் பெறலாம்.

6 /7

முளைகட்டிய தானியங்கள், உடல் எடை குறைப்பதற்கான சிறந்த உணவு, முளைகட்டிய பயறுகளை பச்சையாக சாப்பிடுவதை விட வேக வைத்து சாப்பிடுதல் மிகவும் நல்லது.

7 /7

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.