Weight Loss Tips: உடல் எடையை குறைக்க ரவையா? கடலை மாவா? எது சிறந்தது?
Weight Loss Tips: உடல் பருமனை எப்படி கட்டுப்படுத்துவது? உணவில் எந்த விதமான மாற்றங்களை செய்வது? இப்படி பல கேள்விகள் நம் மனதில் இருந்துகொண்டே இருக்கின்றன.
உடல் எடையை குறைக்கும் குறிப்புகள்: உடல் எடை அதிகரிப்பது நம்மில் பலருக்கு உள்ள மாபெரும் பிரச்சனையாக உள்ளது. இதை எப்படி கட்டுப்படுத்துவது? உணவில் எந்த விதமான மாற்றங்களை செய்வது? இப்படி பல கேள்விகள் நம் மனதில் இருந்துகொண்டே இருக்கின்றன. நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல அன்றாட உணவுப்பொருட்களில் சிலவற்றை பயன்படுத்துவதால்தான் நம் உடல் எடை அதிகரிக்கிறதோ என்ற சந்தேகமும் நம்மில் பலருக்கு வருவதுண்டு. ரவை, கடலை மாவு ஆகியவை நமது உணவில் அடிக்கடி பயன்படுத்தப்படும் பொருட்களாகும்.
இவற்றின் பயன்பாடு, ஆரோக்கியமான, ஆரோக்கியமற்ற என இரு வகையான உணவுப்பண்டங்களை தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றைக் கொண்டு டோக்லா, காய்கறிகளின் போண்டா, பஜ்ஜி, சில்லா, முறுக்கு, இனிப்பு வகைகள் போன்ற ஏராளமான தின்பண்டங்கள் செய்யப்படுகின்றன. உடல் எடையை குறைக்க, பெரும்பாலானோர் காலை உணவில் ரவை மற்றும் கடலை மாவை பயன்படுத்துகிறார்கள். இவற்றை சாப்பிடுவதை ஆரோக்கியமானதாக கருதுகின்றனர். அதே சமயம் உடல் எடையை வேகமாக குறைக்க ரவை சிறந்ததா அல்லது கடலை மாவு சிறந்ததா என்ற குழப்பம் பலரிடையே உள்ளது. அதற்கான விடையை இந்த பதிவில் காணலாம்.
கலோரி அளவு
100 கிராம் ரவையில் 360 கலோரிகள் உள்ளன. அதே நேரத்தில், 100 கிராம் கடலை மாவில் 387 கலோரிகள் காணப்படுகின்றன. ஆகையால், இரண்டிலும் கலோரிகளின் அளவு குறைவாகவே உள்ளது. உடல் எடையை குறைக்க இவை இரண்டுமே பயனுள்ளதாக இருக்கும்.
மேலும் படிக்க | நீரிழிவு நோயை சிறப்பாக கட்டுப்படுத்தும் பிரியாணி இலை! பயன்படுத்துவது எப்படி!
எடை இழப்புக்கு கடலை மாவின் நன்மைகள்
கடலை மாவில் நார்ச்சத்து உள்ளது. இது எடை கட்டுப்பாட்டிற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கடலை மாவில் உள்ள பொட்டாசியம், இரும்பு மற்றும் மெக்னீசியம் எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் கடலை மாவு கொண்டு செய்யப்பட்ட உணவுகளை உட்கொள்வதால், கொலஸ்ட்ரால் அளவு கட்டுப்படும்.
எடை இழப்புக்கு ரவையின் நன்மைகள்
உடல் எடையை வேகமாக குறைக்க வேண்டும் என்றால் ரவையை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். ரவையில் நார்ச்சத்து உள்ளது. இது உடல் எடையை குறைக்க உதவுகிறது. ரவையால் செய்யப்பட்ட காலை உணவை உட்கொள்வது நீண்ட நேரம் பசியை ஏற்படுத்தாமல் இருக்கும். ஆகையால், தேவை இல்லாதவற்றை அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். ரவையில் கலோரிகளின் அளவும் மிக குறைவாக உள்ளது. இது எடையைக் குறைக்க பயனுள்ளதாக இருக்கும்.
எடை இழப்புக்கு கடலை மாவா? ரவையா? எது சிறந்தது?
கடலை மாவு மற்றும் ரவை இரண்டும் உடல் எடையை குறைக்கும். உடல் எடையை குறைக்க, ரவை உப்மா மற்றும் கடலை மாவு கொண்டு செய்யப்படும் சில்லா ஆகிய இரண்டையும் உட்கொள்ளலாம். எனினும், கடலை மாவு சில்லா எடையைக் குறைக்க அதிக நன்மை பயக்கும். ரவையில் கிளூடனின் அளவு அதிகம் காணப்படுகிறது. ஆனால், கடலை மாவில் கிளூடன் இல்லை. ஆகையால், உடல் எடையை குறைக்க ரவையை விட கடலை மாவு கொண்ட சில்லாவை காலை உணவாக சாப்பிடுவது அதிக நன்மை பயக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | உடல் எடை கட்டுக்கடங்காமல் ஏறுதா? இவற்றை பயன்படுத்தினால் சட்டுனு குறையும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ