Weight Loss Tips: பெரும்பாலான மக்கள் எடை அதிகரிப்பால் மிகவும் சிரமப்படுகிறார்கள். எடை அதிகரிப்பதற்கு உங்கள் உணவே முக்கிய காரணமாகும். அன்றாட வாழ்க்கையில் தேவை இல்லாத, ஆரோக்கியமற்ற உணவை சாப்பிடுவது உங்கள் உடலில் தவறான விளைவை ஏற்படுத்துகிறது. எடை அதிகரிப்பால் பல நேரங்களில் பலர் பல சங்கடங்களுக்கு ஆளாவது உண்டு. அதிகரிக்கும் எடையை குறைப்பது அனைவருக்கும் பெரிய சவாலாகவே உள்ளது. உடலில் உள்ள கொழுப்பை குறைக்க பல வித முயற்சிகளை எடுக்கிறோம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பலருக்கு தொப்பை விழுதல் மிகப்பெரிய பிரச்சனை ஆகி வருகிறது. ஒரு முறை தொப்பை (Belly Fat) வர துவங்கிவிட்டால், அதை குறைப்பது மிகப் பெரிய பணியாகி விடுகிறது. தொப்பையில் சேரும் கொழுப்பை குறைப்பது மிக கடினமான விஷயமாக உள்ளது. எவ்வளவு விரைவாக தொப்பை வந்துவிடுகிறதோ, அதை குறைப்பது அதே அளவு கடினமாக இருக்கிறது. நம்மில் பலர் உடல் எடையை குறைக்க பல வித முயற்சிகளை எடுக்கிறோம். கடுமையான உடற்பயிற்சிகளை செய்கிறோம், பல வித உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறோம். எனினும், சில இயற்கையான எளிய வழிகளின் மூலமாகவும் உடல் எடையை குறைக்க முடியும் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். 


சில சமயங்களில் பல வித முயற்சிகளை எடுத்த பின்னரும் உடல் எடை குறையாமல் இருப்பதை நாம் கவனித்துள்ளோம். இதற்கு உடலில் உள்ள ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வு (Hormonal Imbalance) காரணமாக இருக்கலாம். இந்த பிரச்சனை பெண்களிடம் காணப்படுகிறது. இது முக்கியமாக உடலில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் அளவு பாதிக்கப்படுவதால் நிகழ்கிறது. உடலில் இந்த ஹார்மோனின் அளவு அதிகரிப்பதால், இன்னும் பல ஹார்மோன்களின் சமநிலையும் பாதிக்கப்படுகின்றது. 


உடல் எடை குறையாமல் இருப்பதற்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் தான் காரணம் என்பதை எப்படி தெரிந்துகொள்வது? ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அதிகரிப்பதால் உடலில் பல அறிகுறிகளும் தோன்ற ஆரம்பிக்கும். இந்த ஹார்மோன் உங்கள் எடை இழப்பு பயணத்தை பல வழிகளில் பாதிக்கலாம். உடல் எடை குறையாமல் இருப்பதற்கு காரணம் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு என்றால், இந்த பிரச்சனையில் இருந்து விடுபடுவது எப்படி? உடலில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அதிகரிப்பதற்கான அறிகுறிகளையும், எடை இழப்புக்கான ஹார்மோன்களை சமநிலையில் வைத்திருக்க சில எளிய வழிகள் உள்ளன. அவற்றை பற்றி இங்கே காணலாம். 


ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அதிகரிப்பதற்கான அறிகுறிகள் (Symptoms Of Increased Estrogen Hormone) 


- மாதவிடாய் காலத்தில் கடுமையான மற்றும் வலிமிகுந்த இரத்தப்போக்கு


- அடிக்கடி மாறும் மனநிலை 


- எப்போதும் சோர்வாக உணர்வது


- வாயுத்தொல்லை அல்லது உப்பச பிரச்சனை


இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் உடனடியாக ஒரு மருத்துவரை அணுக வேண்டும். மேலும் வாழ்க்கை முறையிலும் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும்.


மேலும் படிக்க | No Sugar Diet: எந்த உணவுகளை சாப்பிடலாம்? எதை தவிர்க்க வேண்டும்? முழு பட்டியல் இதோ


எடை இழப்புக்கு ஹார்மோன்களை சமநிலைப்படுத்த 3 வழிகள்: 


1. சீட் சைக்ளிங் (Seed Cycling) 


மாதவிடாய் சுழற்சியின் முடிவில் இருந்து அண்டவிடுப்பு வரை (1 முதல் 14 நாட்கள் வரை) தினமும் 1 தேக்கரண்டி ஆளிவிதை மற்றும் பூசணி விதைகளை சாப்பிடுங்கள். அண்டவிடுப்பிற்கு பின் வரும் 15-28 நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் 1 தேக்கரண்டி எள் மற்றும் சூரியகாந்தி விதைகளை சாப்பிடுங்கள்.


2. வைட்டமின் டி தேவை


தினமும் காலை அல்லது மாலை 10-15 நிமிடங்கள் சூரிய ஒளியில் அமர முயற்சி செய்யுங்கள். மேலும், ஆரோக்கியமான கொழுப்புகளை சாப்பிடுங்கள். இது இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் பலப்படுத்தும்.


3. சீசனல் கேரட் சாப்பிடுங்கள்


கேரட் சாப்பிடுவது அதிகப்படியான ஈஸ்ட்ரோஜனை பிணைக்க அல்லது கட்டுப்படுத்த உதவுகிறது. கூடுதலாக, இது உடலில் இருந்து அதிகப்படியான ஈஸ்ட்ரோஜனை அகற்ற உதவுகிறது.


மேலும் படிக்க | கொத்தமல்லியில் கொத்து கொத்தாய் கொட்டிக்கிடைக்கும் நன்மைகள்.. பல பிரச்சனைகளுக்கு ஒரே வீட்டு வைத்தியம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ