உடல் எடையை குறைக்க இந்நாட்களில் பலரும் பல வித முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். சிலர் ஜிம் செல்கிறார்கள், சிலர் கடுமையான டயட்டில் இருக்கிறார்கள். ஆனால் உடல் எடையை குறைக்க, மிகவும் கடினமான விஷயங்களைதான் செய்ய வேண்டும் என்பதில்லை. இயற்கையான, எளிய முறைகளிலும் உடல் எடையை குறைக்கலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கூடுதல் கிலோவை குறைக்க விரும்புபவர்கள் பொதுவாக குறைந்த கலோரிகள் மற்றும் நார்ச்சத்து மற்றும் புரதம் அதிகம் உள்ள உணவுகள் மற்றும் பானங்களை உட்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆனால் இவற்றை எப்படி சரியாக உணவில் சேர்த்துக்கொள்வது? சிறியதாக ஆரம்பித்து படிப்படியாக மாற்றங்களைச் செய்வது நல்லது. இதற்கான தொடக்கமாக, உங்கள் பொதுவான உணவுகள் மற்றும் பானங்களுக்கான ஆரோக்கியமான மாற்று உணவுகள் மற்றும் பானங்களை இந்த பதிவில் வழங்கியுள்ளோம். இவற்றால் கண்டிப்பாக உடல் எடை நன்றாக குறையும். 


 உடல் எடையை குறைக்க உதவும் 8 எளிதான உணவு மற்றும் பான மாற்றங்கள்:


1. வழக்கமான மாவுக்குப் பதிலாக தினை மாவைத் தேர்வு செய்யவும்


ராகி போன்ற தினைகளை ரொட்டிகள் செய்ய பயன்படுத்தவும். சுத்திகரிக்கப்பட்ட மாவில் (மைதா) நார்ச்சத்து இல்லை. மேலும் இவற்றில் அதிக கலோரிகள் உள்ளன. இது எடை அதிகரிப்பு மற்றும் உடல் பருமனுக்கு வழிவகுக்கும். அதற்கு பதிலாக, ராகி மாவு, கேழ்வரகு, சாமை போன்ற தினை மாவை தேர்வு செய்யவும். இந்த மாற்றுகள் நார்ச்சத்து நிறைந்தவை மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் எடை இழப்புக்கு உதவும் அத்தியாவசிய தாதுக்களால் நிரம்பியுள்ளன. ரொட்டிகள், பராத்தா, தோசை, இட்லி, உப்மாக்கள் போன்ற சிற்றுண்டிகள் செய்ய தினையைப் பயன்படுத்தவும்.


2. வெள்ளை அரிசிக்குப் பதிலாக பிரவுன் ரைஸைச் சாப்பிடுங்கள்: 


வெள்ளை அரிசிக்கு பதிலாக நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்த முழு தானியமான பழுப்பு அரிசியைத் தேர்வு செய்யவும். இது உங்களை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்கும் மற்றும் செரிமானத்திற்கு உதவும். பிரவுன் அரிசி குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது, இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. 


3. பேக்கேஜ் செய்யப்பட்ட தானியங்களுக்குப் பதிலாக ஓட்ஸ் சாப்பிடுங்கள்:


பலர் பேக்கேஜ் செய்யப்பட்ட தானியங்கள் (சீரியல்ஸ்) சத்தானவை என்று கூறுகின்றனர். ஆனால் பெரும்பாலும் சர்க்கரை, ஆரோக்கியமற்ற கொழுப்புகள் மற்றும் செயற்கை சேர்க்கைகள் இவற்றில் அதிகம் இருக்கும். அதற்கு பதிலாக ஓட்ஸ் சாப்பிட்டு உங்கள் நாளைத் தொடங்குங்கள். ஓட்ஸில் நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்துள்ளது. இது நீடித்த ஆற்றலை வழங்குகிறது மற்றும் எடை இழப்புக்கு உதவுகிறது. 


4. சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைக்கு பதிலாக பேரீச்சம்பழம் / வெல்லம் 


பேரிச்சம்பழம் ஊட்டச்சத்துக்களின் ஆற்றல் மையமாகும். சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை எடை அதிகரிப்பு உட்பட பல்வேறு உடல்நல அபாயங்களை ஏற்படுத்துகிறது. அதை முற்றிலுமாக அகற்றுவது சவாலானதாக இருந்தாலும், வெல்லம், பேரிச்சம்பழம் அல்லது ஆர்கானிக் தேன் போன்ற இயற்கை மாற்றங்களைப் பயன்படுத்துவதன் மூலம் இந்த முயற்சியை தொடங்கலாம். வெல்லம் இன்னும் ஒரு வகையான சர்க்கரையாக இருப்பதால் அதை மிதமாக உட்கொள்ள மறக்காதீர்கள். மறுபுறம், டேட்ஸ் ஒரு சிறந்த மாற்றாக இருக்கும். அவற்றில் புரதம், நார்ச்சத்து, இரும்பு, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவை  நிறைந்துள்ளன.


மேலும் படிக்க | கெட்ட கொழுப்பால் அவதியா? இந்த ஏழரையில் இருந்து விடுவிக்க உதவும் 7 பானங்கள்


5. வறுத்த சிப்சுக்கு பதிலாக மக்கானாவை (தாமரை விதை) தேர்வு செய்யவும்


சிற்றுண்டி சாப்பிடும்போது, சரியான தேர்வுகளை செய்வது அவசியம். வறுத்த தின்பண்டங்கள், கவர்ச்சியாக இருந்தாலும், எடை இழப்புக்கு ஏற்றது அல்ல. இதற்கு மக்கானா என்று அழைக்கப்படும் தாமரை இலை ஒரு சிறந்த மாற்றாக இருக்கலாம். வீட்டில் உங்களுக்கு விருப்பமான மசாலாப் பொருட்களுடன் இவற்றை எளிதாக சுவைக்கலாம். மக்கானாவில் கலோரிகள் குறைவாகவும், புரதச்சத்து அதிகமாகவும் உள்ளது. 


6. சாஸுக்கு பதிலாக சட்னி


டிப்ஸ் மற்றும் சாலட் டிரஸ்ஸிங்காகப் பயன்படுத்தப்படும் ரெடிமேட் சாஸ்களுக்கு பதிலாக சட்னிகளை பயன்படுத்தவும். சாஸ்கள் பெரும்பாலும் ஊட்டச்சத்து மதிப்பு இல்லாதவை. அவை ஆரோக்கியமற்ற அளவு சர்க்கரை, உப்பு மற்றும் டிரான்ஸ்/நிறைவுற்ற கொழுப்புகளைக் கொண்டிருக்கின்றன. உங்கள் உணவின் சுவையை அதிகரிக்க இந்த சாஸ்களுக்கு பதிலாக வீட்டில் செய்யப்படும் சட்னிகளை உட்கொள்ளலாம். சட்னிகளில் பொதுவாக வைட்டமின்கள் மற்றும் ஆண்டிஆக்சிடெண்டுகள் நிரம்பியுள்ளன.


7. குளிர் பானங்களுக்கு பதிலாக வீட்டில் செய்யப்பட்ட சாறுகள்


சோடாக்கள் மற்றும் கோலாக்கள் போன்ற கார்பனேற்றப்பட்ட பானங்களில் சர்க்கரை மற்றும் இரசாயனப் பொருட்கள் நிரம்பியுள்ளன. அவை உடல் பருமன் மற்றும் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கின்றன. இவற்றுக்கு பதிலாக சாதாரண சோடா அல்லது சர்க்கரை இல்லாத வீட்டில் தயாரிக்கப்பட்ட குளிர்விப்பான்களைத் தேர்ந்தெடுக்கவும். 


8. வழக்கமான தேநீருக்குப் பதிலாக மூலிகை தேநீர் அருந்துவது 


வழக்கமான தேநீர் இயல்பிலேயே ஆரோக்கியமற்றது அல்ல. ஆனால் அதில் அதிகப்படியான சர்க்கரை மற்றும்/அல்லது முழு கொழுப்புள்ள பால் இருந்தால் எடை இழப்பு இலக்குகளைத் தடுக்கலாம். இதற்கு மாற்றாக மூலிகை டீகளை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். அவை உடலில் இதமான விளைவுகளை ஏற்படுத்தும். ஹெர்பல் டீயில் உங்கள் எடை இழப்பு பயணத்தை ஆதரிக்கும் இயற்கை சேர்மங்கள் உள்ளன.


மேலும் படிக்க | நீரிழிவு நோய் இருப்பவர்கள் இந்த 3 ஜூஸ் குடித்தால் சர்க்கரையை கட்டுப்படுத்தலாம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ