இன்றைய துரிதமான வாழ்க்கையில் நேரத்தை மிச்சப்படுத்தவும், வாழ்க்கையை எளிதாக்கவும் நாம் பல சுறுக்கு வழிகளை பின்பற்றுகிறோம். நம்மில் பலருக்கு, குறிப்பாக, வேலை செல்லும் பெண்களுக்கு, போதுமான நேரம் இல்லாத காரணத்தினால், ஒரு நாள் முன்னதாகவே திட்டமிட்டு சமைத்து பிரிட்ஜில் வைத்து சேமித்து, பின்னர் சூடுபடுத்தி சாப்பிடும் பழக்கம் உள்ளது.

பீட்ரூட், கீரை வகைகளைப் போல அதிக நைட்ரேட்ஸை உள்ளடக்கியது. அதனால் பீட்ரூட்டையும் மீண்டும் சூடுசெய்து பயன்படுத்தக் கூடாது.
பொரித்த அல்லது வேகவைத்த முட்டையை மீண்டும் சூடாக்கி சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். இதன் காரணமாக வயிற்று வலி உண்டாகலாம்.
உருளைக்கிழங்கை பிரிட்ஜில் வைத்து மீண்டும் சூடாக்கும் போது அதில் அரிய வகை நுண்ணுயிரிகளின் வளர்ச்சி ஏற்படுகிறது. இது செரிமான அமைப்பில் எதிர்மறையான பாதிப்பை ஏற்படுத்துகிறது.
கீரையை மீண்டும் சூடாக்கி சாப்பிடுவதன் மூலம் புற்றுநோய் ஏற்படக் கூடும். மீண்டும் சூடாக்கப்பட்ட பிறகு அதில் உள்ள நைட்ரேட்டுகள் வேறு ஒரு பொருளாக மாறுகிறது.
பழைய சாதத்தை பிரிட்ஜில் வைத்து மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிட்டால், அதில் நச்சுத்தன்மை அதிகரித்து, ஃபுட் பாய்சனாக மாறிவிடும்.