கொழுப்பு கரைய.. எடை குறைய... காலையில் இதை மட்டும் பண்ணுங்க போதும்!!
Weight Loss: சில எளிய எடை குறைப்பு குறிப்புகள் பற்றி இந்த பதிவில் காணலாம். இவற்றின் உதவியால் உடலின் பிடிவாதமான கொழுப்பையும் கரைத்து, உடல் எடையையும் குறைத்து ஆரோக்கியமாக வாழ முடியும்.
எடை இழப்பு குறிப்புகள்: இன்றைய காலகட்டத்தில் உடல் எடை அதிகரிப்பு முக்கிய பிரச்சனையாக மாறியுள்ளது. இந்தியா மட்டுமின்றி, உலகெங்கிலும் உள்ள பலர் இந்த சிக்கலை எதிர்கொள்கின்றனர். இதன் காரணமாக அதிக கொலஸ்ட்ரால், அதிக இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மாரடைப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதை கட்டுப்படுத்த கட்டாயமாக உணவில் மாற்றங்களைச் செய்ய வேண்டும், இல்லையெனில் பிரச்சனை அதிகரிக்கலாம்.
உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாடு ஆகியவை எடையைக் குறைக்க மிகவும் பயனுள்ள வழிகளாக கருதப்படுகின்றன. ஆனால், பிஸியான வாழ்க்கை முறையால் உடற்பயிற்சி போன்றவற்றுக்கு நேரத்தை ஒதுக்க முடியாமல் தவிப்பவர்கள் ஏராளம். அதே சமயம் உணவுக் கட்டுப்பாடு என்பது சொல்வதற்கு வேண்டுமானால் எளிதாக இருக்கலாம், ஆனால் உண்மையில் கடைபிடிக்க இது அத்தனை எளிதல்ல.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், மக்களுக்கு பெரும்பாலும் உடல் எடையை குறைப்பது மிகவும் கடினமாக இருக்கிறது. ஆனால் தீவிர உடற்பயிற்சிகள் செய்து, நாம் உட்கொள்ளும் உணவில் மிகவும் கட்டுப்பாட்டுடன் இருந்தால் மட்டுமே நாம் நமது உடல் எடையை குறைக்க முடியும் என்பதல்ல. சில இயற்கையான எளிய வழிகளின் மூலமாகவும் நாம் நமது உடல் எடையை குறைக்க முடியும்.
இதுபோன்ற சில எளிய எடை குறைப்பு குறிப்புகள் பற்றி இந்த பதிவில் காணலாம். இவற்றின் உதவியால் உடலின் பிடிவாதமான கொழுப்பையும் கரைத்து, உடல் எடையையும் குறைத்து ஆரோக்கியமாக வாழ முடியும்.
மேலும் படிக்க | தொங்கும் தொப்பையை குறைக்கணுமா? அப்போ இந்த டிப்ஸ் கட்டாயம் பயன் தரும்
சீரக தண்ணீர்
காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சீரகத் தண்ணீரைக் குடிப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. மேலும், இந்த நீர் எடை குறைப்பதில் மிகவும் நல்ல விளைவைக் காட்டுகிறது. சீரகம் ஆயுர்வேத பண்புகள் நிறைந்தது. மேலும் அதன் நன்மைகள் எடை குறைப்பதிலும் காணப்படுகிறது. சீரக நீர் தயாரிக்க, இரவில் ஒரு ஸ்பூன் சீரகத்தை ஒன்றரை கிளாஸ் தண்ணீரில் கொதிக்க வைக்கவும். தண்ணீரின் நிறம் மாறி, பாத்திரத்தில் உள்ள தண்ணீர் ஒரு கிளாஸ் அளவுக்கு காய்ந்து குறைந்ததும், அடுப்பை அணைத்து, தண்ணீரை மூடி வைக்கவும். மறுநாள் காலையில் இந்த நீரை லேசான சூட்டில் குடிக்கவும். வயிற்றில் உள்ள கொழுப்பைக் குறைப்பதிலும், முழு உடல் எடையைக் குறைப்பதிலும் சீரக நீர் மிகவும் உதவியாக இருக்கும்.
சூடான தண்ணீர்
வெறும் வயிற்றில் சீரகத் தண்ணீரைக் குடித்து உங்கள் நாளைத் தொடங்கவில்லை என்றால், வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரையாவது கண்டிப்பாக குடிக்கவும். ஆனால், நீங்கள் காலையில் சீரகத் தண்ணீரைக் குடித்திருந்தால், காலை உணவுக்கு 20 நிமிடங்களுக்குப் பிறகு, வெதுவெதுப்பான நீரை குடிக்கவும். இது தவிர, பகலில் எப்போது உணவு சாப்பிட்டாலும், 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரை அருந்தலாம். இது எடையில் நல்ல விளைவைக் காட்டுகிறது. மேலும் எடையைக் குறைக்க உதவுகிறது.
புரதம் நிறைந்த காலை உணவு
இந்த ஒரு காலைப் பழக்கம் உங்கள் உடலை கட்டுக்கோப்பாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கும். புரோட்டீன் நிறைந்த காலை உணவு எடை இழப்புக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். முட்டை, பால், பருப்பு, பாதாம், சோயாபீன்ஸ், டோஃபு, க்ரீக் யோகர்ட், வேர்க்கடலை ஆகியவற்றை காலை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இந்த காலை உணவு உடலுக்கு நல்லது. இது உடல் எடையை வேகமாக குறைக்க உதவுகிறது. இது தவிர, நீங்கள் காலை உணவை ஒருபோதும் தவிர்க்கக்கூடாது என்பதில் சிறப்பு கவனம் செலுத்துங்கள். காலையில் சரியான நேரத்தில் காலை உணவை உட்கொள்ளாவிட்டால், அது எடை அதிகரிக்க காரணமாகின்றது.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை ஏற்றுக்கொள்ளும் முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | நரை முடி உங்களை பாடாய் படுத்துகிறதா? இந்த மூலிகை எண்ணெயை ட்ரை செய்யலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ