சட்டுனு எடை குறையணுமா... பட்டுனு காலையில் இதை பன்ணுங்க: சூப்பரா குறையும்

Weight Loss Tips: சில எளிய பழக்கங்களை கடைபிடித்தால் உடல் பருமனையும், அதிக எடையையும் குறைக்கலாம். அவற்றை பற்றி இங்கே காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 6, 2023, 02:49 PM IST
  • அதிகாலையில் எழுந்திருங்கள்.
  • காலை உணவில் புரதத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.
  • அதிக தண்ணீர் குடிக்கவும்.
சட்டுனு எடை குறையணுமா... பட்டுனு காலையில் இதை பன்ணுங்க: சூப்பரா குறையும் title=

உடல் எடையை குறைக்க நாம் பல வழிகளில் முயற்சி செய்கிறோம். குறிப்பாக தொப்பை வந்துவிட்டால், அதை சரி செய்வது மிக கடினமாகிவிடுகிறது. உடல் எடையை குறைக்க நமது வாழ்க்கை முறையில் மாற்றங்களை கொண்டு வர வேண்டியது மிக அவசியமாகும். எடை அதிகரிப்பதற்கு உங்கள் உணவே முக்கிய காரணமாகும். அன்றாட வாழ்க்கையில் தேவை இல்லாத, ஆரோக்கியமற்ற உணவை சாப்பிடுவது உங்கள் உடலில் தவறான விளைவை ஏற்படுத்துகிறது. எடை அதிகரிப்பால் பல நேரங்களில் பலர் பல சங்கடங்களுக்கு ஆளாவது உண்டு. குறிப்பாக பருவ நிலைக்கு ஏற்ப நாம் நமது உடல் எடையை குறைக்க வெவ்வேறு வழிகளை கையாள வேண்டும்.

தற்போது நாடு முழுவதும் வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. கோடை காலத்தில் நம் உடல் பருமன் அதிகரிக்காமல், உடல் எடையை குறைக்க உதவக்கூடிய சில வழிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

கோடை காலத்தில் உடல் எடையை குறைக்கும் குறிப்புகள்: 

இன்றைய காலகட்டத்தில் உடல் எடை அதிகரிப்பது அனைவருக்கும் உள்ள ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. உடல் பருமனைக் குறைக்க பலர் பல வழிகளில் போராடினாலும், அதை வெற்றிகரமாக செய்ய முடிவதில்லை. அன்றாட வாழ்வில் நாம் பின்பற்றும் சில பழக்கவழக்கங்களால் நமது உடல் எடை மீது தாக்கம் இருக்கும் என்றும் இவை உடல் பருமன் அதிகரிப்பதற்கான காரணங்களாக அமையும் என்றும் சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். சிலர் உடல் பருமனை குறைக்க வெந்நீரை குடிக்கிறார்கள். சிலர் காலையில் லெமன் டீ குடிக்கிறார்கள். அதேசமயம் சிலர் மிக கடுமையான உடற்பயிற்சிகளையும் செய்கிறார்கள். ஒவ்வொருவரும் அவரவர் தேவைக்கும், வழக்கத்திற்கும் ஏற்றவாறு எடை குறைப்பு முயற்சிகளைப் பின்பற்றுகிறார்கள்.

தொப்பை கொழுப்பைக் குறைக்க விரும்பும் நபர்கள் சில காலை வழக்கங்களை கடைபிடித்தால் எடை குறைக்கும் முயற்சியில் பெரிய உதவி கிடைக்கும். சில நேரங்களில் உடலில் சேர்ந்துள்ள கொழுப்புகள் மிகவும் அடர்த்தியாக மாறிவிடுகிறது. எத்தனை விதமான முயற்சிகள் எடுத்தாலும் இவற்றை குறைப்பது மிக கடினமாக மாறி விடுகின்றது. சில எளிய பழக்கங்களை கடைபிடித்தால் உடல் பருமனையும், அதிக எடையையும் குறைக்கலாம். அவற்றை பற்றி இங்கே காணலாம். 

தொப்பை கொழுப்பை குறைக்க வழிகள்:

1. அதிக தண்ணீர் குடிக்கவும்:

காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரை குடித்தால், அது உடலுக்கு பல நன்மைகளைத் தரும். இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. இதன் மூலம் உடலில் இருந்து நச்சுகள் வெளியேற்றப்படுகின்றன. மேலும், காலையில் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பது உடலில் அதிக கலோரிகளை எரிக்க உதவுகிறது. மேலும் அதிக தண்ணீர் குடிப்பதால் உடல் நீரேற்றத்துடன் இருக்கும். தண்ணீர் குடிப்பதால் சருமம் பளபளக்கும். வெறும் தண்ணீர் குடிப்பதோடு, தண்ணீரில் எலுமிச்சை சாற்றை பிழிந்து குடிப்பதும் அதிக பலன்களை அளிக்கலாம். 

2. காலை உணவில் புரதத்தை எடுத்துக் கொள்ளுங்கள்

எப்போதும் காலை உணவில் புரோட்டீன் நிறைந்த உணவை உட்கொள்வது நல்லது. முடிந்த வரை காலை உணவை வீட்டிலேயே உட்கொள்வது நல்லதாகும். காலை உணவில் புரதத்தை சேர்த்துக் கொள்வது உடல் எடையை குறைக்க உதவும். காலை உணவை ஒருபோதும் தவிர்க்கக் கூடாது. ஏனெனில் காலை உணவை தவிர்ப்பது பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். காலை உணவில் புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது பசியைக் குறைக்கிறது. மேலும் இது வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கிறது. காலை உணவில் புரதத்திற்காக முட்டை, பால், பனீர், பருப்பு வகைகள், பாதாம், டோஃபு, வேர்க்கடலை ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளலாம்.

மேலும் படிக்க | சர்க்கரை நோயா... உடல் பருமன் குறையணுமா... ‘இந்த’ சர்க்கரைகளை தாராளமா சாப்பிடலாம்!

3. வொர்க்அவுட் ரொட்டீன்

உடல் பருமனை குறைக்க, முதலில் உடற்பயிற்சி செய்வது மிக அவசியமாகும். உடற்பயிற்சி செய்வது எடையைக் குறைப்பது மட்டுமல்லாமல், ஆரோக்கியமற்ற உணவுகளுக்குப் பதிலாக, ஆரோக்கியமான உணவில் நமது நாட்டமும் அதிகரிக்கும். ஆகையால் தினமும் காலையில் உடற்பயிற்சிக்குப் பிறகு ஆரோக்கியமான காலை உணவை உட்கொள்ளுங்கள்.

4. அதிகாலையில் எழுந்திருங்கள்

எப்போதும் அதிகாலையில் எழுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் எப்போதும் போதுமான அளவு தூங்கி அதிகாலையில் எழுந்திருக்க வேண்டும். இரவில் சீக்கிரம் தூங்கி காலையில் சீக்கிரம் எழுந்திருப்பது மிகவும் நல்ல ஒரு வழக்கமாகும். இது முக்கியமானது, ஏனென்றால் போதுமான தூக்கம் கிடைத்தால், நாள் முழுவதும் நீங்கள் சுறுசுறுப்பாக உணருவீர்கள்.

5. சூரிய ஒளியில் அமரவும்

உடலில் வைட்டமின்-டி குறைபாட்டைப் போக்க சூரிய ஒளி சிறந்த வழியாகும். வெயிலில் அமர்வதால் எலும்புகள் வலுவடையும். இது தவிர, எடை இழப்புக்கு இது மிகவும் முக்கியமானது. உடல் எடையை குறைக்க, நீங்கள் காலை சூரிய ஒளியில் சிறிது நேரம் உட்கார வேண்டும். இந்த இயற்கை வைட்டமின் டி உடல் எடையை குறைக்க உதவும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை ஏற்றுக்கொள்ளும் முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சிறு வயதிலேயே முடி நரைக்கு இதுதான் காரணம்.. பெஸ்ட் தீர்வும் இதுதான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

Trending News