Weight Loss Tips: கொலஸ்ட்ராலை எரித்து உடல் பருமனைக் குறைக்க உதவும் பழச்சாறுகள்
Weight Loss With Vegetable Fruit Juices: உடல் எடை அதிகமாக இருப்பவர்களுக்கு ஒல்லியாகும் சுலப வழி... இது கொலஸ்ட்ரால் அளவையும் குறைக்கும் பயனுள்ள வழிமுறை
நியூடெல்லி: உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருந்தாலும், அளவுக்கு அதிகமாக உடல் எடை இருந்தாலும், இதய நோய் மற்றும் பக்கவாதம் என பல நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. இதனால் சில சமயங்களில் மரணம் கூட ஏற்பட வாய்ப்புள்ளது. அதுவே உடலில் இருக்கக்கூடிய நல்ல கொலஸ்ட்ரால் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது.
நீரிழிவு நோய் இருப்பவர்கள் எப்படி சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்துவார்களோ, அதேபோல உடல் எடை அதிகமாக இருப்பவர்களும், எடையைக் குறைப்பதிலும், கொலஸ்ட்ரால் அளவை குறைப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
உடல் எடையை குறைக்க நாம் முடிவு செய்யும் போதெல்லாம், முதலில் நம் நினைவுக்கு வருவது பழங்கள் அல்லது காய்கறி சாறுகள் போன்ற ஆரோக்கியமான விருப்பங்களுக்கு மாறுவதுதான். எடை இழப்புக்கு பழச்சாறு ஒரு நல்ல தீர்வாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இது கலோரிகளை எரிக்க உதவுகிறது, வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் செரிமானத்தை மேம்படுத்துகிறது.
மேலும் படிக்க | பார்வையை கூர்மையாக்கும் வைட்டமின் A நிறைந்த ‘சில’ சைவ உணவுகள்!
மாதுளம் பழச்சாறு
மாதுளம் பழச்சாறு மிகவும் சுவையானது. ஆக்ஸிஜனேற்றிகள், பாலிபினால்கள் மற்றும் லினோலெனிக் அமிலம் ஆகியவை மாதுளையில் உள்ளன. இந்த பழச்சாறுகளின் உதவியுடன் உடல் எடையை பெரிய அளவில் குறைக்கலாம். எனவே, தினசரி உணவில் மாதுளம்பழத்தின் ஜூஸை சேர்த்துக்கொள்வது எடையை கட்டுப்படுத்துவதுடன், உடல் எடை அதிகரிக்காமல் இருக்க உதவும்.
பீட்ரூட் ஜூஸ்
பீட்ரூட் மிகவும் சத்தான காய்கறியாகும், இதில் நார்ச்சத்து, தாதுக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, பீட்ரூட்டில் கலோரிகள் மிகக் குறைவாக இருப்பதால், எடை இழப்புக்கு இது ஒரு சிறந்த உணவாக கருதப்படுகிறது.
மேலும் படிக்க | உடற்பயிற்சி எதுவுமே வேண்டாம்! இதை மட்டும் செஞ்சா போதும்! தொப்பையை குறைக்கலாம்
சுரைக்காய் ஜூஸ்
சுரைக்காய் எளிமையான சுலபமாக கிடைக்கக்கூடிய காய்கறியாகும், பலரால் விரும்பி உண்ணப்படும் சுரைக்காய், எடை இழப்புக்கு மிகவும் உகந்தது என்று நிரூபிக்கபப்ட்டது. நார்ச்சத்தும் பல ஊட்டச்சத்துக்களும் நிரம்பிய சுரைக்காயின் ஜூஸ், உடல் எடையைக் குறைக்க உதவும் பழச்சாறு. கலோரிகளில் குறைவாக உள்ள ஜூஸ்.
கேரட் சாறு
கேரட் ஒரு குளிர்கால காய்கறி என்றாலும், ஆண்டு முழுவதும் சந்தையில் கிடைக்கிறது. கேரட்டை ஜூஸாக குடித்தால், உடலுக்கு தேவையான அனைத்துச் சத்துக்களும் கிடைக்கும். அதிலுள்ள நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள், உடலில் உள்ள பித்த சுரப்பை மேம்படுத்தும். எனவே, உடலில் உள்ள கொழுப்பு விரைவில் எரிந்து, உடல் எடை குறையத் தொடங்கும்.
ஆரஞ்சு சாறு
ஆரஞ்சு ஜூஸ் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. வைட்டமின் சி சத்தை அதிகம் கொண்ட ஆரஞ்சு பழச்சாறு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். ஊட்டச்சத்துக்கலின் பொக்கிஷமாக கருதப்படுட்ம் ஆரஞ்சு பழத்தின் சாறு,தொப்பையைக் குறைக்கவும் உதவுகிறது.
மேலும் படிக்க | இயற்கையாகவும் விரைவாகவும் உடல் எடையை குறைக்க குறிப்புகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ