உடல் எடை உடனே குறையணுமா? இந்த மேஜிக் பானத்தை குடித்தால் போதும்!!

Amla Tea Benefits for Weight Control: உடல் பருமனை கட்டுப்படுத்த பல எளிய வீட்டு வைத்தியங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று நெல்லிக்காய் டீ.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 21, 2022, 02:34 PM IST
  • உடல் எடை அதிகரிப்பது பல நோய்களையும் அதிகரிக்கிறது.
  • உலகம் முழுவதும் உள்ள நான்கில் ஒரு பங்கு மக்கள் உடல் பருமன் தொடர்பான பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள்.
  • உடல் பருமன் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்களை அகால மரணத்தின் பிடியில் சிக்க வைக்கிறது.
உடல் எடை உடனே குறையணுமா? இந்த மேஜிக் பானத்தை குடித்தால் போதும்!! title=

உடல் எடையை குறைக்க நெல்லிக்காய் டீ: இன்றைய காலத்தில் உடல் பருமன் ஒரு பெரிய பிரச்சனையாக உள்ளது. அனைவரும் தங்களது உடல் கட்டுக்கோப்பாகவும், ஸ்லிம்மாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். பருமனான உடல் வாகை யாரும் விரும்புவதில்லை. ஏனெனில், உடல் பருமன் பல வித உடல் உபாதைகளுக்கு வழிவகுக்கிறது. எனினும், உடல் பருமனை குறைக்க பல வித பழக்க வழக்கங்களை நாம் மாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது. குறிப்பாக, ஜிம்மிற்கு செல்வது, உடற்பயிற்சியை தவறாமல் செய்வது ஆகியவற்றை அனைவராலும் செய்ய முடிவதில்லை. 

சரியான நேரத்தில் உணவு உட்கொள்ளாததாலும், மோசமான வாழ்க்கை முறையாலும், சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உடல் பருமனால் பாதிக்கப்படுகிறார்கள். உடல் எடை அதிகரிப்பது பல நோய்களையும் அதிகரிக்கிறது. ஒரு அறிக்கையின்படி, தற்போது, ​​உலகம் முழுவதும் உள்ள நான்கில் ஒரு பங்கு மக்கள் உடல் பருமன் தொடர்பான பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். உடல் பருமன் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்களை அகால மரணத்தின் பிடியில் சிக்க வைக்கிறது. உடல் பருமனை கட்டுப்படுத்த பல எளிய வீட்டு வைத்தியங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று நெல்லிக்காய் டீ. நெல்லிக்காய் தேநீர் நம் உடல் எடையை குறைப்பதில் நமக்கு எவ்வாறு உதவுகிறது என்பதை இந்த பதிவில் காணலாம். 

நெல்லிக்காய் தேநீர்: செய்வது எப்படி?

நெல்லிக்காய் டீ தயாரிக்க, முதலில் ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் எடுத்துக்கொள்ளவும். அதன் பிறகு, அதில் ஒரு ஸ்பூன் நெல்லிக்காய் பொடியை கலக்கவும். பின்னர் அதில் நான்கில் ஒரு பங்கு டீஸ்பூன் கருப்பு மிளகு மற்றும் அரை டீஸ்பூன் இஞ்சி கலந்து சுமார் 10-15 நிமிடங்கள் கொதிக்க விடவும். அதன் பிறகு, அந்த சாற்றை எடுத்து வடிகட்டவும். பிறகு வடிகட்டிய தேநீர் சற்று ஆறியவுடன்  ஒரு ஸ்பூன் தேன் கலந்து மெதுவாக உட்கொள்ளவும். இந்த டீயை ஒரு நாளைக்கு 2 முறை குடித்து வந்தால், சில நாட்களில் உங்கள் கொழுப்பு கரைய ஆரம்பிக்கும்.

மேலும் படிக்க | Diabetic Diet: ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது இவ்வளவு ஈஸியா? 

எடையைக் கட்டுப்படுத்த நெல்லிக்காய் டீயின் நன்மைகள்

- நெல்லிக்காய் டீ உடலுக்கு ஆற்றலைத் தருகிறது. 

- மேலும் இது கூடுதல் கலோரிகளை எரிக்கிறது. 

- இதில் உள்ள நார்ச்சத்து தேவையற்ற பசியை ஏற்படுத்தாது, 

- இதன் காரணமாக உடல் பருமனை தவிர்க்கலாம். 

- நெல்லிக்காய் டீ இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்கிறது.

- இதனால் நோய் எதிர்ப்பு சக்தி வலுப்பெறுகிறது. 

- இந்த டீயை தினமும் குடித்து வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும். 

- பல ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் உள்ளதால், உடலில் ஏற்படும் வீக்கத்தை இது குறைக்கிறது.

(பொறுப்புத் துறப்பு: இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொது அறிவை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | இந்த அறிகுறிகள் இருக்கிறதா? மாரடைப்பு வரலாம்! ஜாக்கிரதை! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News