Weight Loss With Lemon Peel: எலுமிச்சை மட்டுமல்ல, எலுமிச்சை தோலும் உடல் எடையை குறைக்கும். ஆனால், அதற்கு இதை இப்படி சாப்பிட வேண்டும். எலுமிச்சை என்பது ஒரு அபூர்வமான கனி. அது பல்வேறு நன்மைகளைக் கொண்டது, உடல் எடையை குறைக்கும் என்பதும் தெரியும். ஆனால், எலுமிச்சை யின் தோலும் உடல் எடையை குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால், அதற்கு அதை எப்படி சாப்பிட வேண்டும் என்று தெரியுமா? எலுமிச்சையின் தோலுக்கு கொழுப்பைக் குறைக்கும் பண்பு உண்டு.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எலுமிச்சை எடையை குறைக்க மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. நாம் அனைவரும் எலுமிச்சையை பயன்படுத்துகிறோம், ஆனால் அதன் தோலை எடுத்து தூக்கி எறிவோம். எலுமிச்சை தோலில் கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. இது தவிர, டி-லிமோனீன் என்ற தனிமம் எலுமிச்சை தோலில் உள்ளது, இது கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.


எடை இழப்புக்கு எலுமிச்சை தோலை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்.


மேலும் படிக்க | Weight Loss Alert: வெந்நீரில் தேன் + எலுமிச்சை கோம்போ யாருக்கு ஆபத்து?


உடலில் இருந்து நச்சுகள் அகற்றப்படுகின்றன
எலுமிச்சை தோல்களில் ஃபிளாவனாய்டுகள் காணப்படுகின்றன, அவை மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன. மன அழுத்தத்தில் இருப்பவர்கள் எலுமிச்சை தோல்களை சாப்பிடலாம். உடலில் கொழுப்பு அதிகரிக்கும் போது, ​​அதன் காரணமாக உடலில் நச்சுகளும் அதிகரிக்கும்.


எலுமிச்சம்பழத்தோலை உட்கொள்வதன் மூலம், உடலில் உள்ள நச்சுகள் வெளியேறி, உடல் ஆரோக்கியமாவதுடன் உடல் எடையும் குறைகிறது. இது தவிர, இதில் உள்ள வைட்டமின் சி கொழுப்பை எரிக்க உதவுகிறது.


எலுமிச்சை தோலில் இருந்து தூள் தயாரிக்கவும்
வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து எலுமிச்சை தோலில் இருப்பதால் கொழுப்பை குறைக்க உதவுகிறது. எலுமிச்சம்பழத் தோலை உலர்த்தி அதன் மிக்சியில் பொடியாக்கிக் கொள்ளவும். இந்த பொடியை காற்று புகாத டப்பாவில் சேமித்து வைக்கவும். தேவையானபோது, இந்த பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கலாம்.


மேலும் படிக்க | வைட்டமின் ஈ சத்துக்கும் சரும அழகுக்கும் இவ்வளவு தொடர்பா?


உடல் எடையை குறைக்க, எலுமிச்சை தோலுடன் உடல் எடையை குறைக்கும் பானத்தை உடனடியாக தயார் செய்வதும் எளிது. எலுமிச்சையின் தோலை எடுத்து 2 லிட்டர் தண்ணீரில் சுமார் 30 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். அதன் பிறகு அடுப்பை அணைத்து விடவும். கொதித்த வெந்நீரை வடித்து, ஆற வைத்து குக்டிக்கவும்.


தினமும் காலையில் எலுமிச்சை தோல் கலந்த வெந்நீரை பருகி வந்தால், உடல் எடை குறையும். அதுமட்டுமல்ல, மலச்சிக்கல், செரிமாண கோளாறு, வாயுக் கோளாறு என பலவித உடல் உபாதைகளும் எட்டியே பார்க்காது. 


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | Sperm Booster: விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் ‘சூப்பர்’ உணவுகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ