தொங்கும் தொப்பை தொல்லை செய்கிறதா? `இந்த` தண்ணீர் டெய்லி குடிங்க
Weight Loss: உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் ஒரு ஆரோக்கியமான பானத்தை பற்றி தான் இன்று காண உள்ளோம். இது எடை இழப்புக்கான ஒரு சிறந்த தீர்வாகக் கருதப்படுவது மட்டுமல்லாமல், பளபளப்பான சருமத்திற்கும் பயனுள்ளதாக இருக்கும்.
உடல் எடை குறைக்கும் பானம்: நமது உடல் எப்படி இருக்கிறது என்பது உணவு மற்றும் நமது வாழ்க்கை முறையைப் பொறுத்தது. தற்போது உடல் பருமனால் பலர் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் பலர் எடையை குறைக்கும் வழிகளை தேடுகின்றனர். விரைவான முடிவுகளைத் தரக்கூடிய பல எடை இழப்பு தந்திரங்கள் இருந்தாலும், எடை இழப்புக்கான (Weight Loss Tips) இயற்கை வைத்தியம் தான் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பொதுவாக மக்கள் டீ அல்லது காபி போன்ற ஆரோக்கியமற்ற பானங்களுடன் தங்கள் நாளைத் தொடங்குகிறார்கள், ஆனால் நீங்கள் காலையில் வெறும் வயிற்றில் எழுந்து வயிற்றைக் குறைக்க உதவும் ஒன்றை உட்கொண்டால், முழு உடலும் பயனடையும். எனவே கொழுப்பு நிறைந்த இழப்புக்கு பயனுள்ள பானம் எது மற்றும் வெறும் வயிற்றில் அதை எப்படி உட்கொள்ள வேண்டும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
எடை இழப்புக்கு குங்குமப்பூவின் நன்மைகள் | benefits of saffron water for weight loss
குங்குமப்பூ தண்ணீர் (saffron water) குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி நீங்கள் அறிந்துக்கொண்டால் உங்கள் காலை பொழுதை இந்த பானத்துடன் தான் தொடங்குவீர்கள். குங்குமப்பூ நீண்ட காலமாக ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படுகிறது மற்றும் அதன் பண்புகள் காரணமாக, எடை இழப்புக்கு இது மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இது மட்டுமின்றி, சருமத்தின் நிறத்தை பராமரிப்பதிலும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நார்ச்சத்து மற்றும் கால்சியம் குங்குமப்பூவில் ஏராளமாக காணப்படுகின்றன, இது உங்கள் சருமத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். இதனால் தினமும் காலையில் வெறும் வயிற்றில் குங்குமப்பூ நீர் பல உடல்நல பிரச்சனைகளை நீக்க உதவுகிறது.
மேலும் படிக்க | முக சுருக்கங்கள் மாயமாய் மறைய... வேப்பிலை மாஸ்க் தயாரிக்கும் முறை!
குங்குமப்பூ தண்ணீரின் நன்மைகள் | Saffron Water Benefits
*குங்குமப்பூ நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மிகவும் உதவியாக இருக்கும்.
* நாள் முழுவதும் உங்கள் உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும்.
* இதன் பயன்பாடு முடி உதிர்தல் பிரச்சனைக்கும் உதவும்.
* குங்குமப்பூ உங்கள் சருமத்திற்கு பொலிவைத் தருகிறது.
* குங்குமப்பூவை உட்கொள்வது இதய ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது.
* மாதவிடாயின் போது குங்குமப்பூவை உட்கொள்வது மாதவிடாய் வலியைப் போக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
குங்குமப்பூ தண்ணீர் செயல்முறை | (How to Make Saffron Water)
குங்குமப்பூ தண்ணீர் தயாரிக்க, குங்குமப்பூவை ஒரு கப் தண்ணீரில் போட்டு, அதில் இலவங்கப்பட்டை மற்றும் ஏலக்காய் சேர்த்து, தண்ணீரை சுமார் ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். அதன் பிறகு சிறிது நேரம் ஆற வைக்கவும். பின்னர் அதில் தேன் கலந்து பருகவும். மிகவும் சூடாக இருக்கும் போது அதில் தேன் சேர்க்க வேண்டாம், ஏனெனில் சூடான நீரில் தேன் கலந்து குடித்தால் அதன் சத்துக்கள் போகிவிடும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | கொலஸ்ட்ரால் அளவை உடனடியாக கட்டுப்படுத்த.. இந்த 5 உணவுகள் உதவும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ