Weight Loss Tips: உடல் எடையை குறைக்க உதவும் சூப்பர் விதைகள்
![Weight Loss Tips: உடல் எடையை குறைக்க உதவும் சூப்பர் விதைகள் Weight Loss Tips: உடல் எடையை குறைக்க உதவும் சூப்பர் விதைகள்](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/styles/zm_500x286/public/2022/08/21/243704-flax-seed.jpg?itok=JxfrRWev)
Flax Seeds For Weight Loss: அதிகரித்து வரும் எடையைக் குறைக்க நாம் கடுமையாக முயற்சி செய்கிறோம், ஆனால் பல சமயங்களில் இதற்கான தீர்வு நம் சமையலறையிலேயே இருக்கிறது, எனவே அவை என்னவென்று பார்ப்போம்.
ஆளி விதைகளின் நன்மைகள்: உடல் எடையை குறைக்க ஒவ்வொரு நபரும் நிறைய முயற்சி செய்கின்றனர், இதற்காக நாம் கடுமையான உடற்பயிற்சிகளும் கடுமையான உணவு டயட்களும் செய்கிறோம், இருப்பினும் நாம் விரும்பிய முடிவை பெறுவதில்லை. அத்தகைய சூழ்நிலையில் வேறுபட்ட புதிய விதமான ஏதாவது முயற்சி செய்ய வேண்டியது அவசியமாகிறது. வயிறு மற்றும் இடுப்பைச் சுற்றி கொழுப்பு அதிகரிக்கும் போதெல்லாம், உங்கள் ஆடை டைட்டாக மாறும், இதனால் நீங்கள் சங்கடத்தை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே இனி இந்த கவலை உங்களுக்கு வெந்டாம், உங்ளின் எடையைக் குறைக்க மிகவும் எளிதான செய்முறையை நாங்கள் உங்களுக்கு இன்று கொண்டு வந்துள்ளோம். அதை பின்பற்றுவதன் மூலம் நீங்கள் சுலபமாக உங்களின் உடல் எடையை குறைக்கலாம்.
இந்த நிலையில் இது தொடர்பாக கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஜிம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் பிரபல உணவியல் நிபுணர் டாக்டர் ஆயுஷி யாதவ் டிப்ஸ் ஒன்று அளித்துள்ளார். அது என்னவென்று பார்ப்போம். தொடர்ந்து நாம் ஆளி விதைகளை உட்கொண்டால், அதிகரித்து வரும் எடையை எளிதில் குறைக்கலாம் என்று கூறியுள்ளார். ஃபைபர் மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் ஆளிவிதையில் ஏராளமாக காணப்படுகின்றன, இது புற்றுநோய் போன்ற நோய்களிலும் நன்மை பயக்கும். இந்த விதைகளை முறையாக உட்கொண்டால் ஆரோக்கிய நன்மைகள் நிச்சயம் கிடைக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | மூளையை பாதிக்கும் ஆபத்தான பழக்கங்களுக்கு ‘NO’ சொல்லுங்க
எடையைக் குறைப்பதில் ஆளிவிதை ஏன் பயனுள்ளதாக இருக்கிறது
பொதுவாக ஆளி விதை எடை தளர்வான உணவு என்றும் அழைக்கப்படுகிறது. 100 கிராம் ஆளிவிதையில் சுமார் 18 கிராம் புரதம் உள்ளது. அதேபோல் மசிலேஜ் எனப்படும் நார்ச்சத்தும் இதில் உள்ளது, இதன் காரணமாக நீண்ட நேரம் பசியின்மை இருக்காது, இதன் காரணமாக எடை படிப்படியாக குறையத் தொடங்குகிறது. எனவே தினமும் விதைகளை சாப்பிட்டு வந்தால் பசியின்மை குறையும்.
ஆளி விதைகளை எப்படி சாப்பிடுவது?
ஆளி விதைகளில் பழுப்பு மற்றும் மஞ்சள் என 2 வகைகள் உள்ளன, இவை இரண்டில் சத்தான கூறுகள் உள்ளது. இதை சாப்பிடுவதால் ஆரோக்கியம் மேம்படும். நீங்கள் சாப்பிட விரும்பினால், விதைகளை சூடான கடாயில் வறுக்கவும், பின்னர் அதை அரைத்து தூள் வடிவில் செய்துக்கொள்ளலாம். இப்போது ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி அதில் ஆளி விதை பொடியை கலக்கவும். இப்போது தண்ணீரைக் கொதிக்க வைத்து, இந்த தண்ணீர் வெதுவெதுப்பானதும் குடிக்கவும். நீங்கள் அதன் சுவையை மேலும் அதிகரிக்க விரும்பினால், வெல்லம் மற்றும் எலுமிச்சை பழச்சாற்றை கலந்து அருந்தலாம்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | சருமத்தில் சொறி, அரிப்பு தொல்லையா? இந்த வீட்டு வைத்தியங்களால் நிவாரணம் பெறலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ