செரிமானம் முதல் சளி, இருமல் வரை: குளிர்காலத்தில் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இஞ்சி டீ
Benefits of Ginger Tea: இஞ்சியில் இயற்கையான அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவற்றின் காரணமாக தொண்டை புண் மற்றும் இருமலில் பெரிய நிவாரணம் கிடைக்கும்.
Benefits of Ginger Tea: குளிர்காலம் தொடங்கிவிட்டது. இந்த காலத்தில் அவ்வப்போது காபி, டீ போன்ற சூடான பானங்களை மக்கள் அருந்துவதுண்டு. சாதாரணம் தேநீர் குடிப்பதை விட, அதில் பல வித மூலிகைகளை சேர்த்தால், சுவை அதிகரிப்பதோடு உடலுக்கு தேவையான ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்கும். இந்த சீசனில் இஞ்சி டீ குடிப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இஞ்சி டீ அதிகம் விரும்பப்படும் டீயாக உள்ளது.
குளிர்காலத்தில் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இஞ்சி டீ
இஞ்சி டீ குளிர்காலத்தில் உடலை வெப்பமாக்குவது மட்டுமின்றி இன்னும் பல நன்மைகளையும் தருகிறது. இஞ்சி டீ நமது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இஞ்சியில் உள்ள இயற்கையான கூறுகள் மன சோர்வையும் சோகத்தையும் குறைத்து, உங்களை புத்துணர்ச்சியுடனும் ஆற்றலுடனும் உணர வைக்கிறது. இதை குடிப்பதன் மூலம் உடலுக்கு சுறுசுறுப்பு கிடைக்கிறது. இஞ்சி டீ செரிமானத்தை மேம்படுத்தவும், சளி மற்றும் இருமலுக்கு நிவாரணம் அளிக்கவும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும் உதவுகிறது. குளிர்காலத்தில் எந்த வித பிரச்சனையும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்க இஞ்சி டீ ஒரு எளிய வழி.
இஞ்சியில் உள்ள ஆரோக்கிய நன்மைகள்
- குளிர்காலத்தில் இஞ்சியை உட்கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
- இது ஆரோக்கிய நன்மைகளின் களஞ்சியமாக உள்ளது.
- இஞ்சியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன.
- இது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது.
- இஞ்சியில் ஜிஞ்சரால் என்ற தனிமம் உள்ளது, இது உடலுக்கு புத்துணர்ச்சி மற்றும் வெப்பத்தை அளிக்கிறது.
மேலும் படிக்க | கொழுப்பை எரிக்கும் ஆப்பிள் சைடர் வினிகர்.... ஆனால் பக்க விளைவுகளும் உண்டு
இஞ்சி டீ குடிப்பதால் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதோடு, பல வகையான தொற்று நோய்களைத் தவிர்க்கவும் இது உதவுகிறது.
Cold, Cough: சளி, இருமலை தள்ளி வைக்கும் இஞ்சி டீ
குளிர்காலத்தில் பொதுவாக குளிர், சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் அதிகரிக்கும். இஞ்சி டீ இந்த பிரச்சனைகளிலிருந்து பெரும் நிவாரணம் அளிக்கும். இஞ்சியில் இயற்கையான அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவற்றின் காரணமாக தொண்டை புண் மற்றும் இருமலில் பெரிய நிவாரணம் கிடைக்கும். இஞ்சியை தேநீரில் சேர்த்துக் குடித்தால், தொண்டை அழற்சியைக் குறைத்து, சளியை வெளியேற்றும். தலைவலி மற்றும் மூக்கடைப்பு போன்ற சளி தொடர்பான பிற பிரச்சனைகளிலிருந்தும் இஞ்சி டீ நிவாரணம் அளிக்கிறது.
Digestion: செரிமானத்தை சீராக்கும் இஞ்சி டீ
இஞ்சி செரிமானத்தை சீராக்க உதவும். இஞ்சியில் செரிமான நொதிகள் உள்ளன. இவை வயிற்று எரிச்சலைக் குறைக்க உதவுகின்றன. மேலும், வாயுத்யொல்லை, மலச்சிக்கல் மற்றும் அஜீரணம் போன்ற பிரச்சனைகளை குணப்படுத்தவும் இஞ்சி டீ உட்கொள்ளலம. குளிர்காலத்தில் பெரும்பாலும் செரிமான பிரச்சனைகள் அதிகரிக்கும். இதனால், இந்த காலத்தில் இஞ்சி டீ குடிப்பதால் வயிற்றின் செரிமான அமைப்பை சரி செய்யலாம்.
குளிர்காலத்தில் குளிர்ச்சியின் காரணமாக, உடல் செயல்பாடுகள் குறையும். இந்த காலத்தில் உடலில் ஆற்றல் பற்றாக்குறை ஏற்படக்கூடும். இதன் காரணமாக உடலில் குளிர்ச்சி இன்னும் அதிகமாகின்றது. இஞ்சி இயற்கையாகவே வெப்பத்தன்மை கொண்டுள்ளதால், இது உடலை உள்ளே இருந்து சூடாக வைத்திருக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | குளிர்காலத்தில் நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய அற்புதமான காய்கறி..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ