Apple Cider Vinegar: ACV என்று அழைக்கப்படும் ஆப்பிள் சைடர் வினிகர், உடல் எடையை குறைப்பது முதல் பல உடல்நலப் பிரச்சினைகளுக்கான வீட்டு வைத்தியமாக பயன்படுத்தப்படுகிறது. என்சைம்கள், வைட்டமின்கள், சிட்ரிக் அமிலம், அசிட்டிக் அமிலம், தாதுக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் இதில் நிறைந்துள்ளது.
ஆப்பிள் சைடர் வினிகர் ஒரு சூப்பர்ஃபுட் எனலாம். உடலில் தேங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றும் ஆற்றல் கொண்ட ஆப்பிள் சைடர் வினிகர் பானம், சிறந்த டீடாக்ஸ் பானமாகும். சரும ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். செரிமானத்தை மேம்படுத்தவும், உடல் எடையை குறைக்கவும், (Weight Loss Tips) சிறந்த பானமாக இருக்கும்.
எனினும், மருத்துவரின் ஆலோசனையின்றி அனைவரும் ஆப்பிள் சீடர் வினிகரை உட்கொள்வது நல்லதல்ல. குறிப்பாக, நீங்கள் கீல்வாதம், அல்சர் அல்லது பிற இரைப்பை பிரச்சனை உள்ளவர்கள், ஆப்பிள் சைடர் வினிகரை அருந்துவதை தவிர்க்க வேண்டும். இது தவிர, கர்ப்பிணிகளும் பாலூட்டும் தாய்மார்களும், மருத்துவர் ஆலோசனையின்றி இதை உட்கொள்ளக்கூடாது.
ஆப்பிள் சைடர் வினிகரின் பக்க விளைவுகள் (Side Effects Of Apple Cider Vinegar)
ஆப்பிள் சைடர் வினிகர் பொதுவாக ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்றாலும், இதனை காலையில் அருந்துவதே சிறந்தது என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள். அதை இரவில் உட்கொண்டால், சில ஆபத்தான பக்க விளைவுகளை ஏற்படுத்தும். இரவில் ஆப்பிள் சைடர் வினிகரை உட்கொள்வது செரிமான ஆரோக்கியத்தை பாதித்து, அமிலத்தன்மை மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். ஆப்பிள் சைடர் வினிகரின் சில பக்க விளைவுகளை விரிவாக புரிந்து கொள்ளலாம்.
வயிற்றில் எரிச்சல் மற்றும் ஆசிடிட்டி பிரச்சனை
ஆப்பிள் சீடர் வினிகரை இரவில் குடிப்பதால் வயிற்றில் எரிச்சல் மற்றும் ஆசிடிட்டி பிரச்சனை ஏற்படும். ஆப்பிள் சைடர் வினிகரில் உள்ள அமில கூறுகள், வயிற்றில் அமில அளவை அதிகரிக்கின்றன. இதனால் வயிற்று எரிச்சல் மற்றும் அசௌகரியம் ஏற்படுகிறது. உங்களுக்கு ஆசிடிட்டி அல்லது அல்சர் பிரச்சனை இருந்தால், இரவில் அதை உட்கொள்வது பிரச்சனையை அதிகரிக்கும்.
தூக்கமின்மை
இரவில் ஆப்பிள் சைடர் வினிகர் குடிப்பதும் தூக்கத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். ஆப்பிள் சைடர் வினிகரை உட்கொள்வது வயிற்றில் அமில எதிர்வினையை தூண்டி, உங்கள் செரிமானத்தை விரைவுபடுத்துகிறது. இதனால் தூக்கம் கெடும். இதன் விளைவாக, மறு நாள் காலையில் சோர்வு மற்றும் எரிச்சல் ஏற்படலாம்.
இரத்த சர்க்கரை அளவு
இரவில் ஆப்பிள் சைடர் வினிகர் குடிப்பது இரத்த சர்க்கரை அளவை பாதிக்கும், குறிப்பாக நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால் கவனம் தேவை. ஆப்பிள் சைடர் வினிகரில் சிறிய அளவு சர்க்கரை உள்ளது என்றாலும், இது இரத்த சர்க்கரை அளவை பாதிக்கும்.
பற்களுக்கு சேதம்
ஆப்பிள் சைடர் வினிகர் பல் எனாமலை சேதப்படுத்தும். இரவில் தண்ணீர் கலக்காமல் இதை உட்கொண்டால், அது பற்களின் மேற்பரப்பை வலுவிழக்கச் செய்யும், இதன் காரணமாக பற்கள் சென்சிடிவிட்டி அதிகரிக்கும். நீண்ட காலம் தொடர்ந்து இதனை எடுத்துக் கொள்வது பற்களுக்கு தீங்கு விளைவிக்கும். அவற்றின் வேர்களை சேதப்படுத்தும்.
ஆப்பிள் சைடர் வினிகரை குறுகிய காலத்திற்கு உட்கொள்வது பாதுகாப்பானது தான். இருப்பினும், ஆப்பிள் சைடர் வினிகர் அனைவருக்கும் ஒத்துக் கொள்ளும் பானமாக இருக்கும் என கூற முடியாது . ஆப்பிள் சைடர் வினிகரை நீண்ட காலத்திற்கு அதிக அளவில் பயன்படுத்தினால் பல பக்கவிளைவுகளும் ஏற்படும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | உடல் எடையை எளிதாக குறைக்கணுமா? உங்களுக்கு உதவும் மஞ்சள் காபி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ