Health Benefits of Papaya: பழங்களில் பல வித ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. அதிகப்படியான நன்மைகளை அளிக்கும் பழங்களில் பப்பாளியும் ஒன்றாகும். பப்பாளியில் (Papaya) அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதில் ஆன்டிஆக்ஸிடென்ட்களும், நார்ச்சத்தும் மிக அதிகமாக காணப்படுகின்றன. இதில் உள்ள பப்பைன் என்ற என்சைன் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வயிற்றுப் பிரச்சனைகளை சரி செய்யும் பப்பாளி (Papaya For Stomach Problems)


வயிற்று பிரச்சனைகளும், கல்லீரல் பிரச்சனைகளும், தீவிர வயிற்று நோய்களும் பப்பாளியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் குணமாகும். பப்பாளிச் செடி, அதன் இலைகள், வேர்கள், தண்டு, விதைகள் என இவை அனைத்தும் உடல் நேரடியாக பல நோய்களை எதிர்த்துப் போராட உதவுகின்றன. பப்பாளியில் நார்ச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் ஈ, வைட்டமின் ஏ மற்றும் பல தாதுக்கள் காணப்படுகின்றன. பப்பாளி உடலை ஆரோக்கியமாக பாதுகாக்க உதவுகின்றது. பப்பாளியில் வைட்டமின் சி அதிகமாக இருக்கிறது. இது தவிர, கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வைட்டமின் ஏ -வுன் இதில் ஏராளமாக உள்ளது. 


நமது தினசரி உணவில் பப்பாளியை தவறாமல் சேர்த்துக்கொண்டால், அது செரிமானத்தை மேம்படுத்தி ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். மாம்பழம், ஆப்பிள் மற்றும் பேரிக்காய் போன்ற பிற பழங்களுடன் பப்பாளியை கலந்து சாப்பிடுவது வயிற்று பிரச்சனைகளை குணப்படுத்த உதவும். எனினும், உங்கள் வயிற்று பிரச்சனை தீவிரமாக இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது. 


பப்பாளியின் நன்மைகள் (Health Benefits of Papaya)


- வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள்: வயிற்றிற்குத் தேவையான வைட்டமின் சி, வைட்டமின் ஏ, ஃபோலேட், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் ஆகிய பல்வேறு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் பப்பாளியில் உள்ளன. 


- செரிமானத்தை மேம்படுத்தும்: பப்பாளியில் பப்பைன் என்ற என்சைம் உள்ளது, இது செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. அஜீரணம், வாயுத்தொல்லை, அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகள் இருந்தால், பப்பாளி சாப்பிடுவது நன்மை பயக்கும்.


- நார்ச்சத்து: பப்பாளியில் நல்ல அளவு நார்ச்சத்து உள்ளது. இது வயிற்றுக்கு நீண்ட நேரம் நிறைவான உணர்வை அளிக்கின்றது, செரிமானத்தை பலப்படுத்துகிறது, வயிற்று பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளிக்கின்றது. இதை உட்கொள்வதால் மலச்சிக்கல், வாயுத்தொல்லை மற்றும் வயிறு தொடர்பான பிற பிரச்சனைகளிலிருந்தும் விடுபடலாம்.


மேலும் படிக்க | ஒரு மாதம் டீ குடிக்காமல் இருந்தால் உடலில் என்ன என்ன மாற்றங்கள் நிகழும்?


பப்பாளி சாப்பிடுவதால் கிடைக்கும் பிற நன்மைகள்: 


- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
 
- ஆண்டி - ஏஜிங்


- கண் ஆரோக்கியத்திற்கு நல்லது


- சோர்வை குறைக்கிறது


- செரிமானத்தை மேம்படுத்துகிறது


உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த பப்பாளியை பல வழிகளில் பயன்படுத்தலாம். 


பப்பாளி சாறு: பப்பாளி சாறு செரிமானத்தை மேம்படுத்தவும், வயிற்று பிரச்சனைகளை குணப்படுத்தவும் உதவும். ஒரு சிறிய பப்பாளியை நறுக்கி அதன் சாறு எடுக்கவும். அதை ஒரு கிளாஸில் ஊற்றி நன்கு கலந்து குடிக்கவும்.


பப்பாளி வேர்: பப்பாளி வேரை உரித்து சுத்தம் செய்து பச்சையாக சாப்பிடுவதும் செரிமானத்தை மேம்படுத்த உதவும்.


பப்பாளி சாலட்: பப்பாளியை சாலட்டாகவும் பயன்படுத்தலாம். இதை மற்ற காய்கறிகளுடன் கலந்து அல்லது தனியாக சாலடாக உட்கொள்ளலாம். 


பப்பாளி சட்னி: பப்பாளி சட்னி வயிற்றுப் பிரச்சினைகளைக் குணப்படுத்தவும் உதவும். இதை பிற சட்னிகள் செய்யும் செயல்முறையில் செய்து சாப்பிடலாம்.


(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | இதய நோய் முதல் செரிமானம் வரை... முட்டையுடன் ‘இதை’ எல்லாம் சாப்பிடாதீங்க... !


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ