Best Monsoon Vegetables: மழைக்காலம் பொதுவாக அனைவருக்கும் பிடித்தமான காலமாக உள்ளது. மழை என்றால் அனைவருக்கும் குதூகலமான உணர்வுதான் ஏற்படுகின்றது. மழைக்காலம் இயற்கைக்கு புதிய தோற்றத்தை தருவதோடு மட்டுமல்லாமல், நமது ஆரோக்கியத்திற்கும் பல நன்மைகளை அள்ளித் தருகிறது. இந்த பருவத்தில் விளையும் புதிய காய்கறிகள் சுவையானவையாக இருப்பதோடு மட்டுமல்லாமல், ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவையாகவும் இருக்கின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குறிப்பாக மழைக்காலத்தில் சில காய்கறிகளை உட்கொள்வது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மழைக்காலத்தில் எந்தெந்த காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்? இவற்றால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன? இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம். 


மழைக்கால காய்கறிகள்


மழைக்காலத்தில், பல வகையான சீசன் காய்கறிகள் சந்தையில் எளிதாகக் கிடைக்கின்றன. இவற்றில் சில முக்கிய காய்கறிகள் மற்றும் அவற்றின் மூலம் கிடைக்கும் நன்மைகள் பற்றி இங்கே காணலாம்.


சுரைக்காய்: சுரைக்காயில் ஏராளமான நீர்ச்சத்து உள்ளது. இந்த காரணத்தால் இது உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. இது தவிர, சுரைக்காயில் வைட்டமின் சி -யும் அதிகமாக உள்ளது. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது.


பீர்க்கங்காய்: பீர்க்கங்காயில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இது வயிற்றுக்கு நிரம்பிய உணர்வை அளிப்பதுடன் செரிமானத்தை சீராக்கவும் உதவுகிறது. 


வெண்டைக்காய்: வெண்டைக்காயில் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. இது இரத்த சோகையிலிருந்து பாதுகாப்பதோடு உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது.


பூசணிக்காய்: பூசணிக்காயில் உள்ள பீட்டா கரோட்டின் கண் பார்வைக்கு நல்லது. இது தவிர இது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகின்றது.


பாகற்காய்: பாகற்காயின் சுவை கசப்பாக இருந்தாலும் இதில் பல வித மருத்துவ குணங்கள் உள்ளன. இது நீரிழிவு நோயாளிகளுக்கு அதிகப்படியான நன்மைகளை செய்வதோடு செரிமான பிரச்சனைகளுக்கு நன்மை பயக்கும்.


மேலும் படிக்க | டீடாக்ஸ் முதல் வெயிட் லாஸ் வரை... தினமும் பெருஞ்சீரகம் சாப்பிடுங்க


மழைக்காலத்தில் அதிக அளவில் காய்கறிகளை உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்


செரிமானம் சீராகும்: மழைக்கால காய்கறிகளில் அதிக நார்ச்சத்து இருப்பதால், இவற்றை உட்கொள்வது செரிமானத்தை (Digestion) ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.


நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது: மழைக்கால காய்கறிகளில் வைட்டமின் சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை (Immunity) வலுப்படுத்தும் பிற ஆண்டிஆக்சிடெண்டுகள் உள்ளன. இவை தொற்றுகளிலிருந்து நம்மை காக்க உதவும்.


சருமத்திற்கு நன்மை பயக்கும்: பூசணி மற்றும் கேரட் போன்ற சில காய்கறிகள் சருமத்தை ஆரோக்கியமாக (Skin Care) வைத்திருக்கவும், உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கவும் உதவுகின்றன. 


எடைக் கட்டுப்பாடு: பொதுவாகவே காய்கறிகளில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருக்கின்றன. இவற்றை உட்கொள்வதால், நீண்ட நேரத்திற்கு நிரம்பிய உணர்வு இருப்பதால், அடிக்கடி எடுக்கும் பசி தவிர்க்கப்படுகின்றது. இது எடை இழப்பில் (Weight Loss) உதவுகிறது.


உஷ்ணத்திலிருந்து நிவாரணம்: மழைக்கால காய்கறிகளில் அதிக நீர்ச்சத்து இருப்பதால் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க இவை உதவுகின்றன. 


மழைக்காலத்தில் தவிர்க்க வேண்டிய காய்கறிகள் எவை?


மழைக்காலத்தில் பச்சை இலை காய்கறிகள் போன்ற சில காய்கறிகளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். இவற்றில் பாக்டீரியா வளரும் அபாயம் அதிகம் இருக்கும். இது தவிர, செரிமானமாக கடினமாக இருக்கும் காய்கறிகளையும் தவிர்க்க வேண்டும். 


மேலும் படிக்க | கல்லீரல், சிறுநீரகம் இரண்டும் ஆரோக்கியமாக இருக்க இந்த காலை பழக்கங்கள் உதவும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ