முட்டைகோஸ் சாப்பிட்டதால் பறிபோன உயிர்! பூச்சிக்கொல்லிகளால் விஷமாகும் காய்கள்!!
Dangerous Side Effects of Pesticides in Vegetables: காய்கறிகளை பூச்சிகளிடம் இருந்து பாதுகாக்க தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லிகள் இவற்றை சில சமயங்களில் மிகவும் ஆபத்தாகவும் ஆக்கிவிடுகின்றன.
Dangerous Side Effects of Pesticides in Vegetables: பச்சை இலை காய்கறிகள் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்றதாக கருதப்படுகின்றன. ஆனால், இவற்றை பூச்சிகளிடம் இருந்து பாதுகாக்க தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லிகள் இவற்றை சில சமயங்களில் மிகவும் ஆபத்தாகவும் ஆக்கிவிடுகின்றன. சமீபத்தில், முட்டைகோஸ் உட்கொண்டதால் 14 வயது சிறுமி இறந்த செய்தி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சிறுமி தனது குடும்பத்தின் வயலில் பயிரிடப்பட்ட முட்டைக்கோஸ் இலைகளை சாப்பிட்டுள்ளார். அதில் பூச்சிக்கொல்லி தெளிக்கப்பட்டிருந்தது. அவருக்கு டிசம்பர் 18 ஆம் தேதி உடல்நிலை மோசமடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி டிசம்பர் 24-ம் தேதி மாலை அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் பச்சை காய்கறிகளை சமைக்காமல் அப்படியே உட்கொள்வதில் உள்ள ஆபத்தின் அச்சத்தை அதிகரித்துள்ளது.
பூச்சிக்கொல்லிகளின் பக்க விளைவுகள்
- குமட்டல், வாந்தி, வயிற்றுப் பிடிப்புகள் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற செரிமான பிரச்சனைகள் இந்த பூச்சிக்கொல்லிகளின் மிகவும் பொதுவான பக்க விளைவுகளாகும்.
- இது தவிர, பூச்சிக்கொல்லிகள் இருக்கும் காய்கள், பழங்களை சரியாக சுத்தம் செய்யாமல் உட்கொள்வதால், அவை தோல் மற்றும் கண் எரிச்சல், ஒவ்வாமை, சொறி, சிவத்தல் மற்றும் அரிப்பு போன்றவற்றை ஏற்படுத்துகின்றன.
- இது மட்டுமின்றி, அவற்றை பல நாட்களுக்கு தொடர்ந்து உட்கொள்வது லுகேமியா மற்றும் லிம்போமா உள்ளிட்ட புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கிறது.
அதிக பூச்சிக்கொல்லிகள் கொண்ட காய்கறிகள்
சமீபத்திய அறிக்கையில், சுற்றுச்சூழல் பணிக்குழு (EWG) "டர்ட்டி டசன்" ஐ வெளியிட்டுள்ளது. இதில் பூச்சிக்கொல்லி எச்சங்களால் அதிக அளவில் மாசுபட்டு, சுகாதார அபாயங்களை ஏற்படுத்தக்கூடும் பழங்கள் மற்றும் காய்கறிகளை பற்றி கூறப்பட்டுள்ளது.
கீரை (Spinach)
கீரையில் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகளில் ஆர்கனோபாஸ்பேட்டுகள் இருக்கக்கூடும். பூச்சிக்கொல்லி எச்சங்களைக் கொண்ட கீரையை உட்கொள்வது நாளடைவில் நரம்பியல் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
கேல் (Kale)
கேல் அதிக பூச்சிக்கொல்லி எச்சங்களைக் கொண்ட ஒரு பச்சை இலை வகை. இந்த இரசாயனங்களின் நீண்டகால வெளிப்பாடு செரிமான பிரச்சனைகள் மற்றும் நீண்டகால உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.
தக்காளி (Tomato)
பூச்சிகள் மற்றும் நோய்களை எதிர்த்துப் போராட பொதுவாக தக்காளிச் செடிகளில் அதிக பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படுகின்றன. பூச்சிக்கொல்லி எச்சங்கள் நிறைந்த தக்காளியை உட்கொள்வது புற்றுநோயை உண்டாக்கும் விளைவுகள் உட்பட பல உடல்நல அபாயங்களை ஏற்படுத்தலாம்.
ஓமம் (Ajwain)
ஓமத்தில் பெரும்பாலும் அதிக அளவு பூச்சிக்கொல்லி எச்சங்கள் காணப்படுகின்றன. பூச்சிக்கொல்லிகளால் பாதிக்கப்பட்ட ஓமத்தை அடிக்கடி உட்கொள்வது ஹார்மோன் சமநிலையின்மை உட்பட பல உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
முட்டைகோஸ் (Cabbage)
இலை காயான முட்டைகோசிலும் அதிக அளவில் பரவலாக பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றை சமைக்காமல் பச்சையாக உட்கொள்வதால், பல வித உடல் உபாதைகள் ஏற்படக்கூடும். இதை தொடர்ந்து உட்கொண்டால், தொற்று, ஒவ்வாமை, அரிப்பு ஆகிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.
பாதுகாப்பு முறை
பூச்சிக்கொல்லிகள் உள்ள காய்கறிகளின் பக்கவிளைவுகளைத் தவிர்க்க, அவற்றைப் பயன்படுத்துவதற்கு முன்பு அவற்றை தண்ணீரில் நன்கு கழுவ வேண்டும். மேலும் இவற்றை நன்கு சமைத்த பின்னரே சாப்பிட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் பூச்சிக்கொல்லியின் தாக்கம் முற்றிலும் நீங்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ