டீடாக்ஸ் முதல் வெயிட்லாஸ் வரை.... வெறும் வயிற்றில் தனியா நீர் ஏற்படுத்தும் வியக்கத்தக்க மாற்றங்கள்

Coriander Water Benefits : தனியா பல வகையில் ஆரோக்கிய நன்மைகளை அள்ளிக் கொடுக்கக்கூடியது. நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது முதல், செரிமானத்தை வலுப்படுத்துவது வரை இதில் அடங்கியுள்ள ஆரோக்கிய நன்மைகள் ஏராளம். தைராய்டு நோயை கட்டுப்படுத்தவும் தனியா நீர் உதவுகிறது.

உணவிற்கு சுவையையும் மனத்தையும் கொடுக்கும் மசாலா வகையைச் சேர்ந்த தனியா என்னும் கொத்தமல்லி விதை,  பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளது. டீடாக்ஸ் முதல் வெயிட்லாஸ் வரை, இளமையை காப்பது முதல் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவது வரை, தனியா நீரை வழக்கமாக்கிக் கொண்டால் எண்ணற்ற நன்மைகளைப் பெறலாம்.

1 /10

கொத்தமல்லி விதையில், வைட்டமின்கள் A, C, K, இரும்புச்சத்து, மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து, நார்ச்சத்து, நீர்ச்சத்துக்கள் போன்றவை உள்ளன. இதிலுள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், அபரிமிதமான நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடியவை.

2 /10

தனியா நீர்: மல்லி விதையை சிறிது வறுத்து தூளாக்கி வைத்து கொண்டு, தேவையான சுக்கு சேர்த்து கொதிக்கவைத்து, நாட்டுச்சர்க்கரை அல்லது தேன் கலந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால், அஜீரண கோளாறு முதல், மூட்டு வலி, கொலஸ்ட்ரால் வரை பல வகைகளில் நன்மை பயக்கும்.

3 /10

டீடாக்ஸ் பானம்: தனியா என்னும் கொத்துமல்லி விதை நீர் உடலிலும், ரத்தத்திலும் சேர்ந்துள்ள அழுக்குகளையும் நச்சுக்களையும் வெளியேற்றும் சிறந்த டீடாக்ஸ் பானமாகும். காலையில் வெறும் வயிற்றில் அருந்துவதால், நச்சுக்கள் நீங்கி உடல் புத்துணர்ச்சி பெறும்.  

4 /10

செரிமான பிரச்சனை: வாயு வயிற்றுப் பிடிப்பு போன்ற செரிமான பிரச்சனைகள் உள்ளவர்கள், தனியா நீர் குடிப்பதால் பலன் பெறலாம். மல்லி விதைகள் குடல் இயக்கத்தை மேம்படுத்தக்கூடியது என்பதால், வயிறு உபாதைகள், வயிற்றுப்போக்கு, குமட்டல் உள்ளிட்ட அஜீரண கோளாறுகள் நீங்கும். உடலிலுள்ள பித்தமும் விலகும்

5 /10

இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த தனியா நீர் பெரிதளவு உதவும்.  ரத்தத்திலிருந்து சர்க்கரையை நீக்க உதவும் நொதி செயல்பாடுகளை இந்த மல்லி விதைகள் ஊக்குவிக்கின்றன. அதனால், 10 கிராம் அளவு மல்லி விதைகளை இரவு நீரில் ஊறவைத்து, காலையில் அந்த தண்ணீரை குடித்து வருவதால் நீரிழிவு கட்டுக்குள் வரும். ஆனாலும், டாக்டர்களின் ஆலோசனையை பெற்றே இதனை செய்ய வேண்டும்.

6 /10

வெயிட்லாஸ் பானம்: உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு பேருதவி புரிகிறது இந்த கொத்தமல்லி விதைகள். காரணம், கெட்ட கொழுப்பை குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிக்க செய்யும் திறன் இந்த விதைகளுக்கு உள்ளது. வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் திறன் தனியாவிற்கு உள்ளதால், உடல் பருமன் குறையும்.

7 /10

உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு தனியா விதைகள் வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். இந்த விதையில், நார்ச்சத்தும், பொட்டாசியமும் உள்ளதால், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த செய்கிறது.. இதை சாப்பிடுவதன் மூலம் இதயம் தொடர்பான ஆபத்தான நோய்களையும் குணப்படுத்தலாம்

8 /10

இளமை: ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் நிறைந்த தனியா நீர், சருமம் மற்றும் கூந்தல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அவசியம். இதனால் பல தீவிர நோய்களின் அபாயம் பெருமளவு குறைவதோடு, இளமையாக இருக்கவும் உதவுகிறது.

9 /10

எலும்பு ஆரோக்கியம்: கொத்தமல்லி விதையிலுள்ள தைமால் என்சைம் உடலில் கால்சியத்தை உறிஞ்சுவதை அதிகரிக்க உதவுகிறது, கொத்தமல்லி விதை என்று அழைக்கப்படும் தனியாவில் வைட்டமின் கே நிறைந்துள்ளதால் எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது. இதனால் ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்பு முறிதல் நோய் வராமல் தடுக்கப்படுவதோடு, எலும்பு முறிவு ஏற்படும் ஆபத்தையும் தடுக்கிறது.

10 /10

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.