டெங்குவின் அபாய அறிகுறிகள் இவைதான்: அலட்சியம் காட்டினால் ஆபத்து
Dengue: டெங்கு பரவும் இந்த வேளையில் இந்த நோய் பற்றிய சில முக்கியமான விவரங்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அறிகுறிகள், சிகிச்சை முறைகள், இதை சரி செய்வதற்கான உணவுகள் ஆகியவற்றை பற்றிய முழுமையான புரிதல் இருக்க வேண்டியது மிக அவசியமாகும்.
Dengue Symptoms: மழைக்காலம் மகிழ்ச்சியை கொண்டுவந்தாலும், இது தொற்றுகள் மற்றும் நோய்களுக்கான காலமாகவும் இருக்கின்றது. குறிப்பாக, ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில் டெங்கு பாதிப்பு அதன் உச்சத்தை தொடுகின்றது. இந்த ஆண்டும் அதற்கு விதிவிலக்கல்ல. நாட்டின் பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. பல இடங்களில் சுகாதாரத் துறை மீண்டும் உஷார் நிலையில் உள்ளது.
மழைக்காலத்தில் கொசுக்கள் வேகமாக உற்பத்தியாகின்றன. ஆகையால் இந்த காலத்தில் கொசுக்களால் உருவாகும் நோய்களால டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா போன்றவை அதிகரிக்கத் தொடங்குகின்றன. இவற்றில், டெங்கு தீவிர வடிவத்தை எடுக்கக்கூடிய ஒரு நோயாக உள்ளது. இதற்கு சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், உயிருக்கே இது ஆபத்தாக முடியலாம். ஆகையால், இதில் சிறிய அளவு கவனக்குறைவும் ஏற்படக்கூடாது.
டெங்கு பரவும் இந்த வேளையில் இந்த நோய் பற்றிய சில முக்கியமான விவரங்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அறிகுறிகள், சிகிச்சை முறைகள், இதை சரி செய்வதற்கான உணவுகள் ஆகியவற்றை பற்றிய முழுமையான புரிதல் இருக்க வேண்டியது மிக அவசியமாகும்.
டெங்கு காய்ச்சல் எப்படி ஏற்படுகின்றது?
டெங்கு காய்ச்சல், ஏடிஸ் கொசுவினால் பரவும் வைரசிஸ் மூலம் ஏற்படுகின்றது. இதற்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் உயிருக்கே ஆபத்தாகலாம். டெங்குவின் அறிகுறிகள் பொதுவாக ஒரு சாதாரண நோய்க்கான அறிகுறி போலவே இருக்கும். இதன் காரணமாக மக்கள் இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள அதிக வாய்ப்புகள் உள்ளன. ஆனால், இந்த அலட்சியம் உங்களை ஆபத்தான நிலைக்கு கொண்டு செல்லலாம். டெங்கு காய்ச்சலுக்கான முக்கிய அறிகுறிகளை பற்றி இங்கே காணலாம்.
டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள்
- அதிக காய்ச்சல்
- தசைகளில் வலி, மூட்டு வலி
- தீராத தலைவலி
- அதிக சோர்வு
- கண்களில் வலி
- வாந்தி சங்கடம், குமட்டல்
- சிவப்பு தடிப்புகள்
மேலும் படிக்க | வெறும் வயிற்றில் ‘இந்த’ உணவுகளை சாப்பிடவே கூடாது! என்னென்ன தெரியுமா?
டெங்குவால் உருவாகும் ஆபத்துகள்
- DHF எனப்படும் டெங்கு ரத்தக்கசிவு காய்ச்சல் , டெங்குவின் கடுமையான மற்றும் தீவிரமான வடிவமாக பார்க்கப்படுகின்றது. இதில் இரத்தப்போக்கு ஏற்படும். மேலும் இது இரத்த அழுத்தத்தில் வீழ்ச்சியை ஏற்படுத்தும். இது உயிருக்கும் ஆபத்தாகலாம்.
- DSS எனப்படும் டெங்கு ஷாக் சிண்ட்ரோம் DHF -இன் கடுமையான வடிவமாகும்.
- இதனால் முக்கிய உறுப்புகள் செயலிழக்கலாம்.
- இது மரணத்திற்கும் வழிவகுக்கும்.
டெங்கு: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
- கொசுக்கள் பரவுவதை தடுக்க முடிந்தவரை முயற்சிக்கவும்.
- கொசுவலை, கை, கால்களை முழுமையாக மூடும் ஆடைகள், கொசு விரட்டும் கிரீம்கள் ஆகியவற்றை பயன்படுத்தலாம்.
- வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
- தொட்டிகள், டயர்கள் உட்பட எதிலும் தண்ணீர் தேங்க அனுமதிக்காதீர்கள்
- ஆரோக்கியமான உணவை உட்கொள்ளவும்.
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும்.
- டெங்கு அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | ஆடி மாசம் வந்தாச்சு..கூழ் குடிப்பதால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ