Dengue in Pregnancy: நாடு முழுதும் டெங்கு காய்ச்சல் மிக அதிகமாக பரவி வருகின்றது. பல மாநிலங்களில் இது அதி தீவிர உருவை எடுத்துள்ளது. டெங்கு பாதிப்பு அதிகமாகி வருவதால், பல மருத்துவமனைகள் டெங்குவிற்கான படுக்கைகள், சிகிச்சை வசதிகள் ஆகியவற்றை அதிகப்படுத்தி தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெங்கு காய்ச்சல்


டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் என்ன? டெங்கு காய்ச்சல் வந்தால் எப்படி நம்மை பாதுகாத்துக்கொள்வது? இது வராமல் தடுப்பது எப்படி? இவற்றை பற்றிய புரிதல் அனைவருக்கும் இருக்கவேண்டியது மிக அவசியமாகும். டெங்கு என்பது கொசுக்களால் பரவும் நோய். இது ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில் அதிகமாக பரவுகிறது. இந்த ஆண்டும் இந்தியாவில் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இது அனவரையும் தாக்குகிறது. குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் இதனால் பாதிக்கப்பட்டால், அது தாயை மட்டுமல்லாமல் அவர்கள் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் அபாயத்தை ஏற்படுத்துகின்றது. 


டெங்கு வைரஸ் (Dengue Virus) ஏடிஸ் கொசு கடிப்பதால் பரவுகிறது. கர்ப்ப காலத்தில், பெண்களின் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக இருக்கின்றது. இதனால் கர்ப்பிணிப் பெண்கள் எளிதாக பாதிக்கப்படுகிறார்கள். 


மேலும் படிக்க | கெட்ட கொழுப்பை விரட்டி அடிக்க, இந்த ஆரோக்கியமான உணவுகள் உதவும்


கர்ப்பிணிப் பெண்களில் காணப்படும் டெங்கு அறிகுறிகள்:


- அதிக காய்ச்சல் (104°F வரை செல்லக்கூடும்)
- கடுமையான தலைவலி
- தசைகளில் வலி, மூட்டு வலி
- அதிக சோர்வு
- கண் வலி
- குமட்டல் மற்றும் வாந்தி
- பசியின்மை
- தோலில் தடிப்புகள்
- மூக்கு அல்லது ஈறுகளில் இரத்தப்போக்கு


கர்ப்ப காலத்தில் டெங்கு வைரசால் ஏற்படும் ஆபத்துகள் என்ன?


- கர்ப்ப காலத்தில் டெங்குவால் பாதிக்கப்படுவதால், கருக்கலைப்பு அபாயம் அதிகரிக்கிறது.


- சில பெண்களுக்கு குறிப்பிட்ட தேதிக்கு முன்னரே குழந்தை பிறக்கக்கூடும். 


- டெங்குவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பிறக்கும்போது குறைந்த எடையுடன் பிறக்கலாம்.


- டெங்கு காய்ச்சல் கடுமையாக இருந்தால், அந்த சந்தர்ப்பங்களில், குழந்தைகளுக்கு பிறப்பு குறைபாடுகள் ஏற்படக்கூடும். 


கர்ப்ப காலத்தில் டெங்கு பாதிப்பை தடுப்பதற்கான வழிகள்:


- கர்ப்பிணிப் பெண்கள் இரவில் தூங்கும்போது கண்டிப்பாக கொசுவலையை பயன்படுத்த வேண்டும்.


- கை, கால்களை முழுமையாக மூடும் ஆடைகளை அணிய வேண்டும்.


- கொசுக்களை விரட்டும் கிரீம் பயன்படுத்தலாம். 


- சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு அடிக்கடி கைகளை கழுவவும்.


- சத்தான மற்றும் சமச்சீர் உணவை உட்கொள்ள வேண்டும். 


- ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும். 


- அதிக அளவில் தண்ணீர் மற்றும் திரவங்களை குடிப்பது நல்லது.


- போதுமான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்.


- சீரான இடைவெளியில் மருத்துவரை சந்தித்து, பரிசோதனை செய்ய வேண்டும்.


- ஏதேனும் நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக சிகிச்சை பெற வேண்டும். 


கர்ப்ப காலத்திற்கான டெங்கு சிகிச்சை


- டெங்கு காய்ச்சல் மற்றும் வலிக்கு மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை தவறாமல் எடுத்துக் கொள்வது மிக அவசியம். 


- போதுமான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்.


- நீர் பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள போதுமான தண்ணீர் மற்றும் திரவங்களை உட்கொள்ள வேண்டும்.


மேலும் படிக்க | வாழைப்பழ தோலை சாப்பிடலாமா? கூடாதா? பதில் இதோ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ