வாழைப்பழ தோலை சாப்பிடலாமா? கூடாதா? பதில் இதோ!

Banana Peel : பலருக்கு வாழைப்பழ தோலை சாப்பிடலாமா கூடாதா என்ற கேள்வி இருக்கும். இது குறித்து விரிவாக இங்கு பார்ப்போம்.   

Written by - Yuvashree | Last Updated : Jul 17, 2024, 05:45 PM IST
  • நாம் வாழைப்பழ தோலை சாப்பிடலாமா?
  • சாப்பிட்டால் என்ன நடக்கும்?
  • அப்படி சாப்பிட வேண்டும் என்றால், எப்படி சாப்பிட வேண்டும்?
வாழைப்பழ தோலை சாப்பிடலாமா? கூடாதா? பதில் இதோ!  title=

Banana Peel : எந்த இயற்கை உணவு பொருட்களை எடுத்துக்கொண்டாலும், அதை மறு உருவாக்கம் செய்ய, உரமாக மாற்ற பல்வேறு வழிகள் இருக்கின்றன. அப்படி, அடி முதல் வேர் வரை, பூ முதல் தார் வரை அனைத்து பாகங்களும் பயன்படும் ஒரே மரம், வாழைமரம். இதிலிருந்து வரும் வாழைப்பழத்தை அதிகம் உற்பத்தி செய்யும், ஏற்றுமதி செய்யும் இடத்தில் இருக்கிறது இந்தியா. நமது இல்லங்களில் குறைந்தது யாரேனும் ஒருவர், இரவில் வாழைப்பழம் சாப்பிடுபவராக இருப்பர். சரி, வாழைப்பழத்தை ஏன் நாம் தோலுரித்து சாப்பிடுகிறோம்? இதை தோலுடன் சாப்பிட்டால் என்ன நடக்கும்? என எப்போதாவது யோசித்ததுண்டா? இங்கு அது குறித்து பார்ப்போம்.

வாழைப்பழ தோலை ஏன் உரித்து விட்டு சாப்பிட வேண்டும்?

பலர், வாழைப்பழ தோலை அசால்டாக சாப்பிடுவர். ஆனால், இதில் பல்வேறு ஆபத்து நிறைந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து பேசும் மருத்துவர்களும், மருத்துவ ஆராய்ச்சிகளும், வாழைப்பழ தோல்களில் கண்களுக்கு தெரியாத அழுக்கும், நோய் பரப்பும் பாக்டீரியாக்களும் இருக்கலாம் என கூறுகின்றனர். மேலும், வாழைப்பழத்தை விளைவிக்கையில் அதன் விவசாயிகள் பயன்படுத்தும் உரங்கள் மனிதர்களின் உடல் நலனுக்கு கேடு விளைவிப்பதாக இருக்கலாம். எனவே, இதை சாப்பிடுவதற்கு முன்பு ஒரு முறைக்கு பல முறை யோசிக்க வேண்டியது அவசியமாகும்.

வாழைப்பழ தோலை எப்படி சாப்பிடலாம்?

வாழைப்பழ தோலை, சுத்தமான முறையிலும் வெவ்வேறு வகையிலும் சாப்பிடலாம். அவை என்னென்ன வகைகள் தெரியுமா?

>முதலில் சரியான, அடி வாங்காத வாழைப்பழங்களை தேர்வு செய்ய வேண்டும். பழுத்த பழங்கள்தான் சாப்பிடுவதற்கு சுவையாகவும் உரிப்பதற்கு எளிதாகவும் இருக்கும்.

>உரித்தவுடன் அந்த தோல்களை நல்ல தண்ணீரில் நனைத்து கழுவ வேண்டும். இரு முனைகளையும் கத்திரித்து வெட்ட வேண்டும். 

>வாழைப்பழ தோல்களை வைத்து, ஸ்மூடி மற்றும் கெட்டியான பழச்சாறுகளில் கலந்து சாப்பிடலாம். 

>வாழைப்பழ தோலை வைத்து டீயும் செய்யலாம். இதை காயவைத்து, பொடி செய்து, அதனுடன் சிறிது தேன், இலவங்கப்பட்டை, ஏலக்காய் சேர்த்து தேனீரில் கலந்து குடிக்கலாம். 

மேலும் படிக்க | வாழைப்பழத்துடன் கூட்டணி சேராத சில உணவுகள்.. ‘இவற்றை’ தவிர்க்கவும்!

வாழைப்பழத்தின் நன்மைகள்:

>வாழைப்பழம் செரிமான கோளாறை சரி செய்யும் ஒரு அற்புதமான உணவு பொருளாகும். இதில் இருக்கும் ஃபைபர் சத்துகள், உடலில் கொலஸ்ட்ராலின் அளவை கட்டுப்படுத்தி, ரத்த சர்க்கரை அளவையும் குறைக்கும். மேலும், செரிமானம் ஆகாமல் இருக்கும் உணவுகளை சரிசெய்யவும், அஜீரண கோளாறை தவிர்க்கவும் உதவுகிறது வாழைப்பழம். 

>இருதய ஆரோக்கியம்: இதய ஆரோக்கியத்திற்கு உகந்த பழமாக கருதப்படுகிறது, வாழைப்பழம். இதில் இருக்கும் பொட்டாசியம் மற்றும் எலட்ரோலைட் சத்துகள், நம் இதயத்தை ஆரோக்கியமாக பாதுகாக்க உதவும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

>எலும்புகளுக்கு வலு:எலும்புக்கு வலு சேர்க்க உதவும் முக்கிய பழங்களுள் ஒன்று, வாழைப்பழம். இதில் இருக்கும் ப்ரீ-பயோடிக் சத்துகள் எலும்புகள் தேய்மானம் ஆகாமல், நல்ல நிலையில் இருக்க உதவுமாம். 

>உடற்பயிற்சிக்கு பிறகு : ஜிம் அல்லது வீட்டிலேயே உடற்பயிற்சி செய்பவர்கள், கண்டிப்பாக தினமும் பயிற்சிக்கு பின்னர் வாழைப்பழத்தை சாப்பிடலாம். இதில் ஸ்டார்ச் சத்துகள் இருப்பதால், வயிறை பசி எடுக்க செய்யாமல் முழுமையுடன் உணர வைக்கிறது. இதனால், பசியினால் அதிகம் சாப்பிடுவதையும் தவிர்க்கலாம். 

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | எடை இழப்பு முதல் நீரிழிவு வரை....வாழைப்பழத்தில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News