Symptoms of Liver Damage: கல்லீரல் உடலின் ஒரு முக்கிய அங்கமாக உள்ளது. எனினும், பலர் இதன் ஆரோக்கியத்தில் அதிக கவனம் எடுத்துக்கொள்வதில்லை. கல்லீரலில் ஏதேனும் பிரச்சனை ஏற்படும்வரை, அதன் முக்கியத்துவம் நமக்கு புரிவதில்லை. கல்லீரல் உடலில் 500 க்கும் மேற்பட்ட செயல்பாடுகளை செய்கிறது. நச்சுகளை வடிகட்டுதல், இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துதல் மற்றும் புரதங்களை உருவாக்குதல் ஆகியவை இதில் அடங்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்றைய ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறை காரணமாக கல்லீரல் பாதிப்படைவதற்கான சாத்தியக்கூறுகள் இன்னும் அதிகமாகின்றன. தொடர்ச்சியாக ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வது, சில நோய்களால் பாதிக்கப்படுவது, அதிக அளவு மருந்துகளை உட்கொள்வது ஆகியவற்றின் காரணமாக, கல்லீரல் வேகமாக பாதிக்கப்படுகின்றது. கல்லீரல் பாதிப்பின் ஆரம்ப அறிகுறிகளை அடையாளம் காண்பது கடினமாகும். எனினும், கல்லிரலின் நிலை மோசமாகும் போது, உடலில் சில மாற்றங்கள் ஏற்படத் தொடங்குகின்றன, இந்த அறிகுறிகள் பற்றிய புரிதல் இருந்தால், கல்லீரலின் நிலையை எளிதாகக் கண்டறிய முடியும்.


கல்லீரல் பாதிக்கப்பட்டால் நம் உடலில் காணப்படும் 5 ஆரம்ப அறிகுறிகள்


சோர்வு (Fatigue)


ஓய்வு எடுத்த பின்னரும் சரியாகாத அதிகப்படியான சோர்வு கல்லீரல் பாதிப்பின் அறிகுறியாக இருக்கலாம். சேதமடைந்த கல்லீரல் உடலுக்கு ஆற்றலை வழங்க போதுமான புரதம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்களை உற்பத்தி செய்ய முடியாததால் இது நிகழ்கிறது.


பசியிழப்பு (Loss of Appetite)


நீங்கள் ஆரோக்கியமாக சாப்பிட்டாலும் எடை குறைவது பாதிப்படைந்த கல்லீரலின் அறிகுறியாக இருக்கலாம். எடை இழப்பு மற்றும் பசியின்மை கல்லீரல் பிரச்சனையின் முக்கிய அறிகுறிகளாக பார்க்கப்படுகின்றன. சேதமடைந்த கல்லீரலால் உணவில் இருந்து ஊட்டச்சத்துக்களை சரியாக உறிஞ்ச முடியாது என்பதால் இது நிகழ்கிறது.


மேலும் படிக்க | பகத் பாசிலுக்கு ADHD பாதிப்பு... எதனால் இந்த அரிய வகை பாதிப்பு ஏற்படுகிறது - அறிகுறிகள் என்ன?


வயிற்று வலி (Stomach Pain)


வயிற்றின் மேல் வலது பகுதியில் வலி அல்லது அசௌகரியம் ஏற்படுவது கல்லீரல் பாதிப்பின் அறிகுறியாக இருக்கலாம். இந்த வலி லேசான வலியாகவும் இருக்கலாம், அல்லது தீவிர வலியாகவும் இருக்கலாம். மேலும் சில நேரங்களில் இந்த வலி தோள்பட்டைக்கும் பரவுகிறது.


அதிக இரத்தப்போக்கு (Bleeding)


கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடுமையான மற்றும் அவ்வப்போது காயங்கள் ஏற்படுவது மற்றும் அதிக இரத்தப்போக்கு ஆகியவை ஏற்படும் அபாயம் உள்ளது. ஏனென்றால், இந்த பிரச்சனை இருந்தால், கல்லீரல் இரத்தம் உறைவதற்கு உதவும் புரதங்களை உற்பத்தி செய்வதை நிறுத்துகிறது. 


தோல் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாதல் (Yellowish Skin Eyes)


உங்கள் தோல் மற்றும் உங்கள் கண்களின் வெள்ளை நிற இடங்கள் மஞ்சள் நிறமாக மாற ஆரம்பித்தால், அதை கல்லீரல் பாதிப்பின் முக்கிய அறிகுறியாக கருத வேண்டும். இரத்தத்தில் பிலிரூபின் என்ற பொருளின் அளவு அதிகரிக்கும் போது இது நிகழ்கிறது.


(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | சுகர் லெவலை சூப்பரா கட்டுப்படுத்தும் சூப்பர் உணவுகள்: நோட் பண்ணுங்க மக்களே


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ