பகத் பாசிலுக்கு ADHD பாதிப்பு... எதனால் இந்த அரிய வகை பாதிப்பு ஏற்படுகிறது - அறிகுறிகள் என்ன?

ADHD: நடிகர் பகத் பாசில் பாதிக்கப்பட்டுள்ள ADHD குறைபாடு என்றால் என்ன, அதன் அறிகுறிகள் என்ன, அதற்கான சிகிச்சை என்ன ஆகியவை குறித்த மருத்துவ ரீதியிலான தகவல்களை விரிவாக இங்கு காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : May 28, 2024, 03:54 PM IST
  • பகத் பாசிலுக்கு வயது 41 ஆகும்.
  • ADHD ஒரு நோய் அல்ல.
  • ADHD நரம்பியல் வளர்ச்சி கோளாறாகும்.
பகத் பாசிலுக்கு ADHD பாதிப்பு... எதனால் இந்த அரிய வகை பாதிப்பு ஏற்படுகிறது - அறிகுறிகள் என்ன? title=

ADHD Explained In Tamil: நடிகர் பகத் பாசிலையும், அவரது அசத்தலான நடிப்பாற்றலையும் பிடிக்காதவர்கள், ரசிக்காதவர்களும் இருக்கவே முடியாது. தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் நடித்தாலும் இந்தியாவும் முழுவதும் ரசிகர்கள் கொண்ட மிக பிரபலமான நடிகராக பகத் பாசில் வலம் வந்துகொண்டிருக்கிறார். 

நடிகர் பகத் பாசில் சமீபத்தில் நடைபெற்ற சிறப்பு குழந்தைகளுக்கான பள்ளி விழாவில் பேசியபோது,"இந்த பள்ளி வளாகத்தில் வந்துகொண்டிருக்கும்போது, சிலரிடம் ADHD குறைபாட்டை குணப்படுத்த முடியுமா என விசாரித்தேன். சிறுவயதிலேயே அந்த குறைபாட்டை கவனித்தால குணப்படுத்த முடியும் என்றார்கள். 
அப்போது 41 வயதில் கண்டுபிடித்தால் குணப்படுத்த இயலுமா என்ற நான் கேட்டேன். அந்த வயதில்தான் நான் ADHD குறைபாட்டுக்கு மருத்துவ ரீதியாக சிகிச்சை மேற்கொண்டேன்" என்றார். பகத் பாசிலுக்கு தற்போது 41 வயதாகிறது. அதன்மூலம் சமீபத்தில்தான் அவருக்கு இந்த குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. 

நோய் அல்ல நரம்பியல் குறைபாடு...

அந்த இந்த ADHD என்றால் என்ன?, அதன் அறிகுறிகள் என்ன?, அதற்கான சிகிச்சை என்ன?, இந்த குறைபாடு குறித்து அச்சப்பட வேண்டுமா ஆகியவை குறித்து இதில் சற்று விரிவாக காணலாம். முதலில் ADHD என்றால் நோய் அல்ல, அது நரம்பியல் வளர்ச்சி கோளாறுதான் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். முதலில் குறைப்பாட்டுக்கான அறிகுறிகள் இரண்டு வகை எனப்படும் எனலாம். ஒன்று கவனக்குறைவுகள் மற்றும் மற்றொன்று ஹைபர் ஆக்டிவாக இருப்பது. அவற்றில் உதாரணங்களை இங்கு காணலாம்.

மேலும் படிக்க | தினமும் இந்த அளவிற்கு சர்க்கரை சாப்பிட்டால்... சுகர் அதிகரிக்காது - ஹேப்பியா சாப்பிடலாம்!

அறிகுறிகள்... 

ADHD குறைபாட்டை கண்டறிய இந்த கவனக்குறைவுகளை முக்கிய அறிகுறியாகும்.  வேலையிலோ அல்லது விளையாட்டு சார்ந்த நடவடிக்கையிலோ கவனம் செலுத்த இயலாமல் சிரமப்படுவது; பள்ளிகளில் கொடுக்கப்படும் ஹோம் வோர்க் அல்லது பிற அசைண்மண்ட்களில் அடிக்கடி கவனக்குறைவான தவறுகள் நடப்பது; வேலைகளையும் மற்றும் செயல்பாடுகளையும் ஒழுங்கமைப்பதில் சிரமப்படுவது; தொடர்ச்சியான மன ஈடுபாடு தேவைப்படும் பணிகளைத் தவிர்ப்பது அல்லது விரும்பாதது; வேலைகளை தேவையானவற்றை அடிக்கடி தொலைப்பது - அதாவது பென்சில், பேனா, வாட்டர் பாட்டில் போன்றவற்றை; வெளிப்புறங்களில் நடக்கும் விஷயங்களால் எளிதில் கவனச்சிதறல் அடைவது; அன்றாட நடவடிக்கைகளை மறப்பது ஆகியவற்றை கூறலாம். 

அதிலேயே ஹைப்பர் ஆக்டிவ் செயல்பாடுகளும் ADHD குறைபாட்டின் அறிகுறிதான். கை, கால்களை அசைத்துக்கொண்டே இருப்பது; ஒரு இடத்தில் உட்கார முடியாமல் அங்குங்கு ஓடுவது; பொருத்தமற்ற சூழ்நிலைகளில் ஓடுவது; அமைதியாக விளையாடவோ அல்லது செயல்களில் ஈடுபடவோ இயலாதது; அதிகமாக பேசுவது; கேள்விகள் முடிவதற்குள் அடுத்தடுத்து பதிலப்பது; மற்றவர்களின் உரையாடல்களில் குறுக்கிடுவது ஆகியவற்றை கூறலாம். இந்த அறிகுறிகள் அனைத்தும் மருத்துவ நிபுணர்கள், பாதிக்கப்பட்டவர்களின் காணப்பட்ட பொதுவான நடவடிக்கைகளை வைத்து இந்த பட்டியலை அளித்துள்ளனர் எனலாம். இந்த அறிகுறிகள் 6 மாத காலத்திற்கோ அல்லது தொடர்ச்சியாகவோ நடக்கும்பட்சத்தில் நீங்கள் மருத்துவ ஆலோசனையை பெறுவது சந்தேகத்தை தீர்க்கும். 

எதனால் வருகிறது?

எதனால் ADHD வருகிறது என்பது இதுவரை மருத்துவ ரீதியாக உறுதிசெய்யப்படவில்லை. இருப்பினும் இது மரபணு ரீதியாகவும், மூளை அமைப்பு மற்றும் செயல்பாடு ரீதியாகவும், சூழலியலில் தாக்கம் சார்ந்தும் ஏற்படலாம் என கூறப்படுகிறது. குறிப்பாக, குறைமாதத்தில் பிறப்பவர்கள், ADHD குறைப்பாட்டால் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களை கொண்டவர்கள், கரு இருந்தபோது மது மற்றும் புகையிலைக்கு வெளிப்பட்டவர்களுக்கு இந்த குறைபாடு உண்டாக்கலாம் என கூறப்படுகிறது. இதற்கு பல்வேறு ரீதியான சிகிச்சை அளிக்கப்படுகிறது. மருத்துவ ஆலோசனை, மருந்து மற்றும் கல்வி ரீதியிலா ஆதரவு ஆகியவை ADHD குறைப்பாட்டுக்கான சிகிச்சையில் குறிப்பிடத்தக்கது.

(பொறுப்பு துறப்பு: இதுகுறித்து தங்களுக்கு சந்தேகங்கள் இருந்தால் மருத்துவ ஆலோசனையை பெற வேண்டும். இதுசார்ந்த எவ்வித செயலுக்கும் Zee News பொறுப்பேற்காது)

மேலும் படிக்க | சுகர் லெவலை சூப்பரா கட்டுப்படுத்தும் சூப்பர் உணவுகள்: நோட் பண்ணுங்க மக்களே
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News