எலும்பு ஆரோக்கியத்தை ஆட்டிப்படைக்கும் உணவுகள் இவைதான்: அந்த பக்கமே போகாதீங்க
Health Tips: எலும்புகளை வலுவாக பார்த்துக்கொள்ள என்ன உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்பதை அறிந்திருப்பது மிக முக்கியமாகும். அதே போல், எலும்புகள் ஆரோக்கியமாக இருக்க நாம் உட்கொள்ளக்கூடாத சில உணவுகளும் உள்ளன.
Health Tips: எலும்புகள் நமது உடலில் முக்கிய அங்கம் வகிக்கின்றன. இவை இல்லாமல் நம் உடலால் சரியாக வேலை செய்ய முடியாது. எலும்புகள் நம் உடலைத் தாங்கி நிமிர்ந்து நிற்க உதவுகின்றன. நாம் வளரும் போது, எலும்புகளின் உருவாக்க செயல்முறையும் அதிகரிக்கிறது. ஆனால் வயது அதிகரிக்கும் போது இந்த செயல்முறை குறைகிறது. அதனால், வயது ஏற ஏற எலும்புகள் வலுவிழக்க ஆரம்பிக்கும். எலும்புகளை வலுப்படுத்த நமது உணவில் கவனம் செலுத்த வேண்டும்.
எலும்புகளை வலுவாக பார்த்துக்கொள்ள என்ன உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்பதை அறிந்திருப்பது மிக முக்கியமாகும். அதே போல், எலும்புகள் ஆரோக்கியமாக (Bone Health) இருக்க நாம் உட்கொள்ளக்கூடாத சில உணவுகளும் உள்ளன. அவற்றை பற்றியும் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். எலும்புகளை வலுவிழக்கச் செய்யும் சில விஷயங்களை பற்றி இங்கே காணலாம்.
எலும்புகள் வலுவாக இருக்க, இந்த உணவுகளை உட்கொள்வதை தவிர்க்கவும்
- குளிர்பானங்கள், ஜூஸ்கள் (Cool Drink), எனர்ஜி பானங்கள் போன்ற, சர்க்கரை அதிகம் உள்ள பானங்கள் எலும்புகளை (Bones) வலுவிழக்கச் செய்கின்றன. இந்த பானங்களில் காஃபின் மற்றும் பாஸ்போரிக் அமிலமும் உள்ளது.
- ஜங்க் ஃபுட்களில் (Junk Food) கலோரிகள், கொழுப்பு மற்றும் சோடியம் அதிகமாக உள்ளது. ஆனால் இவற்றில் ஊட்டச்சத்துக்கள் இல்லை. நொறுக்குத் தீனிகளை உட்கொள்வதால், எலும்புகளை வலுவாக்க தேவையான சத்துக்கள் கிடைக்காமல் போகிறது.
- மது அருந்துவதும் எலும்புகளை சேதப்படுத்தும். மதுபானம் (Alcohol) உட்கொள்வது எலும்புகளில் இருந்து கால்சியம் உறிஞ்சப்படுவதைக் குறைக்கிறது.
- சோடாவில் (Soda) காஃபின் மற்றும் பாஸ்போரிக் அமிலம் உள்ளது. இந்த இரண்டு காரணிகளும் எலும்புகளில் இருந்து கால்சியத்தை அகற்றும். இது எலும்புகளை வலுவிழக்கச் செய்யும்.
- காஃபின் ஒரு டையூரிடிக், அதாவது உடலில் இருந்து தண்ணீரை வெளியேற்றும் கூறாகும். இது எலும்புகளில் கால்சியம் அளவு குறைவதற்கு வழிவகுக்கும்.
மேலும் படிக்க | ஊட்டசத்துக்களின் ‘பவர் ஹவுஸ்’ எனப்படும் ஆப்பிளை தினமும் சாப்பிடுங்க..!!
எலும்புகளை வலுவடையச் செய்யும் சில சுவையான மற்றும் சத்தான உணவுகளைப் பற்றி இங்கே காணலாம்:
- தினமும் 50 கிராம் கீரை சாறுடன் கேரட் சாறு கிளஸ் குடிக்கலாம். இதில் தோராயமாக 300 மி.கி கால்சியம் உள்ளது மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிரம்பியுள்ளது. இது சருமத்தில் நன்மை பயக்கும்.
- ராஜ்மா, கொண்டைக்கடலை போன்ற முழு பருப்பு வகைகளிலும், 100 கிராமில் 200 முதல் 250 கிராம் வரை கால்சியம் உள்ளது.
- தினமும் 2-3 தேக்கரண்டி வெள்ளை மற்றும் கருப்பு எள் சாப்பிடுவது எலும்புகளுக்கு நல்லது.
- கீரை, கோஸ், ப்ரோக்கோலி போன்ற பச்சை இலை காய்கறிகளில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் இரும்புச்சத்து இருப்பதால் எலும்புகளுக்கு இவை மிகவும் நல்லது.
- போதுமான புரதங்களை உட்கொள்வதும் அவசியம். உலர் பழங்கள், முட்டை, பருப்பு வகைகள் மற்றும் கொட்டை வகைகள் புரதச்சத்து நிறைந்தவை.
- சிட்ரஸ் நிறைந்த உணவுகள் உங்கள் டயட்டின் ஒரு பகுதியாக இருக்க வேண்டிய மற்றொரு முக்கிய அம்சமாகும். பெர்ரி, ஆரஞ்சு திராட்சைகளில் வைட்டமின் சி நிறைந்துள்ளது.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | எடை இழப்பு, நீரிழிவு.... மினி பட்டாணியில் இருக்கும் மெகா ஆரோக்கிய நன்மைகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ