Health Benefits Of Consuming Honey In Empty Stomach : இயற்கை அன்னையின் இயற்கையான இனிப்புகளுள் ஒன்று, தேன். மலைத்தேன், பாட்டில் தேன், பாட்டில் தேனிலேயே விதவிதமான வகைகள் என பல இருந்த போதும், தேனிற்கென்று பல்வேறு தனித்துவ மருத்துவ குணங்கள் பல இருக்கின்றன. இதை, பலர் வெந்நீரில் கலந்து வெதுவெதுப்பாக குடிப்பர். உடல் எடையை குறைக்க, மெட்டபாலிசத்தை அதிகரிக்க என பல்வேறு நன்மைகளுக்காக உபயோகிக்கப்படுகிறது தேன். இதை சாப்பிடுவதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் ஏற்படும்? முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சர்க்கரை நோயாளிகளுக்கு...


தேனை வைத்து நடத்தப்பட்டிருக்கும் ஆராய்ச்சிகளில் இது, சர்க்கரை நோயாளிகளுக்கு நண்பனாக இருப்பதாக கூறப்படுகிறது. இதில் இருக்கு ப்ளாஸ்மா க்ளூகொஸின் அளவு, நீரிழிவு நோய் பாதிப்பினால் அவதிப்படுவோரை பாதிக்காமல் இருக்கும் என கூறப்படுகிறது. அது மட்டுமன்றி, தேனில் இருக்கும் புரதங்கள், ரத்த அழுத்தம் சார்ந்த பாதிப்புகளையும் கட்டுப்படுத்துமாம்.


இருதய நோய்:


தேனில் இருக்கும் ஆன்ட்டி ஆக்சிடென்ட்ஸ், இதயம் சம்பந்தமான நோய் பாதிப்புகள் இருந்து எனக்கு உதவுகிறது. இருதய செயல்பாடு இழப்பு, ரத்த உறைவு போன்ற பாதிப்புகளை இது தடுக்கிறது. 


ஆஸ்துமா: 


இந்திய கலாச்சாரத்தின் பலர் ஆஸ்துமா உள்ளிட்ட மூச்சு சம்பந்தமான நோய் பாதிப்புகளை தீர்க்க தேன் உபயோகிப்பதாக கூறப்படுகிறது. சளி, இருமல், காய்ச்சல் போன்றவற்றை சரி செய்ய தேனை சில மூலிகைகளுடன் கலந்து சிலர் குடிக்கின்றனர். 


காயங்களை குணப்படுத்த…
தேனை சிலர் காயங்களை குணப்படுத்தவும் உபயோகிக்கின்றனர். காயத்தினால் ஏற்படும் தொற்றுகள் மற்றும் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறைவை தேர்ந்தெடுப்பதாக கூறப்படுகிறது. மேலும் காயத்தினால் ஏற்படும் திசுக்கள் உடைவதையும் இது சரி செய்வதாக சில மருத்துவ ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. 


மேலும் படிக்க | தேன் தரும் தித்திக்கும் நன்மைகள்.. அடடே அசத்தல் பயன்களே


குழந்தைகளுக்கு பயன்..


தேன் சாப்பிடுவது பெரியோர்களுக்கு மட்டுமல்ல குழந்தைகளுக்கும் பெரும் பயன் அளிப்பதாக கூறப்படுகிறது. சிறுவயதிலேயே அதிக விலையுடன் இருக்கும் குழந்தைகள் காலையில் வெறும் வயிற்றில் சுடு தண்ணீரில் தேன் கலந்து சாப்பிட்டால் கொழுப்பு குறையும் என்று கூறப்படுகிறது. மேலும் அவர்களின் உடலுக்கு தேவையான கால்சிய சத்துக்களையும் தேன் அளிக்கிறதாம். ஒரு சில குழந்தைகள் மலச்சிக்கல் மற்றும் வயிறு உப்பசம் ஆகிய பாதிப்புகளில் இருந்து பாதுகாக்க தேன் சாப்பிடலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். 


செரிமான பிரச்சனைகளை நீக்கும்: 


தினமும் வெறும் வயிற்றில் காலையில் தேன் குடிப்பதால் செரிமான கோளாறுகள் நீங்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இதில் இருக்கும் இயற்கை சர்க்கரை, நாம் சாப்பிடும் உணவுகள் சீக்கிரம் செரிமானமாக உதவுகிறது. அது மட்டுமின்றி வயிற்றில் இருக்கும் கெட்ட பாக்டீரியாக்களை வளரவிடாமல் தடுப்பதற்கும் குடல் ஆரோக்கியம் மேம்படுவதற்கும் இது உதவுகிறது.


(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | தேன்: நன்மைகள் மற்றும் ஊட்டச்சத்து உண்மைகளைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ